Bluepadதுறைமுகத்தின் அவசியங்கள்!
Bluepad

துறைமுகத்தின் அவசியங்கள்!

A
Arvind Kumar
8th Jul, 2020

Share

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் போக்குவரத்திற்கும் ஏன் பொருளாதார வளர்ச்சிக்கும் கூட துறைமுகங்கள் பெரிய அளவில் பயன்படுகிறது.




ஒரு பெரிய நகரம் என்றாலோ அல்லது மாநிலத்தின் தலைநகர் என்றாலும் துறைமுக வசதி இருக்கிறதா என்றுதான் முதலில் பார்க்கிறார்கள். ஏனென்றால் ஒரு துறைமுகம் இருந்தால்தான் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் பொருட்களை எளிதாக உள்ளே கொண்டு சேர்க்க முடியும் அதாவது வரும் சரக்குகளை இறக்கி கையாள்வதற்கு ஒரு துறைமுகம் மிகவும் அவசியம்.

துறைமுகத்தில் வெறும் கார்கள் மட்டும் தான் வருகிறது என்று கிடையாது உதிரிபாகங்கள் , உணவு, கடல் வாழ் உயிரினங்கள் , மேலைநாட்டு பழங்கள் , பண்டங்கள் போன்ற பல விஷயங்கள் இந்த துறைமுகம் வாயிலாக தான் வந்து சேர்கிறது.

மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்தபொழுது திருச்சி மாநகரை தமிழகத்தின் தலைநகராக மாற்றலாம் என்று எண்ணினார் அதற்கான ஒரு திட்ட வரவையும் தயாரித்தார்.

அந்தத் திட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தார்கள் ஏனென்றால் திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் மையப்பகுதி அங்கு தலைநகர் செயல்படுவது என்பது தமிழ்நாட்டிற்கு ஒரு சிறந்த விஷயம் தான் என்று பலர் கருதினர் ஆனால் அந்தத் திட்டம் தோல்வி அடைந்தது. அந்தத் திட்டம் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணமாக கூறப்பட்டது திருச்சி மாநகரில் துறைமுகம் கிடையாது என்பதுதான்.

அன்றைய காலகட்டத்தில் திருச்சி ஏர்போர்ட் கூட சென்னை சர்வதேச விமான நிலையம் அளவிற்கு மாற்றி இருப்பது ஒன்றும் பெரிய சிரமமான காரியமாக இருந்திருக்காது ஆனால் அங்கு துறைமுகம் என்பது இல்லவே இல்லை. திருச்சி மாநகரில் தான் இல்லை என்றால் அங்கு இருந்து ஒரு நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் எங்காவது துறைமுகம் இருக்கிறதா என்று பார்த்தாலும் இல்லை எனவே தமிழகத்தின் தலைநகர் திட்டம் துறைமுகம் இல்லாததால் கிடப்பில் போடப்பட்டது. சென்னை நிரந்தர தலைநகராக திகழ்கிறது !!

இப்போது புரிகிறதா துறைமுகத்தின் அருமை? துறைமுகம் என்பது பெரும் கப்பல் போக்குவரத்திற்கு படகு ஓட்டுவதற்கு மட்டுமல்ல துறைமுகத்தின் முக்கியமான வேலையே சரக்கை கொண்டு வருவது அந்த சரக்கை நிர்வகிப்பது உள்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கும் , வெளிநாட்டிலிருந்து உள்நாட்டிற்கும் அதே போல உள் மாநிலம் , வெளி மாநிலங்களுக்கும் சரக்கை கையாள்வதற்கு ஒரு துறைமுகம் மிக மிக அவசியம்.

எல்லா சரக்கையும் தரை வழியாகவோ அல்லது விமானம் வழியாக கொண்டு செல்ல முடியாது. விமானத்தை பொருத்தமட்டில் குறிப்பிட்ட எடை கொண்டு செல்லப்படும் அதற்கும் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. தரை வழியை பொருத்தவரை அந்த சரக்கு எடுத்துச் செல்வதற்கு அவசரம் இல்லை என்றால் அவர்கள் நாடுவது துறைமுகத்தை மட்டுமே.

ஒரு சில நேரத்தில் கடல் வழியாக செல்லும் சரக்குகள் தரை வழியாக செல்லும் சரக்கை விட மிக விரைவாக சென்று சேர்ந்து விடும்.ஆனால் இதில் பல அச்சுறுத்தல்கள் இருக்கத்தான் செய்கிறது இப்போது சமீபத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு , வழி தடம் மாறிப் போன கப்பல்கள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் கடல் மட்டும் இல்லை என்றால் இந்த அளவிற்கு எக்கச்சக்க சரக்கு பரிமாற்றங்களுக்கு வழி இல்லாமல் போயிருக்கக் கூடும் , அதன் சகஜ பரிமாற்றங்களுக்கு காரணம் இந்த துறைமுகங்கள் தான்.

ஒரு துறைமுகம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்தார்போல் அந்த இடத்தை முன்னேற்ற வேண்டும் தற்காலிக துறைமுகங்கள் சென்னையில் கூட இருக்கிறது சென்னையில் பாரம்பரியமாக இருக்கும் துறைமுகத்தை தவிர இப்போது காமராஜர் துறைமுகம் என்று ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது எண்ணூர் நகரத்தில் அதேபோல் தமிழ்நாடைப் பொருத்தவரை காரைக்காலில் கூட ஒரு புதிய துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது இத்தகைய துறைமுகங்கள் இருப்பதால்தான் ஆங்காங்கே சரக்கு பரிவர்த்தனைகள் எந்தவித சிக்கலுமின்றி நடைபெறுகிறது.

துறைமுகங்கள் இருப்பதால் ஏற்படும் மற்றொரு அனுகூலம் என்னவென்றால் அந்த துறைமுக நகரை சுற்றி ஒரு சின்ன சின்ன ஒரு தற்காலிக மார்க்கெட்டுகள் ஏற்பட்டுவிடும் அதாவது வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்கள்(சில தேவையற்ற பொருட்களை ) கொண்டு வந்து விற்று விடுவார்கள். இவர்கள் நமது தலையில் கட்டிவிடுவார்கள் அப்படி வந்த வெளிநாட்டு போன் , ஸ்பீக்கர்கள் போன்ற பல வகைகள் இருக்கிறது இதில் ஒரு சில கடத்தல் பொருட்களும் வந்துவிடும் என்று கூறுவார்கள்.

அதாவது கடத்தல் சரக்குகளும் இப்படித்தான் நமது இல்லங்களை எட்டிக் கொண்டிருக்கிறது இந்த பொருட்களைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் இருந்தால் ஐந்து வருடம் கூட நன்றாக உழைக்கும் இல்லை என்றால் ஐந்து நிமிடத்தில் கூட வீணாகிவிடும் நாம் அவர்களை திரும்ப கேட்க முடியாது ஏனென்றால் இதற்கு பில் காபி என்று ஒன்று கிடையவே கிடையாது

17 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad