Bluepad ஸ்ரீ சத்ய சாயி ஹிருதய வாணி
Bluepad

ஸ்ரீ சத்ய சாயி ஹிருதய வாணி

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
19th Jul, 2020

Share

பெற்றது கொண்டு பிழையே
பெருக்கிச் சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை விடுதி கண்டாய்
விடிலோ கெடு வேன்
மற்ற அடியேன் தன்னை தாங்குனர்
இல்லை என் வாழ் முதலே
உற்று அடியேன் மிகத் தேறி நின்றேன்
எனக்கு உள்ளவனே.-திருவாசகம்
(ராகம் சக்கரவாகம்)
சாயிசா சத்யா சாயிசா
உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் சாயிசா
எண்ணில் பிறவிகளாய் என்னை படைத்து காத்து நிற்கும்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் சாயிசா
சாயிசா சத்யசாயிசா
அருள் தந்துஅறிவுறுத்தி என்னை ஓர்ஆளாக்கி வளர்த்த எம் ஈசனே என் பிறவி நாசனே
உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் சாயிசா
சாயிசா சத்ய சாயிசா
பழ வினைஅறியேன் பரம்பொருள் உன்னை அறியேன்
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவபெருமானே
உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் சாயிசா
சாயிசா சத்ய சாயிசா
புறவுலக இச்சையில் சுகித்து இருக்கும்என்னை
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை ஆண்டாய்
உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் சாயிசா
சாயிசா சத்ய சாயிசா
மன்னித்தாய் என் தவற்றை மறந்தாய் என் குற்றம்
பக்தி தந்து உன் திருவடி பேரு உகந்தாய்
உன் இதயத்தில் இடம் தந்தாய்
எப்படி நான் நன்றி சொல்வேன் சாயிசா
சாயிசா சத்ய சாயிசா
சாயிசா ஜகதீசா சர்வேசா

14 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad