Bluepadதரை தட்டி,,,
Bluepad

தரை தட்டி,,,

விமலன்
7th Jul, 2020

Share

வருகிறேன் எனச்சொன்ன கொத்தனார் வரவில்லை இன்னும். எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகும் போது கையறு நிலையும்,சுய பச்சாதா பமும் ஏற்றுபட்டு விடுவது இயல்பாகிப் போகிறதுதான், வேலை ஏதாயினும் வந்து விட்டுருக்குமா,,,?அல்லது இருக்கிற வேலை பிஸியில் இவன் குரலுக்கும்,கூப்பிடலுக்கும் செவி சாய்ப்பது அனாவசியம் என விட்டு விட்டாரா,,,,?நாட்களின் நகர்வில் பார்த்தால் கேட்க வேண்டும், ”சரி விடுங்க,அதான் வரலையில்ல,ஏங் கெடந்து தவதாயப் படுறீங்க, நீங்க ளும் நிம்மதியா இருக்க மாட்டீங்க, அடுத்தவுங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்க, ”இப்ப, என்ன வரட்டும் அவசரப்படாதீங்க, இன்னும் ஒரு வாரம் பத்து நாள் கூட பாப்போம்,வரலையின்னா அப்புறம் முடிவெடுப்போம்,சரியா”என்றாள் மனைவி, அவளது பேச்சிற்கு எதிர் பேச்சு ஏது,,,,? அதை அவளிடம் சொன்ன போது,,,ஆமாம் இப்ப எல்லாம் ஏங்கிட்ட கேட்டுக் கிட்டு தான செய்யிறீங்க,இல்ல ஏங் சம்மதம் வாங்கித்தான செய்யிறீங்க, என்னமோ போங்க, என்னையப்போல ஒரு அப்புராணி கெடைக்கப்போயி ஒங்க வண்டி ஓடுது, இல்லையின்னா ஐயாவுக்கு டப்பா டான்ஸ் ஆடீருக்கும் இந்நேரம், ஆமா ,ஆடும் ஆடும் ஆடமாட்டாம, என பதிலுக்குச்சிரிக்கிற இவனின் முகத்தில் கையைமடக்கிக்குத்துகிறவள் பார்க்கிற பார்வை ஆளை அளந்து விடும், கூடவே அசத்தியும் கூட விடும். அவளது ஒவ்வொரு பார்வைக்கும் பனித்துளி ஆயிரம் பெய்தது. அவளது ஒவ்வொரு நடைக்கும் அவள் கட்டியிருந்த புடவையிலிருந்து பூக்கள் ஆயிரம் உதிர்ந்தன, பெய்கிறவைகளை பொறுக்கவும்,பூக்கிறவைகளை எடுத்துக் கோர்கவும் தனி ஆட்களே நியமிக்க வேண்டும் போலும். அதை அவளிடம் சொன்ன போது போங்க நீங்க என முகம் மூடி சிரிக்கிறாள், அந்த ஐம்பது வயது வானவில், டீக்கடையில்வைத்துதான்கொத்தனாரைப்பார்த்தான்,இரண்டுவருடங்களுக்கு முன்பு பார்த்ததைப்போலத்தான் இப்பொழுதும் இருந்தார், கொஞ்சம் பூசினார் போல் பட்டாலும் கூட முகத்தில் கன்னத்து எலும்புகள் கொஞ்சம் துருத்தித் தெரிந்ததுதான். எப்பொழுதும் போல் முழுக்கை சட்டையும்,கட்டம் போட்ட கைலியும் கட்டி யிருந்தார், கையிலிருக்கிற வாட்சை கழட்டி வைக்க இன்னும் நேரம் கிடைக்க வில்லை போலும், மிகவும் மரியாதையான மனிதர்,யாரிடம் வளைய வேண்டும் யாரிடம் நிமிர வேண்டும் என தெள்ளற தெரிந்து வைத்திருப்பவர், இவனை விடவும் ஐந்து வயதாவது மூப்பிருக்கும், பார்க்க நேர்கிற போதெல்லாம் வணக்கம் சொல்லுவார், இவனும் பதிலுக்கு வணக்கம் சொல்லி விட்டு நல்லாயிருக் கீங்களா என்பான்,அது தேவையின் நிமித்தமா அல்லது மரியாதையின் காரணமாகவா தெரியவில்லை, வெம்மை வெயிலில் கடையின் கூரையில் அமர்ந்திருந்த காகம் காகம் தெரிகி றது நிழலாய்,இவன் பிய்த்துத் தின்ற வடை காகத்தின் திறந்திந்த வாயருகே சென்று பின் இவன் வாய்க்குச் செல்கிறது, பிய்த்த துண்டை டீக்கடை கூரையில் எறிந்தார், வடையை தூக்கிக்கொண்டு காகம் பறந்து சென்றது நிழலாய்த் தெரிகிறது இப்பொழுது. கடைக்காரர் சொல்லுகிறார்,”சார் காக்காய்க்கி வடை போட ஒங்கள மாதிரி ஆட்கள் இருக்குறீங்க,ஆனா என்னைய மாதிரி கடைக்காரங்களுக்கு உதவி பண்ண யாரு இருக்கா சொல்லுங்க,ரெண்டு மாசம் கடையத்தெறக்காம எத்தன செரமம்,எத்தன புடுங்கு ,எத்தனை கருமாயம்,எத்தன அவமானம், எத்தன கெட்ட பேரு,,,,எவ்வளவு தலை குனிவு,,,/ எல்லாம் சமாளிச்சோம், சாப்புடுற சாப்பாட்டுல இருந்து புள்ளைகளுக்கு ஒரு திண்பண்டம் வாங்குக்குறது வரைக்கும் எல்லாத்துக் கும் செரமம்,ஒரு மாசச்சீட்டு கட்ட முடியல, ஜவுளிக்கடை தவணை கட்ட முடியல, பலசரக்குக் கடை பாக்கி அப்பிடியே நின்னுச்சி, அது போக வீட்ட விட்டு வெளியில வர்றதுக்கே ஒரு மாதிரி மனசு கூசிப்போச்சி, கட்டுன பொண்டாட்டிகிட்டக்கூட சிரிச்சிப் பேச மனசு வரல. மனசளலவுல அப்பிடி உக்கிப் போயிட்டோம். ”அக்கம் பக்கத்துல சிரிச்சி பேசுறதுக்குக் கூட முடியல, நல்லாப் பழகுறவுங்க கூட எங்க கடன் கேட்டுருவானோன்னு பேச்சக்கொறச்சிக்கிட்டாங்க, பாத்தாலும் பாக்காத மாதிரி போக ஆரம்பிச்சிட்டாங்க, அடுத்து பாக்கும் போது வேற வேலை கவனமா போயிக்கிட்டு இருந்தேன்னு சொல்லு வாங்க, அவுங்க சொல்லுறது பொய்யின்னுநல்லாத் தெரியும், அந்த மாதிரி நேரத்துல அவுங்க பாத்துட்டும் பாக்காதது போல போனது கூட பெரிசாத் தெரியாது, இப்பிடி வந்து சொல்றது தான் மனச போட்டு வாதிக்கும்,சரி நம்ம போதாத நேரம், கேட்டுத்தான் ஆகணும்ன்னு அதுக்கும் ஒரு சிரிப்பு சிரிச்சி வைக்கத்தான் வேண்டி இருந்துச்சி, எனக்கு மட்டும் இல்ல இந்த நெலம,என்னயப்போல இருந்த எல்லாரும் இப்பிடித்தான் செரமப்பட்டாங்க,


ஒருத்தன்னா துன்பம் தாங்காம வீட்டுல பேன்ல தொங்கப் போயிட்டான், இத்தனைக்கும்என்னையக்காட்டிலும் தைரியமானவன் அவன்.,,,என நிறைய நிறைய பேசியவரிடம் இன்னொரு டீ வாங்கிக்குடித்து விட்டுக் கிளம்பினான். டீக் கடையிலிருந்து வீடு திரும்புகிற பொழுது இவனுடன் கூடவே நடந்து வந்த இவனின் நிழல் தரையின் மேடு பள்ளங்களிலும் சாலையின் மீதுமாய் ஊர்ந்து போய்க் கொண்டிருந்த எறும்பு மற்றும் இன்னும் பல ஊர்வனவற்றின் மீது படர்ந்து சென்றவாறு இருந்தது, அப்படியாய் ஊர்ந்து சென்று கொண்டிருந்த எறும்பு ஓன்று இவனை திரும்பிப் பார்த்துக் கேட்கிறது,எல்லாம் சரி, எங்களுக்கென பாதுகாப்பாய் செல்ல ஒரு வழியோ, ட்ராபிக் சிக்னலோ,இன்னும் இன்னும் இன்னுமான ஏதுமே இல்லை யே,,,? எங்களுக்கும் உங்களைப்போல குடும்பம், வாரிசுகள், ஆண் பெண், வீடு வாழ்க்கை,சேமிப்பு,என்னது இன்னது என இருக்கிறது தானே, அப்புறம் ஏன் நாங்கள் புறந்தள்ளப் படுகிறோம் தங்களைப்போன்றவர்களால்,,,? என கேட்ட கேள்விக்கு பதில் இல்லை இவனிடம், சாலையோரமாய் நின்ற வேப்பமரத்திலிருந்து பறந்த சிட்டுக்குருவி ஒன்று தின்று முடித்த வேப்பம் பழத்தின் கொட்டையை எச்சமிட்டுச் சென்றதாய். அகலபரந்து விரிந்திருந்த வேப்பமரம் தன் கிளைகளாலும் ,இலைகளாலும், உயரத்தாலும் அகலத்தாலும் வலிமையாலும் தன் வயதை சொல்லி விட்டுச் சென்றது,. ஓங்கி வீசிய காற்றுக்கும் மெல்லென வீசிய தென்றலுக்கும், அடித்து பெய்த மழைக்கும் வருத்தெடுத்த வெயிலுக்கும், தண்ணீராய் ஊற்றிய பனி மற்றும் இயற்கை சூழல்களுக்கும் அடம் கொண்டு நின்றதாய்,,,/ சிட்டுக் குருவிகள் அரிதான நேரத்தில் அது இடுகிற எச்சங்களும் அரிதாகவே/ கொஞ்சம் நகன்று கடந்து விட்டான்.இல்லையேல் இந்நேரம்இவன் மீது கொட் டை விழுந்திருக்கும், விழுந்தால் கூட ஏற்றுகொள்கிற பக்குவம் இவனில் இருக்கிறது தான், பக்குவங்களின் பண்புகள் விளைகிற நிலமாய் ஆகிப்போன மனது எதையும் ஏற்றுக் கொள்ளவும் கையாளவும் தயங்குவதில்லை, ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்து என்ன வேலை செய்ய வேண்டும் எனப் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொன்னவர் திரும்பவுமாய் வணக்கம் சொல் லி விட்டு இவனை அனுப்பி வைத்தார். மணி பத்தாகப் போகிறது, அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்து அமர்ந்து விடுகிறான் அமுக்குகிற உடல் அசதியை அருகில் வைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல். ஒருவிதத்தில் இதுவும் நன்றாகவே இருக்கிறது. சிறகு விரித்த எண்ணங்க ளுடனும், மனம் பதித்த நினைவுகளுடனுமாய் அத்து வானத்தில் அவிழ்ந்து பறக்கிற மனதை அள்ளிக்கட்ட மனமில்லாமல் அப்படியே விட்டு விடுவதும் இப்ப டியே சமைந்து அமர்ந்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது. ஒண்ணுக்குமுட்டிக் கொண்டு வந்தது,இன்னும் முகம் கூட கழுவவில்லை, இது இவனுக்கு இரண்டாவது விழிப்பு எனலாம்,அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டிருந்தது,என்னவெனத் தெரியவில்லை, இப்பொழுதுதெல்லாம் அப்படித்தான் ஆகிப்போகிறது, ஏதாவது ஒரு சாக்கை வைத்துக் கொண்டு நான்கு அல்லது நான்கரை மணிக்கு வந்து விடுகிற விழிப்பு அப்புறமாய் தூக்கத்திற்கு சுழியிடுவதில்லை,விழித்துக் கொண்டே தான் படுத்துக் கிடக்க வேண்டியதிருக்கிறது. அந்நேரம் மட்டும் என இல்லை,இரவு வேளைகளில் ஒண்ணுக் கிருக்கவோ அல்லது தற்செயலான விழிப்புக்காய் எழுந்திருக்கிற போதெல்லாம் பாத்ரூம் போய்விட்டு உடம்பை கழுவிவிட்டு வந்துதான் படுக்க வேண்டியிருக் கிறது காக்காக்குளிப்பு போல.அப்படிப்படுத்தால் தான் புழுங்குற புழுக்கத்திற்கும், வேகிற வெக்கைக்கும் கொஞ்சமாவது உடல் வெக்கை கக்காமல் இருக்கிறது, சில நாட்களில் நான்கைந்து தடவை உடலைக் கழுவ வேண்டி ஆகிப் போகிறது, அப்பிடியான நாட்களில் தூக்கம் போய் விடுவதுண்டுதான் சுத்தமாக.ஏதோ தூங்கியதாய் பேர் பண்ணிக்கொள்ள வேண்டி இருக்கும், பாத்ரூம் போய் விட்டு உடலைக் கழுவிக்கொண்டு படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தான், எவ்வளவு நேரம் அப்படிப் படுப்பது,போரடித்துப் போகிறது, அல்லது எரிச்சல் வந்து விடுகிறது, எழுந்தமரவும் இயலவில்லை, இருட்டில் எழுந்தமர்ந்து என்ன செய்ய,,,,? லைட்டைப் போட்டால் அல்லது டீ.வி யை போட்டு பார்த்தால் மனைவி, பிள் ளைகள் கோபம் தாங்காது, அதிலும் சின்ன மகள் இருக்கிறாளே அவளது பேச்சு அப்படியே அறுத்துப் போடும் பேச்சு, உடல் இருக்க உயிரை அறுத்து விடுவாள், ஆழமான பார்வையும்,தீர்க்கமும் கொண்டவள். அனாவசிய மான பேச்சிற்கும் தேவைற்ற உளரலுக்கும் இடம் தந்ர்து விட மாட்டாள் அவ்வளவு எளிதாக/ ஆச்சரியம்தான் இது, இந்த வயதில் எப்படி அவளிடம்,,,,? எனக்கேட்டால் எல்லாம் தாய் தந்தையான தங்களிடமிருந்து வந்ததே என்கிறாள், இவர்கள் எப்பொழுதாவதான் தருணங்களில் அவளுக்கு எதுவும் சொல்லித் தந்ததாய் நினைவுகளோ, பதிவுகளே இவனிடமோ இவன் மனவியிடமோ இல்லாத பொழுது எப்படி இது சாத்தியப்பட்டது, மனமேற்றவர்களை ஆசிரியராய் பாவித்து தூரத்திலிருந்து வித்தை கற்றுக் கொள்கிற ஏகலைவத்தனம். அவளிடம் குடிகொண்டிருந்திருக்கலாம் ஒரு வேளை. தன் கல்லூரிப் பாடத்திலிருந்து தனது உடல் உபாதை வரை எதையும் சொல் லி விட மாட்டாள் அவ்வளவு எளிதாக,,,,பத்து தடவைக்கு மேல் கேட்டால் ஒரு தடவை சொல்லுவாள் அதுவும் பிய்த்துப்பிய்த்து,,/ மாதந்தோறுமாய் வருகிற பீரியட் டைம் ஒரு மாசம் கொஞ்சம் பின் தள்ளிப் போயிருக்கிறது,அவளுக்கு அது ஒன்றும் பெரிதாய் இடர் பட்டு தெரியவில்லை, எதுவானாலும் அம்மாவிடம் சொல்லி விடுகிற இவள் இதை சொல்ல வில்லை, அம்மாவுக்கு தெரிந்து போய் வீடு இரண்டு பட்டு விடுகிறது, “ஏய் என்னாடீ ,ஒரு மாசமா பீரியட் டைம் தள்ளிப் போயிருக்கு ,அதக்கூட ஏங்கிட்ட சொல்லாம இருக்கிற அளவுக்கு என்ன பெரிய வேலை ஒனக்கு என கோபமாக பேசியவளை ஏம்மா, வயசுக்கு வந்த பொண்ணுக்கு ஏதாவது உடல் உபாதையின்னா ஏதாவது தப்பாத்தான் நடந்திருக்குமுன்னு சந்தேகப் பட்டுக்கிறீங்க, இதுல வயித்துல நெருப்பக் கட்டிக்கிறோங்குறதுல ஆரம்பி ச்சி சேலை மேல முள்ளு பட்டாலும் முள்ளு மேல சேலை பட்டாலும்,,,ங்குற வரைக்கும் டயாலக் வேற,,,என அழுது விட்டாள், ”ஒங்க நெனைப்பு படியே அப்பிடியே இருந்தாலும் கூட நான் வளந்த விதம் சரியில்லையாஇல்லை என்னைய வளத்தவிதம் சரியில்லையா,சொல்லுங்க, ”காலம்கால்ல சக்கரத்தக்கட்டிக்கிட்டு எங்கயோ போயிக்கிட்டு இருக்குற சூழல்ல புள்ளைங்க வளர்ற விதமும் அவுங்கள வளக்குற விதமும் மாறு பட்டுக் கிட்டே இருக்குது, ”தவிர ஒங்க காலங்கள்ல புள்ளைங்கள வீடு வளத்துச்சி,இப்ப எங்களை சூழ்நில வளக்குது,அதான ஒங்க பயத்துக்கும், எங்க மேல இல்லாமப்போற நம்பிக்கைக் கும் காரணம். தவிர ஒங்க காலங்கள்ல அஞ்சி பைசாவுக்கு மேல பள்ளிக் கூடத்துக்கு கொண்டு போற பழக்கமில்லாம இருந்துச்சி, கடைக்கி பத்து ரூபா கொண்டு போனா வாங் குறதுக்கு எட்டு ரூவாயிக்கி அல்லது ஆறு ரூவாக்கிதான் சாமான்க இருந்துச்சி, ஆனா இப்ப ஆயிரம் ரூவா கொண்டு போனா அதுவும் காணாமா கூடுதால ஐநூறு ரூவாயிக்கு வாங்குறதுக்கு சாமான் இருக்கு, கையில கொண்டு போனது காணாம ஏதாவது ஒரு பேங்க் கார்ட மிசின்ல சொருகி இழுத்துக்கிட்டு வர்றீங்க, ”அப்பயெல்லாம் தீபாவளி,பொங்கலுக்கு மட்டுந்தான புதுச்சட்டை சேலை துணி மணி,ஆனா இப்ப ஒடம்புல ரெண்டாயிரம் ரூவாயிக்கும் கொறையாம ட்ரெஸ் பண்ணிட்டுதான் வெளியில நடமாடுறம், அப்பா சொல்லீயிருக்குறாங்க, ”முன்னயெல்லாம் கிழிஞ்சி ஒட்டுப்போடாத ட்ரவுசர் சட்ட போடாதா பள்ளிக் கூடத்துப் புள்ளைங்கள பாக்க முடியாது அப்ப வாழ்க்கை வறுமைக்கி வாக்கப் பட்டதா இருந்துச்சி, ஆனா இப்ப வறுமைக்கி ஆட்பட்டிருந்தாக்கூட அத ஒட்டுப் போட்டு மறைக்கிறதுக்கு ஆயிரம் வேலை செஞ்சிக்கிட்டு நாகரீ கம்ங்குற பேர்ல ஓட்டிக்கிட்டு இருக்குற வாழ்க்கையில இதெல்லாம் நடக்காதுங்குறதுக்கு ஏதுவும் உத்திரவாதமில்லதான், ஆனா என்னைய நீங்களோ அப்பாவோ அப்பிடி வளக்கல ம்மா என்றவளை வாசலில் நின்ற அப்பாவின் நிழல் தலை தடவிக்கொடுத்தது, வருகிறேன் எனச்சொன்ன கொத்தனார் வரவில்லை இன்னும், ஒரு வேளை அவருக்கும் இது போல் கல்லூரி இளங்கலை பயிலும் மகள் இருந்து அவர் வாசலில் நின்று தலை தடவிக் கொடுத்துக் கொண்டிருக்கலாம்.

12 

Share


Written by
விமலன்

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad