Bluepadஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை கண் முன்னே காட்டிய திரைப்படங்கள்.
Bluepad

ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை கண் முன்னே காட்டிய திரைப்படங்கள்.

A
Ananth A.
28th Jun, 2020

Share

ராணுவ வீரன் என்றால் இப்படித்தான் இருப்பார் அப்படித்தான் இருப்பார் என்கின்ற கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றியது "அரண்" என்ற திரைப்படம் அந்த திரைப்படத்தை பற்றி தான் இந்த பதிவு.




ஒவ்வொரு வீரரும் ராணுவத்தில் சேர்ந்து எத்தகைய துன்பங்களை அனுபவிக்கிறார்கள் எத்தகைய மனோதிடத்தை பெறுகிறார்கள் என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தின் மூலமாகத்தான் ஓரளவிற்கு அறிய முடிந்தது.

இந்தப் படத்திலும் சினிமா தனங்கள் இல்லாமல் இல்லை. இறுதிக்காட்சியில் ஸ்லோ மோஷனில் வரும் புல்லட், திடீரென்று வீறுகொண்டு எழும் ஒரு கோழை, என்பது போன்ற காட்சிகள் இருந்தாலும் இந்த படத்தில் பல விஷயங்களை நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.

ஒரு ராணுவ வீரரே இந்த படத்தை இயக்கிய இருந்ததால் அதில் இருக்கும் துன்பங்களை மேலும் தெளிவாக காண்பித்து இருந்தார். ஒரு ராணுவத்தில் எந்த மாதிரியான கேளிக்கைகள் இருக்கும் அவர்களின் வாழ்வு முற்றிலுமாக போர் - போர் என்று இருக்கும் என்றுதான் அனைவரும் நினைத்திருப்பார்கள்.

ஆனால் போர் தவிர அங்கு என்னென்ன வேலைகள் இருக்கிறது அங்கு எப்படிப்பட்ட வாழ்வியல் முறை இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை இந்த படத்தில் முடிந்தளவு விளக்கி இருப்பார்கள். தமிழ் சினிமாவில் ராணுவவீரன், துப்பாக்கி போன்ற படங்கள் வந்திருந்தாலும் அந்தப் படத்தில் ராணுவ வீரரின் ஒரு பகுதியான வாழ்க்கைதான் காட்டியிருப்பார்கள். அதிலும் ராணுவ வீரன் படத்தில் தலைப்பில் மட்டும்தான் தான் அவரின் இடம் பெற்றிருப்பர். ரஜினிகாந்த் அந்த படத்தில் இராணுவ வீரன் என்று கூறிக்கொள்வார் ஆனால் அதற்கு தகுந்த எந்த வேலையும் அவருக்கு அந்த படத்தில் இருக்கவே இருக்காது.

துப்பாக்கி படத்தை எடுத்துக்கொண்டால் அவர் ஒரு ராணுவ வீரர் இருந்தாலும் அந்த ராணுவ விடுமுறையில் தான் வந்திருப்பார் அவர் ராணுவத்தில் செய்த எந்த சாகசங்களும் இடம்பெறாது. ராணுவ சீருடையில் ஓரிரண்டு காட்சிகள் படத்தில் நடித்திருப்பார் விஜய்.

பழைய திரைப்படங்கள் என்று எடுத்துக் கொண்டால் பாரதிராஜா படத்திலும் ஒரு படத்தில் பாண்டியன் ராணுவத்தில் சென்று திரும்பி வரும்போது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வருவதாக இருக்கும் ( மண்வாசனை என்று நினைக்கிறேன் ) . ராணுவ வீரர்களின் வாழ்க்கையை காட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் சென்டிமென்டாக காட்டுவார்கள் அல்லது சற்றும் அவர்களுக்கு பொருத்தமில்லாத விஷயங்களை காட்சிப்படுத்தி இருப்பார்கள். உன்னை கொடு என்னை தருவேன் போன்ற படங்கள் இதற்கு மிகச் சரியான உதாரணம்.

தற்போது கூட தெலுங்கில் வெளிவந்து இருக்கும் வெங்கி மாமா என்னும் திரைப்படம் ராணுவ வீரரின் வாழ்க்கை காட்சிப்படுத்தி இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் அதை நம்பி பார்த்து எனக்கு சிறிது ஏமாற்றம் தான் மிஞ்சியது.

படம் முழுக்க போர், துப்பாக்கி சண்டை என்று காட்ட முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு களம் பொருந்த வேண்டாமா!! அதன் பிறகு வந்த ஒரு திரைப்படமான "காசி அட்டாக்" என்கிற தெலுங்கு திரைப்படம் தான் ஒரு நேவல் வீரரின் சவால்களை சித்தரித்தது. இந்த படத்தின் மூலமாகத்தான் வெளி உலகத்திற்கு தெரியாமல் கூட சாகசங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் நமது வீரர்கள் என்பது தெளிவாக புரிந்தது.

அதிலும் அந்த படத்தில் மிக அருமையாக நீர்மூழ்கி கப்பலின் ஒரு இயங்கு முறையை காமித்துஇருப்பார்கள். அந்த படத்தை பார்த்த பிறகுதான் நீர்மூழ்கி கப்பலில் இத்தனை விஷயங்கள் இருக்கிறது என்ற உண்மை தெரியவந்தது. ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் மூலமாக குண்டு வீச முடியும், எதிராளி வீசி கொண்டே கணிக்க முடியும் என்பது போன்ற விஷயங்களை தெளிவாக காட்சிப்படுத்தி இருந்தார்கள். திரைப்படங்கள் என்பது சற்று கலவையான கமர்சியல் ஆன விஷயங்களை கொண்டுதான் இருக்கும் , அதில் தேவதை தனங்கள் இல்லாமல் இருக்கும் என்று கூற முடியாது.

ஆனாலும் ஒரு சில படங்கள் அப்படியே வாழ்க்கையை தத்துரூபமாக காட்சிப்படுத்தும் ஆனால் அப்படங்கள் பெரிய வெற்றிகளை பெறாது. காசி அட்டாக் திரைப்படம் மிகுந்த நேர்த்தியான முறையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தாலும் அதிலும் சில கமர்சியல் அம்சங்கள் இடம்பெற்று தான் இருந்தது. நேவல் வீரர் என்றால் கப்பலில் பயணம் செய்ய வேண்டும் ரோந்து செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பலரின் எண்ணத்தை இந்தப் படம் ஓரளவிற்கு மாற்றி இருக்கிறது என்பதே உண்மை. இதுபோல பல தத்ரூபமான படங்கள் வந்தால்தான் வெளியுலகத்திற்கு பல விஷயங்கள் தெளிவாக தெரியும்.


6 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad