Bluepadஇதயம் ஒரு கோவில்-பாகம் 5
Bluepad

இதயம் ஒரு கோவில்-பாகம் 5
ஓம் கார தியானம்

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
29th Nov, 2021

Share

ஓங்காரம் பிந்து சம்யுக்தம்
நித்தியம் தியாயன்ந்தி யோகிநஹா
காமதம் மோக்ஷதம் ச்சைவ
ஓங்காராய நமோ நமஹ

 • யோகிகள் எப்பொழுதும் ஓங்காரத்தை தியானிக்க அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்துஓங்காரம் அவர்களை முக்திக்கு இட்டுச் செல்கிறது
 • ஓம்காரத்திற்கு மீண்டும் மீண்டும் வந்தனங்கள்
 • பகவான் பாபா அவர்கள் அனைத்து உயிரினங்களும் முதலில் நீரிலிருந்து தோன்றின என்றும் நீரை பயன்படுத்தி உருவாகிய தாவரங்களில் உணவைப் பெற்று மனித உடல் வளர்ந்தது என்றும் கூறுகிறார்
 • பேச்சு என்ற அருள் கலையை மனிதன் இறைவனிடமிருந்து பெற்றான்
 • அந்த இறைவனுக்கு நன்றி செலுத்த வாயார அவனை புகழ்ந்த மனிதன் மந்திரங்களை பயன்படுத்தினான் அதுவே ரிக்வேதம் ஆனது
 • ரிக் வேதத்தில் பயன்படும் அனைத்து கடவுளின் பெயர்களும் ஓங்காரத்தில் அடக்கம் ஓம்காரம் ஒலி வடிவமான கடவுளின் நாமம் ஆகும் ஓம்காரம் பரமாத்மாவை குறிக்கின்ற ஒலிவடிவம் அது கடவுளின் காஸ்மிக் வடிவமாகும்
 • ஓம் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது அங்கு எதிரொலிக்கிறது அந்த ஒலியே அனைத்தையும் படைக்கிறது
 • ஓம் என்பது ஒளிகளும் அதனால் குறிக்கப்படும் பொருள்களும் அடங்கிய பிரபஞ்சத்தின் முழு அடையாளமாகும்
 • 1. அ ,2 உ ,3. ம் ,4. நாதம், 5. விந்து=ஓம்
 • ஓம் என்பது மேற்காணும் ஐந்து பகுதிகள் கொண்டதாகும்
 • இது இறைவனின் ஐந்து தொழிலையும் குறிக்கக்கூடியது
 • இறைவனின் ஐந்து தொழில்களில் எந்தெந்த இடங்களில் பரவி உள்ளனவோ அந்தந்த இடங்களில் ஓம் என்பதும் பரவியுள்ளது
 • எனவே பிரபஞ்சம் முழுவதும் ஓம் பரவியுள்ளது
 • அதேபோல ஓம் என்றமொழியை உச்சரிக்கும் போது அது உடல் முழுவதும் பரவி நிற்கிறது
 • இவ்வாறு வெளி பிரபஞ்சத்திலும் உடலிலுள்ள பிரபஞ்சத்திலும் ஓம் ஆத்மா வடிவில் நிரம்பி உள்ளது
 • ஆத்மாவும் ஒலியும் எவ்வாறு ஒன்றாக நின்றதோ அதேபோல அனைத்து இடத்திலும் வியாபித்துள்ள பிரம்மமும் ஓம் என்ற ஒலியும் ஒன்றே
 • அ என்பது விழிப்புநிலை அதாவது பூதா காசம்
 • உ என்பது கனவு நிலை அதாவது சித்தா காசம்
 • ம் என்பது ஆழ் உறக்க நிலை அதாவது சிதாகாசம்
 • ஓம் என்ற பிரணவத்தை இதயத்தில் வைத்து தியானிக்கும் பொழுது மனதும் ஆத்மாவும் பிரம்மம் வரை சென்று ஐக்கியமாவது உணரலாம்
 • எதை பாவிக்கிறோம் அதுவாக மாறி விடுகிறோம்
 • ஓம்கார தியானத்தினால் நாம் பிரம்ம நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது
 • எனவே ஓம்காரத்தை சச்சிதானந்த பிரம்மம் என்றும் அழைக்கலாம்
 • ஹோமங்களில் விறகு கட்டைகளை தேய்த்து நெருப்பை ஏற்படுத்துவது போல நம் ஆத்மாவை ஒரு விரகு கட்டையாகவும் ஓம் மந்திரத்தை இன்னுமொரு விரகு கட்டையாகவும் தியானித்து உரசுவதால் பிரம்மத்தை காண முடியும் அல்லது உணர முடியும் என்று ஸ்வேதா ஸ்வதர உபநிஷத் சொல்கிறது.
 • நீரின் ஓட்டம் அலைகளின் ஓசை சங்குகளில் இருந்து வெளிக்கிளம்பும் ஓசை காற்றின் அசைவு ஆகிய எல்லாவற்றிலும் ஓங்காரம் நிறைந்துள்ளது
 • ஓம் இதி ஏகாக்ஷர பிரம்மா என உபநிஷத்துக்கள் உரைக்கின்றன.
 • ரிக் வேதத்தில் பயன்படும் அனைத்து கடவுளின் பெயர்களும் ஓங்காரத்தில் அடக்கம் ஓம்காரம் ஒலி வடிவமான கடவுளின் நாமம் ஆகும்


பிரணவமே உயர்ந்த உபதேசமாகும்
சிறு குழந்தைகள் நடக்க தொடங்கும் பொழுது மூன்று சக்கரம் உள்ள நடைவண்டி பயன்படுத்துவார்கள்

 • அ உ ம் என்ற 3 சொற்களே வண்டியின் சக்கரங்கள்
 • நாம் மூச்சு விடும் ஒவ்வொரு முறையும் சோ ஹம் என்று நம் மூச்சு ஒலிக்கிறது
 • இதன் பொருள் அவனே நீ
 • புற உலகத்தில் அனைத்துமாய் உள்ளவனே என்னுள் நீயாய் இருக்கின்றாய் என்பதே அதன் செய்தி
 • ஆழ்ந்த உறக்க நிலையில் அவனும் நீயும் ஒன்றாகி சோ ஹம் என்பது ஓம் என்ற நிலைக்கு மாறுகிறது
 • ஏழு வண்ணங்களால் ஆன சூரிய கிரணங்கள் ஒன்றிணைந்து வெண்மை நிற கதிராக மாறுவதைப் போல் சோ ஹம் மாக மாறுகிறது
 • பிரணவத்தை ஓதுவதன் மூலம் நீ பிரம்மன் ஆகிறாய் என்று முண்டக உபநிஷத் உரைக்கிறது
 • பிரணவம் என்ற வில்லின் மூலம் ஆத்மா என்ற அம்பினை பிரம்மம் என்ற லட்சியத்தை குறி வைக்க வேண்டும்
 • இந்நிலையில் குறியும் குறி வைப்பவனும் ஒன்றாகி விடுகிறார்கள்

 • ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
 • ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
 • ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பல பேதம்
 • ஓம் எனும் ஓங்காரத்து ஒண்முத்தி சித்தியே-திருமந்திரம்
 • பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கு எல்லாம்
 • வரம் தரும் மந்திரம் மாய்த்திட வாங்கி
 • திறந்திடு மந்திரம் சூழ் பகை போக
 • உரம் தரும் மந்திரம் ஓம் என்று எழுப் பே-திருமந்திரம்
 • ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
 • ஈர் எழுத்தாலே இசைந்து அங்கு இருவராய்
 • மூ எழுத்தாலே முளைக்கின்ற சோதியை
 • மா எழுத்தாலே மயக்கமே உற்றதே-திருமந்திரம்
 • போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகழ் ஞானத்தை
 • தேடுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி
 • சாற்றுகின்ற அறையோ சிவ யோகத்தை
 • ஏற்று கின்றேன் நம்பிரான் ஓரெழுத்து-திருமந்திரம்

10 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad