Bluepadஇந்த லாக்டோன் காலகட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்!
Bluepad

இந்த லாக்டோன் காலகட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்!

h
himanshu
3rd Jul, 2020

Share

தமது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு யாருக்குமே உரிமை கிடையாது இது வலியுறுத்தவே தற்கொலை என்பது தண்டனைக்குரிய குற்றமாக அரசு அறிவித்துள்ளது... ஆனால், சமீபகாலமாக இத்தகைய தற்கொலைகள் மிகவும் பேருகி காணப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நமது தேசிய அளவில் பெரிய பெரிய தற்கொலைகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.




நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்:

சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாறை அப்படியே தத்ரூபமாக நமது கண்முன்னே காட்டியவர். எம்எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரில் அப்படியே நடித்துக் காட்டியவர்.ஆனால் கடந்த 10 தினங்களுக்கு முன்பு யாருமே எதிர்பாராதவிதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு ஸ்டர்ஸ் தான் காரணம் இன்னும் சிலரும். இல்லை தொழில் போட்டி காரணம் வரும் வாய்ப்புகளை பெரிய பெரிய நட்சத்திர நடிகர்கள் பறித்துவிட்டார்கள். அதனால்தான் அவர் மனமுடைந்து இறந்தார் என்று சிலரும் கூறி வருகிறார்கள்.

இருட்டுக்கடை அல்வா ஓனரின் தற்கொலை:

இந்தியா முழுவதும் மிகப் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையின் ஓனர் ஆன திரு ஹரி சிங் அவர்கள் சில தினங்களுக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார். இந்த covid-19 நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்தார்... மருத்துவமனையின் மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கு இன்னும் சரியான காரணங்கள் வெளியே தெரியவில்லை. தமக்கு இந்த நோய்த் தொற்று இருப்பதால் நம்ம கடைக்கு வந்தவர்களுக்கு இந்த நோய்த் தொற்று பரவி இருக்கலாமோ என்கிற குற்ற உணர்வுதான் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கூறுகிறார்கள்.

பிரியாணி கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட மனைவி:

மாமல்லபுரத்தில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட ஒரு தகராறு தற்கொலையில் முடிந்திருக்கிறது. மாமல்லபுரத்தில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் இருந்திருக்கிறார்கள். ஒரு பிரியாணி கடையில் ஆஃபரில் பிரியாணி வாங்கி வர சொல்லி கணவன் அனுப்பி இருக்கிறார் மனைவி. கணவர் அந்த கடைக்கு சென்ற நேரம் பிரியாணி விற்று தீர்ந்து விட்டது எனவே குஸ்கா வாங்கி வந்திருக்கிறார்.

அதற்கு கணவன் மேல் கடும் கோபம் கொண்ட மனைவி அவர் வாங்கி வந்த குஸ்காவை வீட்டுக்காரரிடம் கொடுத்துவிட்டார் விறுவிறு என்று கீழே சென்ற அவர் காலி வாட்டர் பாட்டில் கணவரின் வண்டியில் இருந்த பெட்ரோல் நிரப்பிக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று தன் மீது ஊற்றிக்கொண்டு கொளுத்திக் கொண்டு விட்டார்.

விஷயமறிந்த கணவர் பதிவு சென்று அவரை காப்பாற்றுவதற்கு 80 சதவீத தீக்காயம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. பதறியடித்துக்கொண்டு அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.

அந்த பெண்ணின் மரண வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது" என் கணவர் என் மீது பாசமாக தான் இருந்தார். நான் அவரை பயமுறுத்த இத்தகைய செயலில் ஈடுபட்ட அவர் என்னை எப்படியாவது காப்பாற்றி விடுவார் என்று நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்று கூறியிருக்கிறார். பிரியாணிக்கு எல்லாம் தற்கொலை செய்து கொண்டால் என்னத்துக்கு தான் ஆவது.

அனைவர் வாழ்விலும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது நாம் மேலே குறிப்பிட்ட மூன்று விதமான சம்பவங்களிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. எதிர்கொண்டு வாழ்வதே சிறந்தது. தொட்டதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தால் உலகில் வாழ மனிதர்களே இருக்க மாட்டார்கள்.

இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரே ஒரு சின்ன ஏமாற்றத்தையும் கூட தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு சிறந்த கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது அதையே மனோதத்துவ நிபுணர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த தற்கொலைகள் ஒருபுறமிருக்க இந்த covid-19 ஊரடங்கு வேலைக்கு செல்ல முடியாதவர்கள், வேலை இழந்தவர்கள் வேறு ஒருபுறம் இந்த தற்கொலை முடிவை எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கும் இந்த கவுன்சிலிங் கண்டிப்பாக தேவைப்படுகிறது.

23 

Share


h
Written by
himanshu

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad