Bluepadதிருமணத்துக்கு முன்பு உடலை பிட்டாக வைத்துக் கொள்வது எப்படி?
Bluepad

திருமணத்துக்கு முன்பு உடலை பிட்டாக வைத்துக் கொள்வது எப்படி?

A
Arvind Kumar
2nd Jul, 2020

Share

வாழ்வில் ஒருமுறை கூட உடற்பயிற்சி செய்யாதவர்கள் கூட திருமணத்திற்கு ஆறுமாதம் முன்னாடி நான் யோகா கிளாஸ் போகிறேன், நான் மெடிடேஷன் செய்யப் போகிறேன், நான் ஜிம் சேர்ந்து எக்ஸர்சைஸ் பண்ண போகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டு திரிகிறார்கள். இதில் ஆண், பெண் இருவருமே அடக்கம்!




திருமணம் ஆகப்போகிறது என்று தெரிந்தவுடன் எப்படித்தான் வருகிறதோ இந்த ஹெல்த் கான்சியஸ் என்று புரியவில்லை!! ஒருவேளை போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போதும் வீடியோவிலும் பிட்டாக தெரிய வேண்டுமே, க்யூட்டாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணமா?

உடற்பயிற்சி செய்தால் உடல் இளைப்பதற்கு என்று அர்த்தம் தான் இப்போது நிலவுகிறது!! ஆனால் உண்மையில் என்னவென்றால் உடற்பயிற்சி செய்தால் உடல் பிட்டாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலில் தோன்றும் தேவையில்லாத கொழுப்புகள் குறையும். அந்த கொழுப்புக்கள் கரையும் போது எடையும் தானாகவே குறையும்.

திருமணத்திற்கு முன்பு செய்ய கூடிய சில உடற்பயிற்சிகள்:

வாக்கிங்...!

நடை என்பது ஒரு மிகச்சிறந்த உடற்பயிற்சி அதை நாம் எப்படி பொறுப்பாக செய்கிறோம் என்று இருக்கிறது. ஒரு நாளைக்கு தடாலென்று 45 கிலோமீட்டர் நடப்பது அடுத்த நாளைக்கு அரை கிலோமீட்டர் நடப்பது என்று இருந்தால் இது சரிப்பட்டு வராது. சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 7 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் உடல் எடை கூடாமல் இருக்கும் என்று கூறுகிறது ஒரு ஆய்வு. நன்றாக காலையில், மாலையில் நடந்து பழகினாலே மிகச் சிறந்த ஒரு உடற்பயிற்சி.

யோகா... :

யோகா என்பது இன்று மிகப் பெரிய வியாபாரமயமாக்கப்பட்ட ஒரு கலையாக திகழ்கிறது. மற்ற உடற்பயிற்சிகளை விட இதற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். அப்படி வசூலித்தால் முறையாகப் கற்று தருகிறார்களா என்றால் அதுவும் இல்லை!! உண்மையில் யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் சீராக இயங்கும், தேவையற்ற பதற்றம் தானாகவே குறையும் முக்கியமாக ஸ்ட்ரெஸ் என்பது கணிசமாக குறையும்.

ஜிம் பாடி பில்டப்:

ஜிம்முக்கு செல்வது ஒன்றும் அப்படி ஒன்றும் தவறான விஷயம் கிடையாது. ஆனால் கன்னாபின்னாவென்று எந்த ஒரு மேற்பார்வையுமே இல்லாமல் உடற்பயிற்சி மேற்கொண்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

முறையான பயிற்சிகளை படிப்படியாக மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும். ஆனால் ஜிம்முக்கு செல்பவர்கள் பாதியில் விட்டுவிட்டு கன்னாபின்னாவென்று எடை கூடி விடுகிறார்கள். இந்த தவறை திருமணத்திற்கு முன்பு செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்தால் உடல் எடை கணிசமாக கூட வாய்ப்பிருக்கிறது.

சைக்கிள் பயிற்சி:

இன்று சைக்கிள் ஓட்டும் பயிற்சி வெகுவாக குறைந்து காணப்படுகிறது , ஒருசிலர் பிரதேசமாக புதிய சைக்கிள் வாங்கி அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். உண்மையில் சைக்கிள் ஓட்டினால் உடலில் உள்ள அனைத்து பாகமும் சீராக செயல்படும். நாம் மேற்கூறிய அனைத்து பலன்களும் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டுவதால் மட்டுமே கிடைத்து விடும்.

ஆனால் இதயும் லாவகமாக நாம் பயன்படுத்தவேண்டும். இதிலும் ஒரு சில விதிமுறைகள் இருக்கிறது. சைக்கிள் ஓட்ட சொல்லிவிட்டார்கள் என்று காட்டுத்தனமாக மிதித்தால் அதற்கும் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எதிலும் நிதானம் மிக மிக அவசியம்.

திருமணத்திற்கு முன்பு தான் இத்தகைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்று கிடையாது. திருமணமான பின்பு இத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. காலத்துக்குத் தகுந்தாற்போல நம் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த உடற்பயிற்சிகள் மிக மிக அவசியம்.

சாதாரணமாகவே ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் அந்த அளவுக்கு சீராக இருக்கும். நல்ல உடற்பயிற்சி செய்தவர்கள் எந்த நிலையிலும் சோர்வடைய மாட்டார்கள். உடற்பயிற்சி கொடுக்கும் சக்தியானது நமது வேலையிலும் எதிரொலிக்கும்.


5 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad