Bluepadமின் திரை கல்வி
Bluepad

மின் திரை கல்வி

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
12th Jul, 2020

Share

மாணவன்
பள்ளியை
மறந்தான்.
துள்ளி
எழ
மறந்தான்.

கரும்பலகை
என்னும்
பெரியதிரை.
இன்று
மடி கணிணி,கைப்பேசி
என்னும்
சின்னதிரை.

அந்த
காலத்து
படிப்பு
மண் தரையில்.
இன்றைய
படிப்பு
மின்திரையில்.

பள்ளி
தோழனோடு
துள்ளி
திரிந்தான்.
இன்று
கொரோனோவோடு
தள்ளி
திரிகிறான்.

திரையில்
பாடப்பயிற்சி.
பாடத்தில்
இல்லை
தேர்ச்சி.
வகுப்பு
விட்டு
வகுப்பு
இடப்பெயர்ச்சி.

பாடம்
மின் திரையில்.
இந்த
ஓடம்
சேருமா
கரையில்.
பள்ளி
கட்டணம்
உறையில்.
மாணவன்
வீட்டுச்சிறையில்.
இவை
கொரோனா
ஒழியும்
வரையில்.
- - -நெப்போலியன் விக்ரான்.

11 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad