Bluepadநாம் மிகவும் கவனத்துடனும், உறுதியோடும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Bluepad

நாம் மிகவும் கவனத்துடனும், உறுதியோடும் இருக்க வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

R
Reshma us
30th Jun, 2020

Share

நாம் வாழும் நாட்கள் ஒவ்வொன்றும் மிக சவாலாக மாறிக்கொண்டிருக்கிறது ஒருபுறம் நோய்த்தொற்று கண்ணா பின்னா என்று பரவி வருகிறது ...மறுபுறமோ நம்மிடம் இருக்கும் செல்வத்தை திருட சூழ்ச்சி செய்யும் ஏமாற்றுக்காரர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.




எல்லா ரூபத்திலும் நமக்கு ஆபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது ஏதோ அச்சுறுத்துவதற்காக அல்லது எதிர்மறை எண்ணத்தை விதைப்பதற்கு என்றோ பதியப்படும் பதிவு அல்ல. முழுக்க முழுக்க நம்மை நாம் நம்ப வேண்டிய நிலமையின் வீரியத்தை உணர்த்தும் பதிவு இது.

நோய்த்தொற்று நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

இந்த நோய் தொற்றைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களுமே தற்போது தவிடுபொடி ஆகி விட்டது.அதிக வெப்பம் இருந்தால் வரவே வராது என்று கூறினார்கள். ஆனால் நமது தமிழகத்தில் இப்போது இந்த நோய்த்தொற்று தாண்டவமாடுகிறது. இந்த நோய் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் தாக்கும் என்று கூறினார்கள். ஆனால் கடந்த 45 நாட்களாக 20 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் இறந்து வருகிறார்கள்.இந்த நோய் பயத்தின் காரணமாக தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் கண்டு நாம் அஞ்சி நடுங்கி ஒடுங்கி விடக்கூடாது. நமது பழக்க வழக்கங்களில் அவர்கள் கூறும் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து வந்தாலே போதுமானது.

என்னையெல்லாம் இந்த கிருமி ஒன்றும் செய்யாது என்று இறுமாப்புடன் அறியாமல், சிறிது காலத்திற்கு செய்யத்தக்கது செய்து உயிர் காத்துக் கொள்வது சிறந்த விஷயமாக இருக்கும். தேவையில்லாமல் சாகசம் செய்து இந்த இக்கட்டான நேரத்தில் நமது விலை மதிப்பான உயிரை பறிக்க விடவே கூடாது.

நமக்கு சவால் அளிக்கும் வெளிப்புற காரணிகள்:

செல்வம் பறிபோகிறது இந்த காலத்தில் அதிகமாக என்றால் அது பணம் மட்டுமல்ல நமது உழைப்பு, நமது நேரம் என்ற அனைத்தையும் திருட ஒரு மிகப் பெரிய கூட்டமே காத்திருக்கிறது. அவர்கள் செய்யும் முதலீடு மிக கம்மி அவர்கள் நம்மிடம் பேசும் ஒரே ஒரு பெரிய வலை ஆசை...அதற்கு தான் நாம் டப் டப் என்று விழுந்து விடுகிறோம்.

கிரெடிட் கார்ட் பயன்படுத்தாதவர்கள் கூட உங்கள் கிரெடிட் கார்டுக்கு ரொக்க பரிசு கிடைத்திருக்கிறது என்ற போன் அழைப்பை நம்பி 8000 , பத்தாயிரம் என்று பணத்தை இழந்திருக்கிறார்கள்.மேற்கூறிய இரண்டு விஷயங்களுக்கும் ஒரே ஒரு காரணம் தான். நமது மனது சலனம் அடைந்தால் நம்மை அச்சம் ஆட்கொள்ளும். நமது மனம் திடமாக தெளிவாக இருந்து விட்டால் யாராலும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது.

மனம் திடமாக இருந்தால் அந்த நோய்த்தொற்று வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடும். ஆனால் மனம் திடமாக இல்லை என்றால் நோயே வராமல் பயமே நம்மைக் பாதி கொன்றுவிடும். மனமே முருகனின் மயில் வாகனம் என்று பக்தி கொண்டவர்கள் கூறுவார்கள்.

அந்த முருகனுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மனம் தான் சிறந்த வாகனம். அதை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதற்கு தகுந்தார் போல நமது வாழ்வின் வெற்றிகளும் அடுத்தகட்ட பயணங்களும் இருந்து கொண்டே இருக்கும்.


11 

Share


R
Written by
Reshma us

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad