Bluepadகொரோனா தடுப்பு பணிகளில் திருநங்கைகளின் அபார செயல்பாடுகள்!
Bluepad

கொரோனா தடுப்பு பணிகளில் திருநங்கைகளின் அபார செயல்பாடுகள்!

V
Venkatesh Ramanan
4th Jul, 2020

Share

திருநங்கைகள் அல்லது மூன்றாம் பாலினத்தவர் இந்த சமுதாயத்தில் மிகவும் கேலிக்கும் , வெறுப்புக்கும் உள்ளாகிறார்கள் அவர்களின் வாழ்க்கை என்ன தான் பாடுபட்டாலும் ஒரு தளத்திற்கு மேல் முன்னேறி செல்வதே இல்லை. சினிமாக்களில் நாடகங்களில் கடந்த தலைமுறை வரை அவர்களை மிகவும் கொச்சைப்படுத்தி தான் காமித்து வந்தார்கள் ஆனால் அந்த நிலை இன்று படிப்படியாக மாறி இருக்கிறது.




இப்போது அவர்களில் பலர் நன்றாக படித்து அதிலும் ஒரு சிலர் அரசாங்க வேலையில் கூட இருக்கிறார்கள். ஆனால் அதில் அந்த சமுதாயத்தில் சில பேர் ரயில்களில் கை தட்டியோ, பாடியோ பணம் வசூலிப்பதை மிகவும் பெரிது படுத்திக் கொண்டு அவர்களை மிகவும் நோகடிகின்றனர்.

இவர்களை சமுதாயம் புறம் தள்ளாமல் பார்த்துக்கொள்ள அரசாங்கம் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் அது பெரிய அளவில் பயன் தரவில்லை. அவர்களுக்கான ஆசிரியர் பணி நியமனமும் தற்போது இந்தியாவின் ஒரு சில இடங்களில் அரங்கேறி வருகிறது. இப்படி இருக்கின்ற இந்த காலகட்டத்தில் தமிழக அரசு குறிப்பாக சென்னை கார்ப்பரேஷன் ஒரு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொரோணா பாதிப்புக்கு உட்பட்டவர்களின் கணக்கெடுக்கும் பணிகளில் 50 முதல் 70 திருநங்கைகளை நியமித்திருக்கிறது. அவர்கள் வட சென்னை மத்திய சென்னை போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்று இந்த கணக்கெடுப்பை செய்து வருகிறார்கள். ஆரம்பத்தில் அவர்களே வழக்கம்போல கிண்டலும் கேலியும் செய்து தோற்று வந்தாலும் நாளடைவில் அவர்கள் செய்யும் சேவையை கண்டு மனம் இளகி போது அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்கள்.

இவர்கள் ஒரு சேவை அமைப்புடன் இணைந்து கோவிட் 19 நோய் குறித்தும் , அந்த நோய் பாதிக்கப்பட்டவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நெடிய விளக்கங்களைக் கொடுத்து வருகிறார்கள்.இந்த நெருக்கடி கால கட்டத்தில் வேலைக்கு ஆட்களை கூப்பிட்டாலும் அச்சம் காரணமாக வராமல் இருந்தனர்.

ஆனால் இந்த மூன்றாம் பாலினத்தவர்கள் துணிச்சலாக இந்த வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர் எனவே அவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை கொடுத்து அவர்களை சேவையாற்ற வைத்துவிட்டனர்…!, அவர்களும் இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி அவர்களின் சேவையை அடுத்த தளத்திற்கு தற்போது கொண்டு சென்று வருகிறார்கள்.

இவர்கள் இப்படி பணியாற்றுவதை பார்த்து அந்த சமூகத்தை சேர்ந்த மேலும் பலரும் எங்களுக்கு இந்த வாய்ப்பு வழங்குங்கள் என்று கூறி வருகிறார்கள் இது ஒரு ஆரோக்கியமான செயல்.

சென்னையின் ஜனத்தொகை பொருத்தவரை இன்னும் எத்தனை ஆட்களை போட்டாலும் வேலை பற்றாக்குறை ஏற்படும் நிலை இருக்கிறது எனவே இவர்களின் சேவை கண்டிப்பாக நமது சென்னைக்கு தேவை !! எனவே இவர்கள் மீது உள்ள மதிப்பு நமது சமுதாயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி வருகிறது.

வெறும் கணக்கெடுப்பு அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் எப்படி மருந்துகளை சாப்பிட வேண்டும், எப்படி பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் எந்தெந்த விதி முறைகளை கையாண்டால் இந்த நோய் நம்மை தொடராது என்பது போன்ற விளக்கங்களையும் அவர்களாக கொடுத்து வருகிறார்கள்.

இதைப்பற்றி கூறும் அவர்கள் “எங்களுக்கு இத்தகைய பணியை வழங்கி அரசாங்கம் மிகப்பெரிய கவுரவத்தை ஏற்படுத்தி வருகிறது ஆரம்பத்தில் மக்கள் எங்களை உதாசீனப்படுத்தினாலும் இப்போது எங்கள் அறிவுரையை ஏற்க முன் வந்திருக்கிறார்கள் வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறார்கள் இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் எங்களால் உருவாக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபிப்போம்” என்று கூறி வருகிறார்கள்.

இது ஒரு ஆரோக்கியமான மாற்றமாக இருந்தாலும் இது வெறும் ஆரம்பப்புள்ளி தான் இது நாளடைவில் தொடர தொடர தான் அவர்களுக்கும் இந்த சமுதாயத்தில் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் அவர்களின் வாழ்க்கையும் தடம் மாறும்.



0 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad