Bluepadஉலக மருத்துவர்கள் தினம் இன்று!
Bluepad

உலக மருத்துவர்கள் தினம் இன்று!

A
Ananth A.
1st Jul, 2020

Share

மருத்துவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது சாதாரண தலைவலி மாத்திரை போட்டால் கேட்க மாட்டேன் என்கிறது இதையே மருத்துவர்களே நமது உலகத்தில் இல்லாமல் இருந்து விட்டால் சிறு சிறு நோய்கள் கூட பெரிய பெரிய பிரச்சனையாக இருக்கும்.
இன்று உலகம் முழுவதும் உள்ள நோய்த்தொற்றை தைரியமாக எதிர்த்து போராடி வருபவர்கள் யார் என்று பார்த்தால் மருத்துவர்கள்தான் அவர்கள் உயிரை பணயம் வைத்து நம்மை போன்ற பலரை காத்து வருகிறார்கள். ஒரு மனிதன் கடவுளுக்கு அடுத்த கட்டத்தில் நம்புவது மருத்துவர்களை மட்டும்தான். மருத்துவர்களின் சேவை எத்தகையது என்பதை இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் தன்னலமற்ற மருத்துவர்கள்.

ஒரு காலத்தில் மருத்துவ வசதி குறைபாடால் நமது நாடு பல மடங்கு பின்தங்கி காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை சற்று மாறி இருக்கிறது அயல்நாடுகளில் இருந்து வருபவர்கள் இன்று இங்கு நமது இந்திய தேசத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டு திரும்ப செல்கிறார்கள். மருத்துவம் சில நாட்களுக்கு முன்னால் வரை பெரிய வியாபாரமாக தான் பார்க்கப்பட்டது. இன்றும் ஒரு சில மருத்துவமனைகள் அப்படித்தான் இருக்கிறது என்றாலும் மருத்துவர்கள் இந்த நோய்த்தொற்று காலத்தில் ஆற்றிய தன்னலமற்ற சேவையினல் தான் மிகப்பெரிய நற்பெயரை பெற்றிருக்கிறார்கள்.

இன்றும் கூட மாயவரம் பகுதியில் வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வரும் முதிய மருத்துவர் இருக்கிறார். சென்னையில் கூட டாக்டர் பீசே வாங்காமல் மருந்து மாத்திரைகளும் இலவசமாக கொடுக்கும் சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களெல்லாம் மிக அரிதிலும் அரிது. நாட்டு மக்கள் அரசாங்க மருத்துவமனைக்கு சென்றால் பாதுகாப்பு இருக்காது என்ற நிலையை அங்கு இருக்கும் திறமையான மருத்துவர்கள் பலர் மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.

மருத்துவமனையின் வசதிகளால் மட்டும் மருத்துவத்தின் தரம் மாறப்போவதில்லை. மருத்துவரின் திறமையால் தான் நோயாளி குணம் பெறுகிறார் என்கின்ற உண்மையை அவர்கள் பலமுறை இந்த உலகிற்கு எடுத்துக் கூறி வருகிறார்கள். ஒரு திறமையான மருத்துவர் இருந்தால் அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் போலத்தான் மருத்துவமனை இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை நோய்த்தொற்று பரவாமல் அவரின் திறமையை வைத்து மருத்துவம் பார்க்க முடிவதற்கு குக்கிராமங்களில் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் தான் சாட்சி.

மருத்துவர்கள் பலர் தமது இன்னுயிரை பணயம் வைத்து தான் பல்வேறு சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள். முன்பெல்லாம் மருத்துவர் என்றால் வெள்ளை நிற சீருடை கழுத்தில் ஒரு சட்டாஸ் கோப் என்று இருப்பார்கள் … இப்போது நிலைமை அப்படி அல்ல அவர்கள் மருத்துவம் பார்க்கும் போது மட்டும் தான் அந்த வெள்ளை நிற கோட்டை அணிகிறார்கள் மற்ற நேரங்களில் ஃபார்மல் உடை அணிந்து சட்டாஸ் கோப் அணிகிறார்கள் காலம் மாறுகிறது அல்லவா.

மருத்துவத் துறையும் பல்வேறு நினைத்துப் பார்க்க முடியாத அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது முன்பெல்லாம் உடல் முழுவதும் பரிசோதிக்க ஒரே ஒரு ஜெனரல் பிஸீஷியன் தான் இருப்பார்.ஆனால் இப்போது உடலில் இருக்கும் அனைத்து பாகத்திற்கும் மருந்துகள், மருத்துவ முறைகள் வந்துவிட்டன.

மருத்துவர்கள் அவர்களின் சேவையை சரிவர செய்யாமல் போயிருந்தால் இந்நேரத்தில் நமது நாட்டில் நோய் தொற்றால் மடிந்தவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட கோடிகளை கடந்து சென்றிருக்கும். இன்று மட்டுமல்ல அன்று ஏற்படும் தொற்றுநோய் போன்ற அனைத்தையும் தடுத்து நிறுத்த இத்தகைய மருத்துவர்கள் தான் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

நமது சென்னையிலேயே முதல் முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது இப்போது மூளை மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது நமது ஊரில் எக்கச்சக்க திறமையான மருத்துவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் எண்ணம் அனைத்து மக்களுக்கும் தரமான முறையில் சேவை செய்வதுதான். அந்த எண்ணத்திற்கு ஏற்படும் தடைகள் கூடிய சீக்கிரம் விலகி மேலும் மருத்துவர்களின் சேவை கடைக்கோடி கிராமம் வரை சென்றடைய வேண்டும் என்பதே நல்ல மருத்துவர்களின் நோக்கம்.

எண்ணற்ற அரசாங்க மருத்துவர்கள் கைநிறைய சம்பாதித்தாலும் அவர்களுடைய சொந்த முயற்சியில் கிராமங்களுக்கு சென்று வியாதி மற்றும் தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் , மெடிகல் கேம்ப் நடத்துகிறார்கள். இவர்கள் உணவில் கலக்கப்பட்ட பெருங்காயம் போல உறு தெரியாமல் இருந்தாலும், அவர்களின் சேவையை மிக சிறப்பாக செய்து வருவதால் தான் ஓரளவிற்காவது நமது நாடு மருத்துவத் துறையில் முன்னேறி வருகிறது.

அத்தகைய தன்னலமற்ற மருத்துவர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம் ! வாழ்க மருத்துவர்கள்!! வளர்க அவர்களின் தன்னலமற்ற சேவை!! .

0 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad