Bluepadஅசத்தும் வாட்ஸ்அப் செயலி - அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள்.
Bluepad

அசத்தும் வாட்ஸ்அப் செயலி - அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள்.

S
Shankar
7th Jul, 2020

Share

இன்றைய அவசர காலகட்டத்தில், வாட்ஸ் அப்பின் பங்கு மிகமிக அத்தியாவசியமாக உள்ளது. உண்மையில் இந்த செயலி நம்மை , நமது சுற்றத்தை மிக நெருக்கமாக மாற்றிவிட்டது .
சில வருடங்களுக்கு முன்பு கூட நாம் ஒருவருக்கு தகவல்கள் பரிமாற எஸ்எம்எஸ் மொழியை தான் நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஆனால் அது இந்த அளவு எளிதாக இல்லை. முக்கியமான நேரங்களில் மெசேஜ் டெலிவர் ஆகாமல் போக வாய்ப்புக்கள் அதிகம் காணப்பட்டது. ஒன்று கால் பேச வேண்டும் அல்லது வாய்ஸ் மெசேஜ் எனப்படும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அது அந்த அளவு பயனளிக்கவில்லை.

டச் போன்களின் பயன்பாடு பெருகியவுடன். வாட்ஸ் அப்பின் தேவை மிகவும் அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் உடனுக்குடன் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம், நாம் அனுப்பிய மெசேஜ்களை அவர்கள் பார்த்து இருக்கலாம் இல்லையா என்று சரிபார்த்துக் கொள்ள முடிந்தது. இன்டர்நெட் மட்டுமிருந்தால் போதும் என்கிற நிலை. பயனாளிகள் அதிகரிக்க அதிகரிக்க வாட்ஸ்அப் ஒவ்வொரு வசதிகளாக அறிமுகப்படுத்த தொடங்கியது. முதலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து மெசேஜ் அனுப்பும் வாய்ஸ் மெசேஜ் மொரே அறிமுகப்படுத்தியது. அது ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாற்றம். ஆங்கிலத்தில் மெசேஜ் டைப் செய்ய தெரியாதவர்கள் தமது தாய்மொழியிலேயே வாய்ஸ் மெசேஜ் அனுப்பிக் கொண்டு உள்ளார்கள். மைக்கைப் பிடித்துக் கொண்டு கத்திரிக்காய் வெண்டைக்காய் முருங்கைக்காய் கீரை பால் என்ன வாங்கிட்டு வந்துடுங்க என்று கூறும் இல்லத்தரசிகள் இன்று பல்கிப் பெருகி விட்டனர்!

வாட்ஸ் அப் வீடியோ கால் வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிகள் இருந்தாலும், ஆரம்ப கட்டத்தில் அதைப் பயன்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.. கால்கள் தரமும் கிளாரிட்டி அந்தளவு சிறப்பாக இல்லை , வீடியோ கிளாரிட்டி ஓஹோ என்று இல்லை துவக்கத்தில். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. வாட்ஸ்அப் கால்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. அதுவும் அந்த குழந்தை ஓய்வு காலங்களில் எல்லோரும் வாட்ஸ்அப் வீடியோ கால்களில் கான்பரன்சிங் மூலம் பேசிக்கொள்கிறார்கள்.

என்ன வாட்ஸ்அப் இல் ஸ்டேட்டஸ் வசதியும் அறிமுகம் செய்தார்கள். முதலில் 30 நொடிகள் இருந்த ஸ்டேட்டஸ் வச்சது இப்போது 15 நொடிகள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் என்று வாட்ஸ்அப் பயனாளிகள் கூறுகிறார்கள். உண்மையாக சொல்லப்போனால் வாட்ஸ்அப் மக்களின் பிரிவை வெகுவாக குறைந்துள்ளது, பரிவு அதிகமாகி உள்ளது என்றே கூறலாம். ஆனால் எந்தவித கண்டுபிடிப்புக்கும் ஒரு நெகட்டிவ் சைடு உண்டு. வாட்ஸ்அப் இன் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. கால் டப்பிங் கால் ரெக்கார்டிங் கால் மானிட்டர் என்று சர்ச்சைகள் எழுந்தாலும் இது முற்றிலும் பாதுகாப்பானது தான் என்று அந்த நிறுவனமே கூறினாலும்... சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

வாட்ஸ் அப்பை இன்னொரு பெரிய சிக்கல் வதந்திகள். வாட்ஸப்பில் வரும் செய்திகளை பலர் உண்மை என்று நம்பி அதை எண்ணற்ற அவருக்கு அனுப்பி விடுகிறார்கள். எனவே அதை நம்பி மக்கள் மனதில் தேவையற்ற பீதியும், பதட்டமும் ஏற்படுகிறது. அதை குறைக்க இப்போது வாட்ஸ் அப்பில் பார்வர்டு செய்யப்படுகிறது என்று குறைகள் தென்பட்டாலும். சாதாரண மக்கள் சாமானிய மக்கள் அதை புரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் ஆகும் என்றே தோன்றுகிறது.


12 

Share


S
Written by
Shankar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad