Bluepadமழையும் விழியும்
Bluepad

மழையும் விழியும்

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
4th Jul, 2020

Share

மழையே விழுந்தாய் மண்ணில்.
    விழியே விழுந்தாய் என்னில்.

மழையே உன்னால் வானில் மின்சாரம்.
    விழியே உன்னால் என்னில் கண்சாரம்.

மழையே மண்ணை அணைத்து ஓடுகிறாய்.
     விழியே என்னை அணைக்க தேடுகிறாய்.

மழையே மண்ணில் விழும்போது
மண்வாசனை.
    விழியே என்னில் விழும்போது
உன் வாசனை.

மழையே உன்னால் மண் நனைகிறது.
     விழியே உன்னால் இரு கண்
இணைகிறது.

மழையே உன்னால் மண்
 குளிரும்.
     விழியே உன்னால் என் கண் 
மிளிரும்.

மழையே உன்னால் பயிர்  செழிக்கும்.
     விழியே உன்னால் உயிர் சிலிர்க்கும்.

மழையே கருமேகம் உன் குடியிருப்பு.
     விழியே சிறு தேகம் உன் குடியிருப்பு.

மழையே கரை கடந்து 
ஓடுவாய்.
     விழியே விழி திரை கடந்து
ஓடுவாய்.

 


         - - நெப்போலியன் விக்ரான்

7 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad