Bluepadசெம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால் இத்தனை பயன்களா?
Bluepad

செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால் இத்தனை பயன்களா?

R
Reshma us
3rd Jul, 2020

Share

செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவது நமது தமிழகத்தின் கலாச்சாரம். அந்த கலாச்சாரம் இப்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கிறது. சூப்பர்மார்க்கெட், மால், ஆன்லைன் ஷாப்பிங் என்று எங்கு தேடினாலும் இந்த செம்பு பாத்திரம் வகைகள், செம்பு தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கிறது.




இந்த செம்பு பாத்திரத்தில் நீரை வைத்து அடுத்த நாளைக்கு குடிக்கும் ( 4 முதல் 6 மணி நேரம் வரை வைத்து குடிக்கலாம் ) போது அதில் எண்ணற்ற பலன்கள் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பதிவில் நாம் அதன் ஒருசில பயன்களைப் பார்ப்போம்.

தைராய்டு பிரச்சனைகளுக்கான தீர்வு:

இன்றைய காலகட்டத்தில் நமது நகரவாசிகள் பெரிதும் பாதிக்கப்படுவது இந்த தயிரா யுட் பிரச்சனைகளால் தான் ! கழுத்து முகம் பெரிதாக வீங்கி விடுகிறது. தைராய்டு சுரப்பியில் ஏற்படும் சில பிரச்சினைகளை இந்த செப்பு நீரில் தண்ணீரை வைத்து குடிக்கும் போது கேட்கப்படுகிறது. இந்த பலன் பலருக்கு தெரிவதில்லை. நாள்பட நாள்பட இந்த தைராய்டு பிரச்சினைக்கு இந்த செப்பு தண்ணீர் அருமையான பலன்களை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி:

செம்பு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து குடிப்பதன் மூலம் எந்த வித நோயையும் எதிர்க்கும் சக்தி உடலுக்கு தானாகவே கூடுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த விஷயம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் நமது மக்கள் பலருக்கு தெரிய வந்தது அதன் காரணமாகத்தான் எங்கு பார்த்தாலும் இந்த செப்பு குடிநீர் குடுவைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

சருமம் ஜொலிக்க:

தண்ணீர் பிரச்சனை என்று பெருநகரங்களில் மிகப் பெரிய சிக்கல். சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வரும் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் நிறைய கன்னங்கரேலென்று இருக்கும்.இப்படி ஏரியாவிற்கு ஒரு தண்ணீர் இருப்பதால் பலருக்கு மேனியில் சில கரும்புள்ளிகளும் தோன்றுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு இந்த செம்பு நீர் குடிநீர் மிக அருமையான மருந்தாக உதவுகிறது.

உடல் எடை கூடாமல் தவிர்க்கிறது :

இந்த செம்பு தண்ணீரில் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுவது உடல் எடையை கூடாமல் பார்த்துக் கொள்கிறது இந்த செம்பு பாத்திரங்களில் தண்ணீரை வைத்து குடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுடன் உடல் எடை கூட காரணமாக விளங்கும் கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதன் காரணமாக உடல் எடையும் சீரான கட்டுக்கோப்பில் விளங்குகிறது. இதற்கு ஒரு நாள் அல்லது ஒரு வாரம் மட்டும் கொடுத்தால் போதாது தொடர்ந்து 3 மாதமாவது இப்படி நீர் பருக வேண்டும்.

இருதய நோய் ஏற்படாமல் காக்கிறது:

இந்த செம்பு உலோகங்களில் நீரை வைத்து குடிக்கும் போது இருதய நோய் ஏற்படாமல் பாதுகாப்பாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் வயது அதிகமாக தோன்றும் தோற்றத்தை இது நன்றாக குறைகின்றதாம் ! தெரிந்தோ தெரியாமலோ நாம் பயன்படுத்தி வந்த இந்த செம்பு பாத்திரம் குடிநீர் வழக்கம் இத்தனை பயன்கள் இருக்கிறது என்று தெரிந்தால் நாம் இதை தொடர்ந்து பயன்படுத்தலாமே. கண்டகண்ட கெமிக்கல்களை நல்லது என்று நம்பி ஏமாறும் நாம் நமது தொன்றுதொட்ட பாரம்பரியத்தை ஏன் கை விடுவானே?

இது மட்டுமல்லாமல் இந்த நீரின் சுவை தற்போது பலருக்கும் பிடித்திருக்கிறது. சாதாரண கேன் வாட்டர் தண்ணீர் அந்த அளவு எதுவும் சுவை தெரியாது. ஆனால் செம்பு நீரில் குடிக்கும் போது ஒரு வித்தியாசமான சுவை தோன்றுகிறது அது மட்டுமல்லாமல் அந்த காலத்திலிருந்தே ஆலயங்களில் செம்பு , பித்தளை போன்ற உலோகங்களால் ஆன குடத்திலிருந்து தான் நீரெடுத்து கோவிலில் பிரசாதமாக தீர்த்தம் வழங்கி வருகிறார்கள். இது நமது முன்னோர்கள் கண்ட அறிவியல்.

சில நாட்கள் இது புழக்கத்தில் இல்லாமல் இருந்தாலும் இன்று அருமையான கண்கூடான பலன்களை வழங்கி வருகிறது.


13 

Share


R
Written by
Reshma us

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad