Bluepadஇதயம் ஒரு கோயில் பாகம் 2
Bluepad

இதயம் ஒரு கோயில் பாகம் 2
அன்பு

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
11th Jul, 2020

Share


இறைவன் அன்பின் மொத்த உருவம் ஆவார் அவர் எல்லா உயிரினங்களிலும் உயிர்மூச்சாக அதாவது பிராண சக்தியாக விளங்குகிறார்

  • உள்ளிருக்கும் மூச்சை பிறப்பு என்றும்
  • வெளிவிடும் மூச்சு இறப்பு என்றும் பகவான் சத்திய சாயி பாபா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்
  • பிறப்பு இறப்பு என்னும் சுற்றில் இருந்து விடுபட மனிதன் மேலும் மேலும் அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்
  • ஆனால் மனிதன் தற்காலத்தில் தன் கூட இருப்பவர்களை கூட அன்பு செலுத்துவதில்லை

இதன் காரணம் யாதெனில் அவன் அன்பை பற்றிய அனுபவத்தை பெற்றிருக்கவில்லை என்பதே

  • அவன் அன்பின் மகிமைக்கு முக்கியம் தராமல் மக்களின் தன்மைக்கு முக்கியத்துவத்தை அளிக்கின்றான்
  • உள்ளிருக்கும் மூச்சு சோ என்ற சத்தத்துடன் உம் வெளி விடுகின்ற மூச்சு ஹம் என்ற சத்தத்துடன் இயங்குகிறது
  • சோ என்பது கடவுளையும் ஹம் என்பது நான் என்பதையும் குறிக்கிறது
  • எனவே மூச்சின் தத்துவம் அவனே நான் என்பதை குறிப்பது
  • கடவுளுக்கும் நான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை
  • அனைவரிலும் நான் என்பது சமமாக இருப்பதாலும் கடவுள் ஒருவரே என்பதாகும் நான் என்பதும் கடவுள் என்பதும் வேறுபட்டது இல்லை
  • எனவே அனைத்து நான் கடவுளே என்று ஆகிறது
  • இந்நிலையில் சம பாவனை தோன்றுகிறது
  • அன்பின் உடைய உருவாக்கம் இன் நிகழ்வே
  • உள்மூச்சு இடா என்றும் வெளிமூச்சு பிங்களா என்றும் அழைக்கப்படுகிறது
  • உள்மூச்சு வெளிமூச்சு ஆகியவைகள் புறத்தை குறிக்கின்றன
  • புறம் என்பது வெளி உலகப் பார்வையை குறிக்கிறது
  • சுஷும்னா என்பது இறை பாதை ஆகிய அன்பு பாதையை குறிக்கிறது
  • சோகம் என்ற நிலையில் நாம் உள்ள பொழுது அன்பு பிறக்கிறது
  • அந்த அன்பு பிராண சக்தியாக அன்பாக உருமாறி சுஷும்னா நாடி வழியாக சஹஸ்ராரத்தை அடைகிறது
  • சகஸ்ரம் இறைவனின் மலர்ச்சி உள்ள இடமாகும்
  • சகஸ்ராரத்தில் மனிதன் தெய்வீக நிலையை அடைகிறான்
  • உடலில் பிராணசக்தி உள்ளவரை உடல் தெய்வீகமாக கருதப்படுகிறது
  • இந்நிலையில் உடல் சிவம் ஆகிறது
  • பிராண சக்தியை இழந்து விட்டால் அது சமமாகிறது
  • எந்நிலையிலும் பிராணசக்தி வருவதுமில்லை போவதுமில்லை
  • மனிதன் தன் உடல் சார்பில் அடிப்படையில் பிறப்பு இறப்பு சுழற்சிக்கு உள்ளாகிறான்
  • அவன் தெய்வீக சார்பை அடையும் பொழுது நிரந்தரமாக என்றான்
  • கடவுளின் திருவடிகளில் சரண் அடைய அடைய அன்பு மேலோங்கி தெய்வீக காட்சி அவனுக்கு கிட்டுகிறது
  • இறைவா என்னுடைய தூய இருதயத்தை உன் பாத மலர்களை சமர்ப்பிக்கின்றேன் இதைவிட நாம் வேறு எதை அர்ப்பணிக்க முடியும் இந்த அர்ப்பணிப்பை இந்த சிறிய காணிக்கையை தாங்கள் ஏற்றுக் கொண்டு அருள் புரிவீராக




10 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad