Bluepadசெம்பருத்தி
Bluepad

செம்பருத்தி

Thuraivan NG
Thuraivan NG
28th Jun, 2020

Share

செம்பருத்தி

காற்றில் அசைந்தாடி
சிரிக்கும்
செம்பருத்திப் பூவை
முத்தமிடும் வண்ணத்துப்பூச்சி
புணர்ச்சி முடிந்ததும்
சட்டென பறந்து மேலெழுந்து
அருகில் இருந்த
வீட்டின் சன்னல் விளிம்பில்
இறகு அசைத்து
கண்ணாடியில் அமர்ந்து
அறையுள்ளே பார்த்தது
நைட்டி அணிந்த பெண்
செல்போனில் பேசும்
உதடுகளின் சிவப்பழகைப்
பூவிதழென பாலித்தது
நிதானமாய்
அவள் பார்வை
சன்னல் பக்கம் திரும்பவில்லை
இன்னும் காத்திருக்கும் பொறுமையின்றி
வெளியேறியது
எதையோ தேடி
வண்ணத்துப்பூச்சி.

ந க துறைவன்.


0 

Share


Thuraivan NG
Written by
Thuraivan NG

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad