Bluepadஇதயம் ஒரு கோயில்-பாகம் 3
Bluepad

இதயம் ஒரு கோயில்-பாகம் 3
இதயக் கோயிலில் நுழைய
அடிப்படை தேவைகள்

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
30th Nov, 2021

Share

செய்யவேண்டிய அடிப்படை நடைமுறைகள்

  • திருக்குறளில் கொல்லாமை ,இன்னா செய்யாமை ,அருளுடைமை ,அன்புடைமை ,வாய்மை ,இனியவை கூறல், பிறன்மனை விழையாமை ,துறவு ,மெய்யுணர்தல் ,நிலையாமை ,கூடா ஒழுக்கம் ,கல்லாமை, அடக்கமுடைமை ,ஈகை, ஆகிய பண்புகள் மனிதன் கடைபிடிக்க வேண்டிய செயல்களாக கூறப்பட்டுள்ளது.
  • சுருக்கமாக கூறின் மனம் மொழி மெய்களால் நல்லவனாக இருப்பது தேவைப்படும் அடிப்படை செயல்பாடாகும்.
  • அகிம்சை ,சத்தியம் ,திருடாமை ,பிரம்மச்சரியம் காத்தல், பொருள் பற்றின்மை ,ஆகிய ஐந்தும் தேவைப்படும் செயல்பாடாக பதஞ்சலி அவர்களால் போதிக்கப்பட்டுள்ளது.
  • "கொல்லான் ,பொய் கூறான், களவு இலான் எக்குணத்தும்நல்லான், அடக்கம் உடையான், நடு செய்ய வல்லான் ,பகுத்து உண்பான், மாசிலான் ,கள்,காமம் இல்லான், இமயத்து இடையில் நின்றானே " என திருமூலர் திருமந்திரத்தில் இயமத்தை வருணிக்கிறார்.






  • உடல் மனதிற்கான நெறிமுறைகள்-நியமம்
  • உடல் மன தூய்மைகள் ,அருள் கொண்டிருப்பது, மித உணவு ,பொறுமை ,நேர்மை ,வாய்மை, ஐம்பெரும் பாவங்கள் நீக்குதல் ஆகியவை நியமங்கள் எனஆக்கப்பட்டுள்ளது.
  • "தூய்மை ,அருள் , ஊன் சுருக்கம், பொறை, செம்மை ,வாய்மை நிலைமை வரைதலே, மற்றிவை ,காமம் ,களவு ,கொலை என காண்பவை நேமி ஈரைந்தும் நியமத்த னாமே", -திருமந்திரம்
  • தவம் செபம் சந்தோஷம் ஆத்திகம் தானம் சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி மஹம்சிவபூசை ஒண் மதி தொல்லீர் ஐந்தும் நிவம்பல செய்யின் நியமத்த னாமே-திருமந்திரம்
  • "தவம் செபம் சந்தோஷம் ஆத்திகம் தானம் சிவன் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி முகம் சிவபூசை உன் மதி தொலைந்தோம் நீ வரல செய்யின் நியமத்த னாமே-"திருமந்திரம்
  • பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் அருள் உரைகளில் எப்படி மனம் வாக்கு காயம் ஆகியவற்றில் திரிகரணசுத்தி ஏற்படுத்துவது மற்றும் மனம் உடல் ஆகியவற்றுக்கு சாதனா முறைகளும் இயம நியமங்கள் ஆக தரப்பட்டுள்ளது
  • சுவாமி அவர்களுடைய கோட்பாட்டின்படி எல்லோருக்கும் தொண்டு செய் எல்லோருக்கும் சேவை செய் (LOVE ALL SERVE ALL, HELP EVER HURT NEVER.)
  • நாமஸ்மரணம் சேவையும் மனித வாழ்வின் இரு கண்கள் மேலும் ஆன்மீகத்தில் ஆத்ம சுத்தியை நோக்கிய பயணத்தில் சுவாமி அவர்களின் பக்தர்களுக்கான 9 கட்டளைகள் மிக முக்கியமாக கருதப்படுகிறது
  • அன்புடன் நாளை தொடங்கி அன்புடன் நாளை கழித்து அன்புடன் நாளை நிறைவு செய் வது இறைவனை அடையும் வழியாகும்
  • இதயக் கோயிலில் நுழையவும் அங்கு இறை தரிசனத்தை பெறவும் மேற்காண் நியமங்கள் இயம நியமங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை








7 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad