Bluepad | Bluepad
Bluepad
வாடிக்கையாளர்களை அப்படியே லாக் செய்த ரிலையன்ஸ் ஜியோ !
V
Venkatesh Ramanan
29th Jun, 2020

Share

ஜியோ சிம் கார்டுகள் மொபைல் போன் உலகத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி விட்டது என்று தான் கூற வேண்டும். மாதம் முழுவதுமே 2gp 3gp டேட்டாவை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வந்த நாம், இந்த ரிலையன்ஸ் 4ஜி சிம் கார்டுகள் மூலம் ஒரே நாளில் 2 ஜிபி டேட்டாவை காலி செய்யும் அளவிற்கு வந்துவிட்டோம்.


வாடிக்கையாளர்களை  அப்படியே லாக் செய்த ரிலையன்ஸ் ஜியோ !

முன்பெல்லாம் மொபைல் போனில் யூட்யூப் வீடியோ பார்ப்பதற்கு பதறுவோம் எங்கேயாவது ஓசியில் கிடைத்தால் அல்லது கம்பெனி இன்டர்நெட் கிடைத்தாலும் மட்டுமே யூடியூப் வீடியோக்களை வைத்து செய்த நாம் இந்த ஜியோ சிம் கார்டுகள் என்றால் வெறும் யூட்யூப் நிகழ்ச்சிகளாக பார்த்து தள்ளுகிறோம்.

இந்த ஜியோ புரட்சியால் நெட்பிளிக்ஸ் , அமேசான் ப்ரைம் யூட்யூப் போன்ற நிறுவனங்கள் கூட ஏறுமுகத்தில் தான் சென்று கொண்டிருக்கிறது.

ஜியோ சிம் கார்டில் ஏற்பட்ட சிக்கல் :

ஜனங்களின் ஆஹா ஓஹோ என்று ஏகோபித்த ஆதரவைப் பெற்று வந்த ஜியோ சில நாட்களுக்கு முன்பு சிக்னல் கிடைக்கவில்லை என்று ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டை சந்தித்தது.உண்மையை சொல்லப்போனால் ஜியோ வந்த பிறகுதான் மற்ற சிம்கார்டு வினியோகஸ்தர்கள் நியாயமான விலைக்கு திரும்பினார்கள். மனசாட்சிக்கு பயந்து அல்ல ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி..

முன்பெல்லாம் மொபைலில் இன்டர்நெட் பேக்கை பொத்திப் பொத்தி பாதுகாத்து வந்த நாம்... யாராவது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்று கேட்டால் கூட இல்லடா!! "என் மொபைல்ல இன்டர்நெட்டே இல்லை" என்று பச்சையாக புளுகி வந்த நாம் . இன்றைக்கு என்னடா நெட்டு ஸ்லோவா "ஹாட் ஸ்பாட்" ஷார் பண்ணட்டுமா என்று கேட்கும் அளவிற்கு கொண்டு விட்டது இந்த ஜியோ தான். இந்த ஜியோ சிம் வசதி இருப்பதால் தான் இன்று பல பள்ளிக்கூடங்கள் எடுக்கும் ஆண்டு வகுப்புகள் கூட தடை இன்றி கவனிக்க முடிகிறது.

இப்படி மற்ற சிம்கார்ட் தயாரிப்பாளர்களும் ஜியோவின் விலை கொடுத்து அவர்கள் தரும் டேட்டா விட அதிகமாக தருகிறோம் என்றெல்லாம் கூறி அழைக்கத் துவங்கினார்கள். ஆனால் வாடிக்கையாளரை தன்வசம் வைத்துக் கொள்ள ஜியோ இப்போது பல அதிரடித் திட்டங்களை அறிவித்து விட்டது.

லாக்டோன் ஜியோ திட்டங்கள்:
ஒரு வருடத்திற்கு 2500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் ஒரு வருடம் முழுக்க டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம். இதைப்போல அதே அளவிற்கான ஜிபி டேட்டாக்களை கொடுத்து இந்த அதிகபட்சம் 10 சதவீதம் டேட்டா இல்லாமல் சிறிது கால் கட்டணங்களை குறைத்து 305 நாளைக்கு பயன்படுத்தும் ஒரு திட்டத்தை அறிவித்து விட்டது ஜியோ. இதன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிக் கொடுத்து ஒரு வருடம் அவர் அங்கே இங்கே நகர முடியாதபடி அப்படியே லாக் செய்திருக்கிறது ஜியோ.

ஜியோ மற்றும் ஃபேஸ்புக்கின் கூட்டு :

போதாத குறைக்கு உலக அளவில் பிரபலமான பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ஒரு சில பங்குகளில் முதலீடு செய்து இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 43 ஆயிரம் கோடி ஜியோ வில் முதலீடு செய்திருக்கிறது அந்த ஃபேஸ்புக்.

கூடிய சீக்கிரத்தில் அம்பானி இந்த ஆன்லைன் வர்த்தகத்தை துவங்க இருக்கிறார். அதற்கான முன்னோட்டம் தான் இந்த பேஸ்புக், ஜியோவில் முதலீடு செய்திருக்கிறது என்று கூறுகிறார்கள் விஷயம் தெரிந்த வல்லுனர்கள்.

எது எப்படியோ ... முன்னொரு காலத்தில் மொபைல் போன் என்றால் என்னவென்றே தெரியாது இருந்தபோது இதே ரிலையன்ஸ் நிறுவனம் தான் 500 ரூபாய்க்கு மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. அனைவர் கையிலும் மொபைல் வரும்படி செய்தது. இப்போது என்னவென்றால் 4 ஜி , 5 ஜி என்று டேட்டாவை யூஸ் பண்ணி தள்ளும் அளவிற்கு மொபைல் போனை அதாவது மொபைல் போனின் பயன்பாட்டை மக்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியதில் ஜியோவின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது.


8 

Share


V
Written by
Venkatesh Ramanan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad