Bluepadஇன பேதம்
Bluepad

இன பேதம்

நெப்போலியன் விக்ரான்.
நெப்போலியன் விக்ரான்.
1st Jul, 2020

Share

பேதம்பார்த்து
மூச்சுக்காற்றை
நிறுத்தினாய்
அந்த
மூச்சுக்காற்று
புயல்காற்று
என்பதை
அறிந்துகொள்.

எல்லோருடைய
மூச்சுக்காற்றுக்கும்
முற்றுப்புள்ளி
உண்டு
முற்றுப்புள்ளி
வைப்பதற்கு
நீ
யார்?

புறத்தில்
இருக்கும்
நிறத்தைப்பார்த்து
புறந்தள்ளாதே.

அகத்தில்
இருக்கும்
நிறத்தைப்பார்
உனக்கு
அகம்பாவம் வராது.

உன்
மனத்தை
நீ
அறிந்தால்
மணம்
வீசும்.
பேதம்
பார்க்கும்
உன்
மனத்தை
அரிந்தால்
அழுகிய
மணம்
வீசும்.

விலங்குகள்
தன்
இனத்தை
தானே
அழிப்பதில்லை.

விலஙகின்
மனம்
விளங்கிடமுடியாதது
உன்
மனம்
விளங்கிடகூடியதாக
இருந்தும்
விலங்கிடகூடியதாக
இருக்கிறது.




6 

Share


நெப்போலியன் விக்ரான்.
Written by
நெப்போலியன் விக்ரான்.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad