Bluepadசென்னையில் சொக்கவைக்கும் சில ஜவுளி கடைகள்!!
Bluepad

சென்னையில் சொக்கவைக்கும் சில ஜவுளி கடைகள்!!

V
Venkatesh Ramanan
30th Nov, 2021

Share

ஜவுளிகள் என்றாலே பெண்களுக்கு ஒரு அலாதி பிரியம். எடுப்பது ஒரு தடவையாக இருந்தாலும் கிட்டத்தட்ட அதை எடுப்பதற்குள் ஒரு நாளை ஈசியாக கடத்தி விடுவார்கள்.ஆனால் அப்படி அவர்கள் செலக்ட் செய்த புடவை இருக்கிறதே அது மிக அருமையான ஒரு விஷயமாக இருக்கும்!! அவர்கள் மனதிற்கும் அது பிடித்திருக்க வேண்டும், அவர்கள் பட்ஜெட்டுக்குள் அடங்க வேண்டும், நெடு நாட்கள் உழைக்கும் வர்க்கமாக இருக்க வேண்டும் , அத்தனை டெஸ்டுகளிலும் அந்த புடவை தேர வேண்டும் ! அப்படி இருந்தால் தான் எடுப்பார்கள்... இல்லையென்றால் கவலையே படாமல் அடுத்த கடைக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்...!

ஆர்.எம்.கே.வி :

ஆர்.எம்.கே.வி ஜவுளிக் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் மிக நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் தரம் மற்றும் கஸ்டமர் சப்போர்ட் தான். சென்னையிலேயே தியாகராய நகர் மற்றும் பாரம்பரியம் ஹால், பீனிக்ஸ் மால் போன்ற பெரிய பெரிய இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பெங்களூரு, மும்பை போன்ற பெரு நகரங்களிலும் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒரு தனி அங்கீகாரம் தான்.

இங்கு பட்டுப்புடவைகளுக்கு ஒரு தனி பிரிவு இருக்கிறது. அது போல காட்டன் புடவைகளுக்கு என்ற ஒரு தனிப்பிரிவு, சல்வார் சுடிதார் போன்ற வகைகளுக்கு ஒரு தனி தளம் என்று வரும் வாடிக்கையாளரை அப்படியே கண் கொட்டாமல் பிரமித்து பார்க்கும் ஒரு மயக்க நிலையை அடைய வைத்துவிடுகிறது இந்த ஜவுளி கடை .

நல்லி சில்க்ஸ் :

நல்லி சில்க்ஸ் கிட்டத்தட்ட பல தலைமுறையாக இதே வியாபாரம் செய்து வருகிறார்கள். 100 ஆண்டுகளை கடந்து தியாகராய நகரில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

மக்களின் நம்பிக்கையை நூறாண்டுகள் பெற்றிருக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு ஏற்றார் போல அங்கு இருக்கும் ஜவுளிகள் தரம் மிக அருமையானது.

விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் அந்தத் தரத்தின் நம்பிக்கை காரணமாகவே கண்ணை மூடிக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள்.

மயிலாப்பூர் ரங்காச்சாரி:

நகை கடைக்கு சீட்டு கட்டுவது போல இந்த ஜவுளிக் கடைகளும் சீட்டுக்கட்டி புடவை வாங்குவார்கள். நெடுநாட்களாக மயிலாப்பூர் மற்றும் சென்னையின் பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்துதான் பரம்பரை பரம்பரையாக ஜவுளி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கும் தரமான ஜவுளிகள் மற்றும் விசேஷங்களுக்கு ஆடைகள் கிடைக்கிறது. முக்கியமாக இங்கு வாங்கும் போது ஏற்படும் மனதிருப்தியை உணரலாம் என்று கூறுகிறார்கள் அந்த கடையின் வாடிக்கையாளர்கள்.

காஞ்சிபுரம் எஸ்.எம்.சில்க்ஸ்:

இந்த ஜவுளி கடை பூந்தமல்லி ஹைரோடு மற்றும் வேப்பேரி பெரியார் மாளிகையிலும் வைத்திருக்கிறார்கள். அதிகமாக காசு வைத்திருப்பவர்களும் பட்டு புடவை வாங்க வைத்தது இந்த நிறுவனத்தார் மூலமாகத்தான் 2000 ரூபாய்க்கு கம்மியாக பட்டுப்புடவையை இவர்கள்தான் அறிமுகம் செய்து வைத்தார்கள்.

இன்றளவும் சீசன்களில் இரண்டு புடவை வாங்கினால் இரண்டு புடவை இலவசம் என்கின்ற ஒரு ஆஃபரை வெளியிடுவார்கள். அந்த நேரத்தில் அங்கு கூட்டம் அலைமோதும். ஆனால் அங்கு வாங்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஏனென்றால் தரத்தைப் பொருத்த வரை நாம் தான் அதை சரிபார்த்து வாங்க வேண்டியிருக்கும்.

இவர்களும் கடந்த பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்று கூறினாலும் அது மிகையாகாது.

போத்திஸ் :

இங்கு கைதரியால் செய்து விற்கப்படும் சேலைகள் அதிகமாக கிடைக்கிறது. நல்ல தரமான காட்டன் சேலைகளும், நூல் சேலைகளும் பட்டு சேலைகளும் இங்கு கிடைக்கும். தியாகராயநகரில் போத்திஸ் தெரியாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த இடத்தில் ஒரு லேண்ட் மார்க் அது.

இவர்கள்தான் முதல் முதலில் வாங்கும் சேலைகளுக்கு மரக்கன்றை பரிசாக அளித்து நகரங்களில் மரக்கன்று நடும் பழக்கத்தை நேரடியாக ஊக்குவிக்க துவங்கினார்கள். இங்கு விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதிக் காணப்படுவதால் வாடிக்கையாளர்களை அதிகமாக கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


27 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad