Bluepadபுதிய பெற்றோர்களின் கவனத்திற்கு!!
Bluepad

புதிய பெற்றோர்களின் கவனத்திற்கு!!

G
Gayathri
29th Jun, 2020

Share

தற்போது நீங்கள் ஒரு பெற்றோராக இருக்கிறீர்களா வாழ்த்துக்கள்!! இனிமேல்தான் உங்களின் புதிய வாழ்க்கை துவங்க இருக்கிறது.




ஆம் ஒரு குழந்தை பெறும் வரை இருக்கும் வாழ்விருக்கும் அதன்பிறகு இருக்கும் வாழ்க்கைக்கும் முற்றிலுமாக வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இது ஒரு அக்னி பரீட்சை என்றே கூறலாம்.

பெண்கள் குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியது இருக்கும்:

பெண்கள் வேகத்தில் மறு வடிவங்கள் அவர்களுக்கு அர்ப்பணிப்பு பற்றி புதிதாக ஒன்றும் சொல்லித் தர தேவையில்லை. ஆனால் குழந்தைகளுக்காக அவர்கள் சிறிது மெனக்கெட வேண்டி இருக்கும்.

குழந்தை பிறந்து சில காலங்கள் வரை ஒரு சில குறிப்பிட்ட உணவுகளை அவர்களால் மனம்போல விரும்பி உண்ண முடியாது. சிறிது நேரம் தூங்கினாலும் நன்றாக தூங்க பழகிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் எப்போது அழுவார்கள் எப்போது எழுவார்கள் என்று கணிக்கவே முடியாது. அதனால் கிடைக்கும் நேரத்தில் நன்றாக தூங்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி கிடைக்கும் நேரத்தை போன் பார்த்தோ புத்தகத்தை பார்த்து விட்டால் தூக்கம் அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

குழந்தையின் அழுகுரல் வைத்து அவர்களுக்கு என்ன தேவை என்று கண்டுபிடிக்க பழகவேண்டும். இந்த காலத்தில் இப்படி இக்கட்டான நேரத்தில் உதவிபுரிய முதியவர்கள் இருக்கிறார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு அது ஒரு பெரிய சவாலாகத்தான் இருக்கிறது.

எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டியிருக்கும். தூக்கமற்ற நேரத்தை குழந்தைகள் திடீரென்று அழும் அந்த அவஸ்தையை உதவி இல்லாத நேரத்தில் எப்படி சமயோசிதமாக செயல்பட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கான குழந்தை பாதுகாப்பு குறிப்புகள்:

ஆணின் வாழ்க்கையில் குழந்தை பராமரிப்பு என்பது ஒரு மிகப்பெரிய திருப்புமுனை தான். அதுவரை இல்லாத பொறுமை, பொறுப்பு எல்லாம் ஒரு குழந்தைக்காக தானாக வந்து சேர்ந்து விடுகிறது.

இனிமேல் உங்களின் குணங்களை நன்றாக மாற்றிக்கொள்ளவேண்டும். குழந்தை அழுது கொண்டிருக்கும் போது ஃபோனை நோண்டிக்கொண்டு இருக்கக் கூடாது. கடகடவென்று எழுந்து சென்று ஏதாவது பூச்சி இருக்கிறதா என்று நீங்கள் தான் பார்க்கவேண்டும்.

குழந்தையை லாவகமாக தூக்க பழக வேண்டும். அது பெரும்பாலான ஆண்களுக்கு அந்த பழக்கம் கிடையாது இஷ்டத்துக்கு தூக்கி குழந்தைகளை படாதபாடு படுத்தி விடுகிறார்கள்.

பொறுமை, சகிப்புத்தன்மை மிக மிக அவசியம். குழந்தைகள் அழுவதை சகிக்கவே முடியாது என்று கூறுவார்கள். ஆமாம் அவர்களின் குரலில் மண்டையை பிளக்கும் தான் அதை பொறுத்து கொண்டு எரிந்து விழாமல் இருக்க வேண்டும். முக்கியமாக ஆசைகளை அடக்க பழகவேண்டும். திரையரங்குக்கு சென்றால் குழந்தை அழும்போது மனைவி சமாதானப்படுத்துவதுக்கு உதவி புரியாமல் இருந்தாலும் எரிந்து விழாமல் இருக்க வேண்டும். அதுவே முக்கியமான கடமை அதுவே பக்குவதிற்கான வழி.

தாய் சேய் இருவரின் நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும். குழந்தை பிறந்து 6 மாதம் அல்லது ஒரு வருட காலம் வரை எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை நாம் தான் சரியாக பின்தொடர வேண்டும்.

ஆண் பெண் இருவரும் கவனிக்க வேண்டியது :

கண்டிப்பாக இந்த காலகட்டத்தில் போட்டி மனப்பான்மையை தூக்கி தூர போட வேண்டும். குழந்தையை பார்த்துக் கொள்கிறாயா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று போட்டி இருக்கவே கூடாது. இருவரும் சமமாக வேலைகளைப் பிரித்துக் கொண்டு அனுசரணையாக இருப்பதுதான் மிக மிக முக்கியம்.

அதுதான் அந்த குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கும் மிக மிக நல்லது. பிற்காலத்தில் குழந்தை வளர்ந்த பின்னரும் ஒருவர் மேலேயே சார்ந்திராமல் இருவர் மேலும் அதிக பாசம் கொண்டு இருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

எங்காவது வெளியே செல்லும் நேரத்தில் அப்பா கிட்ட தான் அவன் இருப்பான் இல்ல அம்மா இல்லனா அவளை சமாளிக்க முடியாது என்கின்ற பெயர் வராமல் ( இருவரும் சேர்ந்து பார்த்துக் கொள்ளும் பட்சத்தில் ) இருக்கும்.

21 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad