Bluepadமீண்டும் ஒரு வேலை கிடைக்கும் வரை நாம் என்ன செய்யலாம்?
Bluepad

மீண்டும் ஒரு வேலை கிடைக்கும் வரை நாம் என்ன செய்யலாம்?

G
Gayathri
10th Jul, 2020

Share

இந்தக் காலத்தில் வேலை என்பது குதிரைக் கொம்பாகி விட்டது. அதுவும் இந்த பொது ஊரடங்கு காரணம் காட்டி பலரை வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள். அப்படி பலர் நிரந்தரமான வேலை இல்லாமல் இன்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி வேலையை விட்டு நீக்கி விட்டார்கள் என்று அழுது கொண்டிருந்தால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது. அதற்காக வேலையை விட்டு தூக்குவதை நியாயப்படுத்த முன்வரவில்லை. வேலை என்பது இந்தக் காலத்தைப் பொறுத்தவரை எப்போது வேணாலும் போகலாம் என்கின்ற நிலைதான் இருக்கிறது.

இந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த வேலை கிடைக்கும் நேரத்தில் நாம் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்யலாம். அதன்மூலம் புதிய ஒரு உச்சத்தை அடைய அது வழிவகுக்கும்.

திறன் மேம்பாடு:

நாம் நெடுநாட்களாக ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்திருப்போம் அல்லது நண்பர்கள் கூறி இதை நாம் படிக்கலாம் என்ற ஆசை நமக்கு இருந்திருக்கும். வேலை நிமித்தமாக அதை நாம் தொடராமல் போயிருப்போம். இந்த வேலை இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதை நாம் நன்றாக கற்கலாம். ஏனென்றால் நமக்கு கிடைத்த அவகாசத்தை சரியாக பயன் படுத்துவதைத் தவிர சிறந்த வேறு வழி இல்லை. ஆனால் இதற்கு பணம் ஒரு தடையாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தக் கூடாது. நாம் முயற்சி செய்து நமக்கு தேவையானது கற்றுக் கொண்டால் அதுவே நமக்கு ஒரு பெரிய பலத்தை கொடுக்கும்.

என் நண்பர் ஒருவரை வேலையை விட்டு திடீரென்று நிறுத்திவிட்டார்கள். அவர் சற்று வருத்தப்பட்டார் இருந்தாலும் அவர் நெடுநாட்களாக நினைத்த ஆட்டோகேட் என்னும் ஒரு கோர்ஸை படித்தார். இரண்டு மாதங்கள் கஷ்டப்பட்டார். அவர் படித்த நிறுவனத்திலும் அவருக்கு ஒன்றும் பெரிதாக வேலை வாங்கிக் கொடுத்து விடவில்லை .

ஆனாலும் அவரது சுய முயற்சியில் அதே கேட்டை ( CAAD ) பயன்படுத்தி இன்று பெரிய நிலையை அடைந்து விட்டார்.

மாற்றி யோசிக்க இந்த காலத்தை பயன்படுத்தி கொள்ளலாம்:

நம்மைப் பற்றியே நாம் நன்றாக அறிந்து கொள்ள இந்த இடைப்பட்ட காலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்துக்கு இந்த வேலை கடைசியாக நான் பார்த்த வேலை எப்படி போனது என்பதை சுய பரிசோதனை செய்து பார்க்கலாம். எங்கு நாம் தடுமாறினோம் எந்த நாள் நமக்கு வேலை போனது என்கின்றது பற்றி முழுமையாக ஆராய்ந்து விட்டால் அந்த தவறுகளை பட்டியலிட்டு வைத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் அதை மேற்கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

அடுத்தது நாம் எந்த மாதிரியான இடத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை நன்றாக தீர்க்கமாக முடிவு செய்யலாம். நாம் நேர்முகத் தேர்வை எப்படி அணுகுவது என்பதை பற்றியும் ஒரு மாற்று ஆலோசனை மேற்கொள்ளலாம். நண்பரிடம் விவாதிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் கிளாஸ் டோர், ஆம்பிஷன் பாக்ஸ் என்பது போன்ற எண்ணற்ற நேர்முகத் தேர்வுக்கான வழிகாட்டும் தளங்கள் இருக்கிறது.

அதில் படித்து பார்த்து நமது திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

நாம் சோர்ந்து போய் உட்கார்ந்து கவலைப்பட்டு மற்றவர்களைப் பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டால் மட்டும் போதாது. நாம் முதலில் கவனமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் முடிந்த வரை கற்றுக்கொள்ளவேண்டும். எதுவுமே நிரந்தரம் கிடையாது எந்த நிலையும் எப்படி வேணாலும் மாறும் . நாம் அதற்கு தகுந்தபடி நம்மை மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் எல்லாமே நல்ல படியாகத்தான் நடக்கும்.

அதாவது எப்படி விஷயங்கள் எதிர்மறையாக நடந்தாலும் அதை நம்மால் சரிசெய்துவிட முடியும். ஒரு சிலர் இப்படி இக்கட்டான நேரங்களில் வேலை இழந்தவர்கள் தான் இன்று மிகப்பெரிய சுயதொழில் முனைவோராக இருக்கிறார்கள். அதற்கான சந்தர்ப்பங்களில் நாம் சரிபார்த்துக் கொள்ளலாம். எல்லோருக்குமே ஒரு முதலாளி ஆக வேண்டும் என்ற கனவு சிறிதளவாவது இருக்கும். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அதற்கான செயல் வடிவம் கொடுக்க முடியுமா என்று ஆராயலாம்.

எல்லோருக்குள்ளும் ஒரு முதலாளி கனவு இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக ஒவ்வொரு இந்தியருக்கும் அது 25 முதல் 30 சதவீதம் இருக்கும் கனவு ! அப்படி செய்ய முடிந்தாலும் மிக சிறப்பான விஷயம். எந்த ஒரு தொழிலிலும் எடுத்தவுடன் தொட்டு விடாது லாபங்கள். ஆனால் முயற்சியும் நேரம் இருந்தால் கண்டிப்பாக நாம் சாதிக்க முடியும்.

இந்த வேலையற்ற நிலையில் பலர் மனம் உடைந்து தற்கொலை வரை செல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது வீடு கடன், குடும்பம் என்று எண்ணற்ற சவால்கள் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்வது தான் இதற்கு காரணம். இருந்தாலும் தற்கொலை செய்து கொண்டால் மட்டும் இத்தகைய சவால்களை கடந்து சென்றுவிட முடியாது எதிர்த்து நின்று போராட வேண்டும். அப்படி போராடி நாம் சமாளிக்க தொடங்கினால் தான் வாழ்க்கையின் முழு அர்த்தம் புரியும்.22 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad