Bluepadசுவையான பீட்சா வீட்டிலேயே தயார் செய்யலாம்!
Bluepad

சுவையான பீட்சா வீட்டிலேயே தயார் செய்யலாம்!

S
Shankar
1st Jul, 2020

Share

இன்றைய நெருக்கடி கால கட்டத்தில் வெளியே செல்லவும் முடியவில்லை வெளியே சென்று சாப்பிடவும் பயமாக இருக்கிறது. எனவே நமக்கு தெரிந்த விஷயத்தை நாமே வீட்டில் செய்து பார்ப்பதுதான் சாலச்சிறந்தது. இன்றைக்கு நாம் வெஜிடபிள் பீட்சா எப்படி செய்வது என்று பார்க்கலாமா.




பீட்சா செய்வதற்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தோம் என்றால் பாட்டம் வைக்கக்கூடிய அளவிற்கு நாம் செய்யும் லேயேர் , இது தான் பீசா சுவையாக இருக்க காரணம் என்று கூறுவார்கள். நமக்கு பாட்டம் செய்வதற்கு மைதா மாவு தேவைப்படுகிறது. அந்த மைதா மாவை சாதாரணமாக பரோட்டாக்கள் செய்ய பிசைவது போல பிசைந்து சற்று கனமாக இட்டு கொள்ள வேண்டும்.

பிறகு அதற்கான டாப் இங்கே நாம் செய்து கொள்ள வேண்டும். டாப்பிங் பொருத்தவரை காய்கறிகளை வைத்து அடுக்கலாம் இல்லை என்றால் அதற்கு மேலே கோதுமை மாவை இட்டு வைத்து , அதற்கு மேலே சீஸை டாப்பிங் ஆக பயன்படுத்தி காய்களை அடுக்கி செய்யலாம் . கோதுமை மாவை , மைதா மாவின் மேல் போடும் போது அது நன்றாகப் இணைந்துவிடும் அப்படி என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை நாம் தானே சாப்பிட போகிறோம்.

இப்போது பீசாவின் மூன்றாவது தளத்திற்காக நாம் சீஸை துருவி அந்த கோதுமை மாவு மேல் போடலாம் அல்லது சீஸை முழுதும் உதிரியாகவும் அப்படியே வைக்கலாம். சிலர் பன்னீர் போட்டும் டெக்கரேட் செய்வார்கள் அப்படி கூட செய்யலாம். காய்கறிகளை பொறுத்தவரை வெங்காயத்தை வட்ட வடிவத்திலும் கேரட்டை வட்ட வடிவத்திலும் நெருக்கிக் கொண்டு குடமிளகாய் போன்ற காய்களை அதற்கு மேலே அழகாக அடுக்கி வைக்க வேண்டும்.

சிலர் காய்கறிகளை அடுக்கி வைத்துவிட்டு மேலே வெண்ணை துண்டுகளை வைத்து அப்படியே மைக்ரோ அவனில் வைப்பார்கள் அப்படி செய்யும் போது என்ன ஆகும் என்றால் வெண்ணை அப்படியே அந்த சூட்டில் உருகி அது ஒருவிதமான சுவையைக் கொடுக்கும்.

மைனசை தேவைப்படும் அளவு பயன்படுத்திக் காய்கறிகளை நன்றாக ஒட்ட வைக்க பயன்படுத்தலாம். ஆனால் கவனத்தில் கொள்ளவேண்டும் சீஸ் , மைனஸ் இரண்டுமே அதிக கொழுப்பு சத்தை உடலில் ஏற்றும். நன்றாக அதாவது மேலே குறிப்பிட்டபடி அடித்தளம் மைதாமாவு அதற்கு மேலே கோதுமைமாவு அதற்கு மேலே மைனசை வைத்து காய்கறிகளை அடுக்கி வைத்து மைக்ரோவேவ் அவனிற்கு உள்ளே வைத்துவிட வேண்டியதுதான்.

170 டிகிரி கன்வெர்ஷன் சூட்டில் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான பீட்ஸா தயார்.இந்த பீட்சாவை சொட்டு சாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இன்னொரு சிறு குறிப்பு என்னவென்றால் இந்த பீட்சாவின் பாட்டம் லேயரில் அதாவது மைதாமாவு இட்டு வைத்தவுடன் அது மேலே தக்காளி சாஸை நன்றாக பரப்பி அதற்கு மேல் கோதுமை மாவை வைத்து அதன் மேல் தக்காளி சாஸை அல்லது சில்லி சாஸை பரப்ப செய்து அதில் இந்த காய்கறிகள் மற்றும் சீஸ் ஆகியவற்றை அடுக்கி செய்தோம் என்றால் அது மிக அருமையான ஒரு சுவையை கொடுக்கும் ஆனால் எல்லோருக்கும் அது பிடிக்காது.

இந்த பிட்சாவை மைக்ரோவேவ் அவன் இல்லாமல் செய்ய முயற்சி செய்தோம் என்றால் தோசைக்கல் வைத்து இண்டரெக்ட் ஹீட்டிங் செய்யலாம் ஆனால் அது அவனில் வருவது போல மொழுமொழுவென்று வராது ஏதோ அரைவேக்காட்டுத் தனமாக தான் இருக்கும். எதற்கு இந்த விஷப்பரீட்சை அவனில்லாமல் நாங்கள் வெறும் மைதா மாவு வைத்து பரோட்டா போல இதையெல்லாம் வைத்து வாட்டியே சாப்பிட்டு விடுகிறோம் என்று சொல்கிறீர்களா...! அப்படியும் செய்யலாம் அதற்கும் கூடிய விரைவில் ஒரு பெயர் வைத்து விட வேண்டியது தான்.



5 

Share


S
Written by
Shankar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad