வறட்சி பாளமாய் வெடித்திருக்கிறது என் இருதயத்தை போலவே என் பூமியும்
கார்மேகம் தேடிய என் கண்களுக்கு வானவில் நம்பிக்கை தந்தவளே
நில தாய் காத்திருக்கிறாள்
வயல் கருவை சூல் கொண்டு
உன் கருணை தாய்ப்பாலை சற்று ஊற்று அவளுடன்
நாங்களும் சிறிது உயிர் பிழைத்து கொள்கின்றோம்