Bluepad | Bluepad
Bluepad
தடை செய்யப்பட்ட சீனா ஆப்கள் - இதுவே இந்திய சுய சார்பிர்க்காண நேரம்.
A
Ananth A.
5th Jul, 2020

Share

சைனா நாட்டிற்கு எதிராக நமது இந்தியர்கள் அனைவரும் இப்போது மிகுந்த கொதிப்பில் இருக்கிறார்கள் அவர்கள் எல்லை தாண்டிய ஊடுருவல்களில் ஈடுபட்டது முதல் பொதுமக்கள் அனைவரும் சைனா நாட்டின் மீதும் , அவர்களின் பொருட்களின் மீது கடும் கோபத்தில் தான் இருக்கிறார்கள்.


தடை செய்யப்பட்ட சீனா ஆப்கள்  - இதுவே இந்திய சுய சார்பிர்க்காண நேரம்.


அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக நேற்று மத்திய அரசு 49 சைனா ஆப்களை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த செயலிகள் தடைபடுவதற்கு முக்கிய காரணமே நமது பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடுமோ என்கிற சந்தேகம் தான். அதற்கான முகாந்திரம் இருக்கிறது…! ஒரு செயலியை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

நமது அனுமதி இன்றி நமது செல்போன் கேமராவை இயக்க முடியும் நமது திறவுகோலை திருட முடியும் என்ற பல சந்தர்ப்பங்களை இந்த நுண்செயலிகள் வழங்கி இருக்கின்றன. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள் "சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை தடுத்துவிட முடியுமா?" என்பது போன்ற கேலியும் கிண்டலும் அடித்து வந்தாலும் , இந்த நடவடிக்கைக்கான ஆதரவு உள்நாட்டு மக்களிடம் பெருகி தான் வருகிறது.

அந்த சீன தூதரகமும் இந்த நடவடிக்கை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தெரிவித்து இருக்கிறது மேலும் இது இந்தியர்களின் வேலை வாய்ப்பை பாதிக்கலாம் என்கின்ற எச்சரிக்கையை கூடவே விடுத்திருக்கிறது. டிக் டாக் நிறுவனம் நாங்கள் இந்திய அரசாங்கத்தின் நெறிமுறைகளை மதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறது. இதெல்லாம் இந்திய அரசாங்க நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.

அதை தொடர்ந்து இந்திய தயாரிப்புகளான ஆப்புகள் மற்றும் அப்ளிகேஷன்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. நமது நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்து நமது நாட்டு காரர்கள் தயாரித்த தயாரிப்புகள் தான் மிகுந்த வரவேற்பு பெறும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. சைனா நாடு உலகில் உள்ள பல அப்ளிகேஷன்களை தடை செய்து வைத்துள்ளது அவர்கள் ஜிபிஎஸ் , ஜிபிஆர்எஸ் போன்ற எதையுமே பயன்படுத்துவதில்லை.

அவர்கள் தேவைக்கு எல்லாவற்றுக்கும் அவர்கள் பிரத்தியேக அப்ளிகேஷன்களை வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் உலக நாடுகள் எதையுமே சார்ந்து இல்லை…!அவர்களுடைய பாதுகாப்பு எந்தவிதத்திலும் கேள்விக்கு உள்ளவதில்லை.

நமது நாட்டை எடுத்துக் கொண்டால் நாம் பல வெளிநாடுகளின் சாப்ட்வேர்களை தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம் இப்போது நம் கார்களில் பயன்படுத்தும் ஜிபிஎஸ் கூட அமெரிக்காவின் ஒரு தொழில்நுட்பம்தான். தற்போதுதான் இந்தியா அந்த ஜிபிஎஸ்ற்கு மாற்றாக ஒரு பிரத்தியேக செயலியை உருவாக்கி உள்ளது.

அதேபோல இந்தியர்கள் நாம் பயன்படுத்தும் வகையில் நமது மொழிகளுக்கு தகுந்தவாறு பல செயலிகளை உருவாக்கி வருகிறார்கள். அப்படி நமது நாட்டு மக்களுக்கான நமது நாட்டு மக்களின் தேவையும் திறனையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டதே இந்த "புளூ பாட்" செயலி.

இந்த செயலியில் உங்கள் மனதுக்குப் பிடித்தமான கதைகளை படிக்கலாம், கவிதைகளைப் படித்து ரசிக்கலாம் , நீங்களும் ஒரு படைப்பாளியாக மாறி எழுதலாம்., உங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். உங்களுக்கு பிடித்த வகையில் எந்த சிரமமும் இல்லாமல் உங்களது படைப்புகளை சில நொடிகளில் உலக மக்களுக்கு நீங்கள் வெளியிடலாம். இது நம் மக்களுக்கான நமது நாட்டின் தயாரிப்பு.

இப்படி நமது நாட்டில் இத்தகைய தயாரிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க தான் நாம் சுயசார்பு பற்றியே பேச முடியும். அதற்காக அவர்கள் செய்வதைத்தான் நாம் அப்படியே செய்ய வேண்டும் என்பது இல்லை இப்போது டிக் டாக் செயலி போல காப்பி எடுத்து பல செயலிகள் வந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் வரவேற்பு என்பது அந்த அளவுக்கு இருக்குமா என்றால் சந்தேகம்தான்…!

ஏனென்றால் நாம் அவர்கள் உருவாக்கிய வழியையே நாமும் பின்தொடர்ந்து சென்றால் அந்த அளவிற்கு ஒரு பெரிய தாக்கம் இருக்காது. நமது மக்கள் விரும்பும் பல விஷயங்களை நாம் தேடி கண்டுபிடித்து, மீண்டும் அவர்களுக்கு கொடுத்தால் மிகச் சிறப்பான ஒரு செயலாக இருக்கும். அத்தகைய ஒரு தனித்துவமான தயாரிப்புதான் நமது "ப்ளூ பாட்" செயலி.

21 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad