Bluepadபார்த்திபன் கனவு - அமரர் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் வரலாற்றுப் புதினம்
Bluepad

பார்த்திபன் கனவு - அமரர் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் வரலாற்றுப் புதினம்

h
himanshu
6th Jul, 2020

Share

இன்று நமக்கு ஓரளவிற்கு கால அவகாசம் இருக்கிறது ஆகையால் நமக்கு பிடித்த தமிழ் நூல்களை தேடித் தேடி படிக்கும் வாய்ப்பு இந்த கொரோனாவால் கிடைத்திருக்கிறது., சற்று ஆறுதலான விஷயம் தான். நமது குடும்பத்தாருடன் கூடி பேசும்போது அவர்கள் பல விஷயங்களைக் கூறுவார்கள்.




சென்ற தலைமுறை மனிதர்கள் அநேகம்பேர் மிக நல்ல வாசிப்பாளர்கள்! அவர்கள் படிக்கும் வேகத்திற்கு நாமெல்லாம் அவ்வளவு எளிதாக ஈடு கொடுத்துவிட முடியாது. மிகப் பெரிய நாவல்களைக் கூட ஒரே நாளில் படித்து முடித்து தூர வைத்து விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்.

அப்படி எனது அத்தை சிபாரிசு செய்த புத்தகம் தான் “ பார்த்திபன் கனவு “ , நான் எந்த அழகில் தமிழ் படிப்பேன் என்று அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். எனவே தான் அவர்கள் இதைவிட பெரிய புத்தகங்களை பரிந்துரைக்க வில்லை.

இந்தப் புத்தகத்தை படிக்கவே நான்கு நாட்கள் ஆனது எனக்கு . அனால் அந்த நான்கு நாட்களும் அப்படியே கற்பனை உலகத்தில் மிதப்பது போன்ற ஒரு அனுபவம். நல்ல தமிழ் நடையின் வாயிலாக அந்த அருமையான பல்லவர்கள் காலத்திற்கே சென்றது போன்ற ஒரு உணர்வு.

அமரர் கல்கி அவர்களின் எழுத்துக்கள் அப்படியே நம்மை கதையின் நிகழ்விடத்திற்க்கே இட்டுச்செல்லும் . அவரது வருணனைகள் அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை .

1940 களின் வாக்கில் வெளிவந்த இந்நாவல் முதலாம் நரசிம்மபல்லவரின் பிற்பாதி வாழ்க்கையை விவரிக்கிறது . பல்லவர்களின் ஆட்சி ,படை பலம் , ரசனை , வீரம் , கொடை , நேர்மை , பண்பாடு ஆகியவற்றை அமரர் கல்கியின் எழுத்துக்களால் மேலும் நன்றாகவே உணரமுடிகின்றது .

பல்லவர்களின் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக சுருங்கிவிடும் சோழர் ஆட்சி , அதை எப்படியாவது பண்டைய சோழர்களின் பெருமையை மீட்டு எடுத்து சுதந்திர பிரதேசத்தை ஆளவேண்டும் என்பதே பார்த்தீப மன்னனின் கனவு , அதை தனது ஆசை புதல்வனிடம் , அதாவது விக்ரமனிடம் கூறுகின்றார்.

பிறகு பல்லவர்களுடன் ஏற்படும் போரில் வீர மரணம் அடைகின்றார் . அவரது கனவு எப்படி யார் மூலமாக நிறைவேறுகிறது என்பதே இந்நாவலின் கதை. நாவலின் ஆசிரியர் கதையின் ஒரு முக்கியத் திருப்பதையே நம்மை யூகிக்க வைத்துவிட்டு கொஞ்சமும் தொய்வின்றி விறுவிறுப்புடன் கதையை நகர்த்தி நம்மை பரவசப்படுத்தியுள்ளார்.

உண்மையான வரலாற்று மாந்தர்களான முதலாம் நரசிம்மபல்லவர் , சிறுத்தொண்டர் நாயனார் ,பார்த்திப சோழன் , புலிகேசி ஆகியோரை மிகவும்திறம்பட பயன்படுத்தியுள்ளார். இடையிடையே அவனுக்கே உரித்தான சமகாலத்து நிகழ்வுடன் பொருத்துதல், சராசரி சாதாரண மனிதரின் முக்கியத்துவம் என அவரின் முத்திரை இந்நாவல் நெடுக உள்ளது.

இந்நாவல் பல்லவசாம்ராஜ்யத்தின் வரலாற்று குறிப்பு போன்றே உள்ளது , வாதாபி படையெடுப்பு , மஹாபலிபுரம் சிற்பக்கலை , கோவில் திருப்பணி , நரபலிகளை நரசிம்மர் தடுப்பது , பரஞ்சோதியாக இருந்த நரசிம்மரின் படைத்தளபதி சிவபக்தியில் தழைத்து சிறுதொண்டராவது , அப்பர் சுவாமிகளின் குறிப்பு என இந்நாவல் ஒரு வரலாற்றுக் களஞ்சியம். சோழர்களின் தலைநகர் , அம்மக்களின் பண்பாடு , போர்திறம் , குடிமக்களின் விசுவாசம் , சாதுர்யம் போன்றவையை மிக சிலிர்ப்பூட்டும் வகையில் அருமையாக எழுதியுள்ளார் . பல்லவர் புத்தரிக்கும் , விக்ரமனிற்கும் இடையில் உள்ள காதல் ரசமோ ரசம்! பல்லவரின் புத்திரி கேட்கும் கேள்விகளும் , அதற்க்கு நரசிம்மர் சொல்லும் பதிலும் அற்புதம் .

படகு ஓட்டி , அவனின் மனைவி , வேடதாரி சாமியார் என விசித்திரமான பாத்திர படைப்புகள். அந்த யுத்த காட்சிகளின் வருணனை அதி வினோதம்! நல்லத் தமிழ் படிக்க விரும்பும் அனைவரும் படிக்கவேண்டிய நாவல் இது. அதுமட்டுமல்ல நம்முடைய கற்பனை குதிரை ரெக்கை கட்டி பறக்கவும் , பரவசப்படவும் இது பெரிதும் உதவும்.





22 

Share


h
Written by
himanshu

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad