Bluepadவியக்கத்தகுந்த சம்பாதித்ததை வழங்குகிறதா பிரீலன்ஸிங்?
Bluepad

வியக்கத்தகுந்த சம்பாதித்ததை வழங்குகிறதா பிரீலன்ஸிங்?

G
Gayathri
4th Jul, 2020

Share

காலம் நன்றாக மாறிவிட்டது முன்புபோல் கிடையாது. சென்ற தலைமுறை வரை ஒருவேளை என்றால் காலையில் செல்வது, மாலையில் வருவது என்று இருந்தது. இப்போது ஓரிரண்டு தசாப்தமாக ஷிப்ட் முறைகளில் பல புதுமைகளும் புரட்சிகளும் ஏற்பட்டுவிட்டது. அதுவும் இந்த நோய்த்தொற்று காலங்களில் பலர் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நிலை உருவாகி வருகிறது.




இது இத்தோடு முடிவதில்லை என்று கூறுகிறார்கள் இந்த துறைசார் நிபுணர்கள். இதுமாதிரி வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் ஓரளவிற்கு நல்ல பலன்களைக் கொடுத்து விட்டதால் இது மென்மேலும் வளரும் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு பிரீலன்சர் எனப்படும் ஒரு குறிப்பிட்ட நேர வரைமுறை இல்லாமல் கொடுத்த வேலையை முடித்துக் கொடுக்கும் நிபுணர்களின் தேவை மிக அதிகரித்து வருகிறது!!

பிரீலன்சர் ... இது சாத்தியமா?

பிரீலன்சர் எனப்படும் பகுதி நேர வேலை அல்லது வரைமுறை அற்ற வேலை முறையில் பல சிக்கல்களும் இருக்கிறது. குறிப்பிட்ட சம்பளம் என்று எதுவும் நாம் நிர்ணயித்து பெற முடியாது. ஆனால் நமக்கு வரும் பிராஜெக்ட்கள் எப்பொழுது நாமே நமக்கு தேவையான சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.

இந்த வேலைகளில் தொடர்ந்து பிராஜக்ட் வருமா என்பது தான் சிக்கல்!!. இப்போது ஒருவர் ஒரு துறையில் வல்லுனராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம் , உதாரணத்திற்கு ஜிஎஸ்டி பதிவு செய்வதில் ஒருவர் நிபுணராக இருக்கிறார் என்றால் அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தார் என்றால் அவருக்கு முப்பதாயிரம் அல்லது நாற்பதாயிரம் என்று ஒரு குறிப்பிட்ட சம்பளம் தான் கிடைக்கும் .

ஆனால் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு அதே வேலையை பிரீலன்சர் ஆக செய்தால் ஒரு கிளையின்டிடமே அதற்கும் மேலாக என்று ஈசியாக பெற்றுவிட முடிகிறது. நன்றாக தெரிந்த ஒரு வேலையை கையில் வைத்துக்கொண்டு அதையே தொழிலாக செய்ய துவங்குபவர்கள் தான் இந்த பிரீலன்சர் ... ! கற்ற வித்தையை முதலீடாக பயன்படுத்து சாதித்து வருகிறார்கள் இந்த ஃப்ரீலான்ஸ்சர்கள் .

இந்தத் தொழில் முறையை பொறுத்தவரை ஒரே மாதத்தில் ஆறு அல்லது ஏழு இலக்க வருமானமும் வரும் அதற்கு. அடுத்த மாதத்தில் வருமானமே இல்லாமல் கூட போகும். ஆண்டு வருமானம் என்று பார்த்தோம் என்றால் நாம் முழு நேர வேலை செய்வதை விட இதில் 10 முதல் 30 சதவீதம் அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள் இந்த துறைசார் நிபுணர்கள்.

இதில் பல ரிஸ்குகளும் இருக்கிறது...

நம்மிடம் வேலையை வாங்கிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பணம் தராமல் கம்பி நீட்டி விடவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தான் இந்த துறை தொழிலை மேற்கொள்பவர்கள் அட்வான்ஸ் பேமென்ட் கரந்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் துறையை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு அருமையான திட்டமிடல் அவசியம் நம்ம இப்போது பலபேர் இந்தத் துறையில் டுயூஷன் வகுப்புகள் எடுத்து கைநிறைய சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் முன்பை போல குறைவான வாய்ப்புகள் இப்போது இல்லை. வாய்ப்புகளை நாம் தான் தேடி அதற்கு தகுந்தார்போல் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இதனால் குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் செய்து சம்பாதிக்க முடியும் என்ற நிலை உடைக்கப்பட்டு விட்டது.

முன்னரே குறிப்பிட்டது போல இந்த துறையில் லாபம் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான சில அர்ப்பணிப்புகள் தேவை. நமக்கு தகுந்த வாடிக்கையாளரை நாம் தான் தேடி செல்ல வேண்டும். நாம் இந்த துறையில் முழுவதாக இறங்குவதற்கு முன்னால் அவசரப்பட்டு இருக்கும் வேலையை விட்டுவிடுவது சரியான முடிவாக இருக்காது. ஒரு திறமையான வேலையை பார்த்துக்கொண்டு துறையில் பலர் ஜொலித்து வருகிறார்கள். முக்கியமாக இந்த கணிதம், இயற்பியல், டிசைனர் போன்ற பாடங்களை கற்றுக் கொடுப்பவர்கள் இதில் அதிகமாக சம்பாதித்து வருகிறார்கள்.



20 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad