Bluepad இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியுமா?
Bluepad

இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியுமா?

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
29th Nov, 2021

Share

பக்தனுக்கும் பகவானுக்கும் நடைபெறும் உரையாடல்
இதய கோப்பை நீரினால் என் தாகம் தணியவில்லையே!
என் இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியவில்லயே! என் தாபம் தீரவில்லையே!


வாழ்வில் இன்ப துன்பம் ,என்னும்
இருமை வந்ததே! மனம் இருளில் ஆழ்ந்ததே!

இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியவில்லை யே! என் தாபம் தீரவில்லையே!

காக்கும் என் காவலனே! காண்பரிய பேர் ஒளியே!
என் இதய தாபம் தீர்த்து வைப்பாய் சாயி! சத்ய சாயி!


திவ்ய ஆத்ம ரூபமே! என் அன்பே! நீ
சான்றோர் தம் மூதுரைஐ கேட்பாய் !
வழி செல்வாய்!

"அருள் நனிசுரக்கும் அமுதே காண்க" என திருவாசகம் சொன்னதே ! மணிவாசகர் சொன்னதே!

அதை வாழ்வில் கலந்து கடந்து சென்றால்
இனிமை வாய்க்குமே !

ஆனந்தம் ஆகுமே!

"சத் சித் ஆனந்தம்" ஆமே!

இதயக் கோப்பை நீரினால் உன் தாகம் தணிக்கலாம் !உன் தாபம் தீர்க்கலாம்!


நெஞ்சுளே நின்று அமுதம் ஊறி
தாகம் தீர்க்கும் சாயி !
பகலவனே சாயி!
ஒளி தருவாய் சாயி!

இதயக் கோப்பை நீரினால் என் தாகம் தணியுமா?
என் தா பம் தீருமா?

அன்பே! கேள் அன்பே!
அன்பே பார் அன்பே!
உன் இதயத்தை பார் அன்பே!
விடை தெரியும் அங்கே!

இதயக் கோப்பை நீரினால் உன் தாகம் தணிக்கலாம்! !உன் தாபம் தீர்க்கலாம்!



உடல் எனும் எந்திரம்!
இதயம் ஓர் தந்திரம்!
இறை நாமம் மந்திரம்!
சொல்ல ஆகும் சுதந்திரம்!

இதயம் என்னும் கோப்பை நீரால் என் தாகம் தணிந்தது
என் தாகம் தீர்ந்தது
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்
(1974 கோடை மழை அருளமுதம் பகவானின் உரைகளில்லிருந்து)


16 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad