ஐவர்க்கு நாயகன் தலைமகன் உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
மெய்யர்க்கு பற்றுக் கொடுக்கும்
கொடாது போய்ப் பொய்யுரை துள்ளி விழுந்திடும் தானே-திருமந்திரம்
பிராணனை அடக்க வல்லார்க்கு மனம் என்னும் குதிரை அடங்கி நிற்கும் முறையற்ற பயிற்சி உடையவருக்கு மனம் அடங்காது அவரை மீறி சென்று விடும்
அதாவது அகண்டத்தைப் பற்றி நின்றார்க்கு பிராணன் வசப்படும் .கண்டத்தை( உலக நோக்கில் உள்ளோருக்கு) பற்றி நின்றார்க்கு பிராணன் கீழ் சென்றுவிடும்.
உன்னுடைய முயற்சி யை யோ அல்லது நேரத்தையோ இறைவனுக்கு வழங்கும் பொழுது நீ உன்னையே உயர்த்திக் கொள்கிறாய்.
இறை அருள் பெற்றோரின் ஆசி பெறுதல் என்பது அவருடைய பிராண சக்தியினை பெறுவது ஆகும்
பொதுவாக அனைத்து ஆலயங்களும் பிராண சக்தி மிகுந்து காணப்படும் இடங்கள் ஆகும்
எனவே கோவில் வழிபாடு என்பது பிராண சக்தியை பெறும் ஒரு வழிமுறையாகும்
அதேபோன்றே மகான்களின் தரிசனம் மற்றும் மகான்களின் ஜீவசமாதிகள் பிராண சக்தியை நமக்கு அளிக்க வல்லவை.
பிராணன் என்னும் காஸ்மிக் சக்தி
பிராணசக்தி ஓர் உந்து சக்தியாகும்
பிராணசக்தி பஞ்சமகா முகங்களில் இருந்து உருவாகிறது
அவற்றின் ஒருங்கிணைப்பு நிலை சீர்கேடு அடைந்தாள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படும் இதன் காரணமாக வியாதிகள் தோன்றுகின்றன
உடலில் பிராணவாயு உள்ளவரை இதயம் துடிக்கும் மூளை செயல்படும் நுரையீரல்கள் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து வெளியிட
பஞ்சப் புராணங்களில் ஏற்படும் சீர்கேடுகள் காம குரோத லோப மத மாச்சரியங்களை உடலிலும் மனதளவிலும் வெளியாகின்றன
நேர்மறை எண்ணங்களின் ஆல் மனிதனில் பிராண சக்தி அதிகரிக்கிறது
எதிர்மறை எண்ணங்களின் ஆல் பிராண சக்தியில் இழப்பு ஏற்படுகிறது
அன்பு நிஷ்காம்ய கர்மம் பஜன் தியானம் ஜெபம் சத்ய தர்ம சாந்தி பிரேமை அகிம்சை ஆகிய வாழ்வின் அடிப்படை கூறுகளை கடைபிடித்தல் ஆகியவற்றால் பிராண சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ளலாம்
மூக்கின் இரு ஓரங்களிலும் மூச்சுக்காற்று சமமாக சென்று வரும் பொழுது உடலில் பிராணசக்தி சீரான நிலையில் உள்ளது
இந்தநிலை இயற்கையிலேயே சந்தியா காலம் எனும் சொல்லப்படும் காலை வேளையிலும் மாலை வேளையிலும் அமைந்திருக்கிறது
நல்லதை செய் நல்லவனாக இரு நல்லதே பார் நல்லதே எண்ணுக இவையே மனிதன் கடவுளை அடையும் வழியாகும் என்று பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்கள் அருளியுள்ளார்கள்
பிராணன் எவ்விடத்திலும் எல்லா நேரங்களிலும் எப்பொழுதும் உள்ள பிரபஞ்ச சக்தியாகவும்
மனம் எங்கு செல்கிறதோ அங்கு பிராணன் செல்கிறது
துயரப்படும் அவர்களின் நீது பிராணனை செலுத்த அவர்களின் துயரம் தீர்க்கப்படும்
உன் இருதயத்தை நோக்கி பிராணன் செலுத்தப்பட அங்கு மேலும் மேலும் அன்பு நிறையும்
இதயத்தைத் திறந்து அதனைத் தூய்மைப் படுத்தி இறை தரிசனத்தை பெறலாம்
இதயத்தைத் திறப்பது என்பது பிறருக்கு அன்பை தருதல் ஆகும்
ஜெபம் செய்வதன் மூலம் நாம் பிராணனை இதயத்தை நோக்கி குவிக்க செய்யலாம்
மனம் என்னும் தூரிகையால் பிராணன் என்னும் வண்ணத்தை கொண்டு இதயத்தில் இறைவனின் பாவ சித்திரத்தை வரைந்து அதைத் தொடர் முயற்சியினால் உண்மை சித்திரமாக, உண்மை வடிவமாகவோ அல்லது சாட்சாத்கார சித்திரமாக மாற்ற இயலும்
பகவான் பாபா அவர்கள் சத்திய சாயி சேவா சமிதி நிறுவனங்களில் பஜனையை ஆதாரமான சாதனையாக வைத்துள்ளார்
பஜன் பாடும் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்காக மட்டும் பாடாமல் தாங்கள் பாடுவதை தங்களுக்கு உள்ளிருந்து கேட்கவேண்டும் என்றும் இறை அனுபவத்தில் அதிர்வுகளில் மூழ்கி அப்பாடலை பாட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்
இந்நிலையில் நாபி இதயம் தொண்டை நாக்கு ஆகிய நான்கும் ஒருங்கிணைந்து முழுமையான இறை அனுபவத்தை பாடுகின்ற பாடகர்கள் மற்றும் பாடலை கேட்பவர்களுக்கும் அளிக்கின்ற நிலையை ஸ்வாமி வர்ணிக்கிறார்
இவ்வாறு ஒருங்கிணைப்பு ஏற்படும் பொழுது ஒவ்வொரு உடைய மனதில் ஏற்படும் தீய எண்ணங்களும் உடல் ரீதியான குறைபாடுகளும் நீங்கி சுகமான இறை அனுபவத்தை பெற முடியும் என்கிறார் சுவாமி
மனதிற்கான பயிற்சி
பஜன் பயிற்சி போன்றே மனப்பயிற்சி இலும் மனதை இறைவனிடத்தில் கொண்டு சேர்க்க நாபி இலிருந்து புருவமத்தி வரை அதிர்வுகளை கொண்டு சேர்த்து நாம் மன தூய்மை அடைய முடியும் என்று உரைக்கின்றார் பாபா
இங்கு நாபியிலிருந்து எழுப்பப்படும் பிரணவ ஒலி இதயத்தில் பிராணநாக , தொண்டைப் பகுதியில் தூய்மையடைந்து, இறுதியில் புருவ மத்தியில் "பிரக்ஞாநம்" என்ற இறைநிலையை நமக்கு தருகிறது
தொடர்ந்து நாபியில் வைத்து பிரணவம் ஒலியை எழுப்ப அது தூய்மையான மனதை உருவாக்கி இறை நிலைக்கு இட்டுச்செல்லும் பயிற்சியாகும்
பகவான் பாபா அவர்கள் தன்னுடைய அருள் உரையில் நாபியில் வைத்து செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் நிச்சயம் பலன் அளித்தே தீரும் என்று அறுதியிட்டு கூறியுள்ளார்கள்