Bluepadநேர்முகத்தேர்வுகள் பற்றிய சில பயனுள்ள குறிப்புகள்
Bluepad

நேர்முகத்தேர்வுகள் பற்றிய சில பயனுள்ள குறிப்புகள்

A
Arvind Kumar
15th May, 2020

Share





பதற்றம் வேண்டாம் :
நேர்முக தேர்வை சுதப்புவதே அதீத பதற்றம் தான் . பதறாத காரியம் சிதறாது என்பது சான்றோர் வாக்கு . பதற்றம் பல விஷயங்களை பாதிக்கும் . உதாரணமாக தெரிஞ்ச விஷயங்களை சொல்ல விடாது ,நம் திறமைகளை முழுவதும் வெளிப்படுத்த விடாது , நம்மை திறமை அற்றவராகவும் பயந்த சுபாவம் கொண்டவராகவும் சித்தரித்து விடும் .
எனவே பதற்றத்தை அடியோடு தவிர்க்க வேண்டும் . நேர்முக தேர்வுகள் நமது வாழ்வையே மாற்றும் வல்லமைக்கொண்டது . எனினும் அதை நாம் ஒரே அடியாக தலையில் ஏற்றிக் கொண்டால் ஒரே அடியாக பதறி விடுவோம் .தெளிந்த மனநிலை தான் நம்மை சமயோஜிதமாக செயல் பட வைக்கும் .எனவே பதற்றதை அடியோடு தவிர்க்க வேண்டும் .

சரியான முறையில் தயார் படுத்திக் கொள்ளுதல் :
ஒரு நேர்முகத் தேர்வு அமைவது என்பது இந்த கால கட்டத்தில் அவ்வளவு எளிது அல்ல . எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் . அலுப்பு, சோம்பல் பாராமல் முறையாக தயார் ஆக வேண்டும் . நாம் எந்த நிறுவனத்திற்கு தேர்வுக்கு செல்கிறோமோ அந்த நிறுவனத்தை பற்றி முடிந்த அளவு தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பு , தலைமை அலுவலகம், ,நிறுவனர்கள் , மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை , பங்குசந்தை மதிப்பு , சமீபத்தில் அந்த நிறுவனத்தை பற்றி வந்த செய்திகள் போன்றவற்றை குறிப்பு எடுத்து கொள்ளுதல் மிக்க அவசியம் .
நாம் எந்த வேலைக்காக தேர்வுக்கு செல்கிறோமோ அதை பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டம் தேவை . அந்த வேலைக்கு நாம் எப்படி பொருந்துவோம் என்பதை சரியான முறையில் நியாயப்படுத்த வேண்டும் . இத்தகைய தயாரிப்புகள் நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் .

நேரம் தவறாமை :
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் அது போல நம்மால் ஏற்படுத்தப்படும் முதல் பிம்பம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது . அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு 15 நிமிடமாவது முன்னாள் செல்வது மிக நல்ல பழக்கம் . அப்படி சென்றால் நாம் தேவை இன்றி பதற அவசியம் இல்லை . நிம்மதியாக காத்திருக்கலாம் .நாம் தான் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலே வந்துவிட்டோமே என்று அவசியம் அற்ற அரட்டைகளில் ஈடுபடுவது, செல்போன் நோண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் ,கவனம் சிதறாமல் காத்திருப்பது சாலச் சிறந்தது .

ஆள் பாதி ஆடை பாதி :
சிறந்த ஆடைகள் நமது தன்னமபிகையை அதிகரிக்கும் . நாம் எந்த நிறுவனத்திற்கு செல்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல” ட்ரெஸ் கோடுகளை” பின்னப்பற்ற வேண்டும். இன்று பல நிறுவனங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை . ஒரு சில நிறுவனங்களில் வெள்ளை அல்லது லைட் கலர் மேல்ச்சட்டை, கருப்பு நிற கால்ச்சட்டை , ஷூ போன்ற கட்டுப்பாடுகள் இருப்பாளர்களுக்கும் இருக்கும் . அதை அறிந்து கொண்டு நேர்த்தியாக உடை அணிந்து செல்லுதல் அவசியம் .

கவனம் தேவை :
பொதுவாக நேர்முறை தேர்வுகளில் அவர்கள் ஒன்று கேக்க நாம் வேறுஒன்று பதில் அளித்து விடுகிறோம் . அதற்கு கவனக் குறைவே காரணம் . ஒரு ஆர்வ கோளாறில் நாம் அளிக்கும் அத்தகைய தவறான பதில் கூட நம் நிராகரிப்பிற்கு காரணம் ஆகலாம் . எனவே அவர்கள் கேட்பதை கூர்ந்து கவனித்து பதில் அளிக்க வேண்டும். ஒரு வேலை அவர்கள் கேட்பது புரியா விட்டால் நாம் புரியவில்லை என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை .
அது போல தேர்வு அறையிலும் மிகுந்த கவனம் தேவை . நேர்முகத் தேர்வின் பொழுது அவர்கள் கூறுவதை கேட்டு விட்டு புரிந்தது போல ஓப்புக்கொண்டு விட்டு பிறகு வருந்துவதில் எந்த பயனும் இல்லை .
இந்த குறிப்புகளை பின்பற்றினாலே நேர்முகத் தேர்வுகளை எளிதாக சந்தித்து வெற்றி பெற முடியும் .

8 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad