Bluepadதொலைந்த உறவுகள்
Bluepad

தொலைந்த உறவுகள்

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
29th Jul, 2020

Share




உறவுகளை
தொலைத்தவர்களுக்கு
இரவுகள் ஏது?

இரவில் பகலும்
பகலில் இரவும்
கலந்திருக்கும்.

அவர்கள்
வாழ்வில்
தளர்வுகள் இல்லா
ஊரடங்கு
இருக்கும்.

தனித்திருப்பர்
இனித்திருக்க
மாட்டார்கள்.

விழித்திருப்பர்
விழிகள்
நனைந்திருக்கும்.

மறு
சோறிட
யாருமில்லை

அழைத்து
பேச
பேரிட
யாருமில்லை.

சரிந்து
சாய்கையில்
தரை
மட்டும்
தாங்கி
நிற்கும்.


மன
பாரத்தை
இறக்கி
வைக்க
மறு
மனம் இருக்காது
வாழ்வில்
மணமும்
இருக்காது.

தன்
இளமை
கால
நினைவுகள்
மெள்ளப்படும்.
தன்
மேனியில்
தன்
விரல்கள்
மட்டுமே
மெல்லப்படும்.

தள்ளாடி
நிற்கையில்
தடி
துணை
நிற்கும்.
தன்மேல்
விழ
ஒரு பிடி
மண்
காத்திருக்கும்.
-
- - - நெப்போலியன் விக்ரான்.





0 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad