Bluepadதிருமணத்தில் ஜாதகப் பொருத்தங்கள் ! இந்தக் காலகட்டத்தில் அது சரிவருமா?
Bluepad

திருமணத்தில் ஜாதகப் பொருத்தங்கள் ! இந்தக் காலகட்டத்தில் அது சரிவருமா?

S
Senthil Rajan
28th Jun, 2020

Share




திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் என்பது மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நெடுநாட்களுக்கு பிறகு அமையும் வரங்களை கூட இந்த ஜாதக பொருத்தம் சீரழித்து விடுகிறது. சாதாரணமாக பத்து இருக்கு. 7 பொருத்தம் இருந்தால் அந்த ஜாதகம் பொருந்தி விட்டதாகக் கருதப்படுகிறது.

அதிலும் மாங்கல்ய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் சரியாக இருந்தால் அந்த ஜாதகம் இருந்ததாக கருதப்படும். இந்த இரு பொருத்தங்களும் சரியாக இல்லை என்றால் அந்த ஜாதகம் சேராது என்று கருதப்படுகிறது. இந்த அவசர வாழ்க்கையில் ஜாதகம் எல்லாம் சரிப்படுமா என்று கேட்டால் நிச்சயம் சரிப்படும் என்று கூறுகிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

"நாள், நட்சத்திரம், காலம் எல்லாம் அந்தந்த நேரத்திற்கு அதற்கான பலன்களை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. பெரியவர்கள் ஒன்றும் எதையுமே கண்மூடித்தனமாக கணிக்கவில்லை. அதற்கு இன்றுவரை நாம் பயன்படுத்தி வரும் பஞ்சாங்கம் சாட்சி. ஆனால் கால ஓட்டத்திற்கு ஏற்ப ஜாதகத்திலும் சிலர் பொய் செய்து, பித்தலாட்டம் செய்து மாற்றி வருகிறார்கள். அது மிகப் பெரிய பாவம் அப்படி செய்வதனால் ஒன்றும் பெரிய புதிய பலன்கள் ஒன்றும் கிட்டி விடாது.

முடிந்தவரை ஜாதகங்களை பார்த்துவிட்டு அதற்கான பரிகாரங்களை செய்து திருமணம் செய்வதே சாலச் சிறந்தது என்கிறார்கள்" இந்த நிபுணர்கள். ஆனால் அந்த ஜாதகம் ஜோசியம் எல்லாம் ஆதிகாலம் முதலே யாரும் பார்த்ததில்லை என்று எதிர்வாதம் புரிகிறார்கள் அதற்கு எதிரானவர்கள்.

ராமாயணத்தில் ராமர் சீதையை சுயம்வரத்தில் தான் மணந்தார், அதேபோல மகாபாரதத்திலும் பாண்டவர்கள் பாஞ்சாலியை மணக்கும் போது ஜாதகம் ஜோசியம் என்று எதுவுமே பார்க்கவில்லை என்று கூறுகிறார்கள். இந்த ஜாதகம் ஜோசியம் எல்லாம் இடைக்காலத்தில் தான் வந்தது அது மிகப்பெரிய குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று கூறி எதிர்த்து வருகிறார்கள்.

இரு மனம் ஒத்துப் போனால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதான் என்று தமிழ் மூத்த அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். அதுதான் சிறந்தது மற்றபடி இந்த ஜாதகம் பார்ப்பது எல்லாம் இந்த காலத்திற்குப் பொருந்தாத ஒரு செயல் என்றும் வாதிடுகிறார்கள்.

ஆனால் நமது நாடு பாரம்பரியமான நாடு பழைய பழக்க வழக்கங்களை அவ்வளவு எளிதாக நாம் விட்டுக் கொடுப்பதில்லை. எனவே நமது நவீன பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் விரும்பும் வரன்களுக்கு திருமணம் செய்துவிட்டு ஜாதகப்படி அதற்கு இருக்கும் பரிகாரத்தையும் செய்துவிடுகிறார்கள் எதற்கு வம்பு என்று. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த ஜாதகம் பார்க்கும் துறை கிடுகிடுவென்று வளர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்க்கலாம் என்று கூறும் ஜோதிட வல்லுனர்கள் பெருகிவிட்டார்கள் அவர்களது சம்பளமும் எகிறி விட்டது.

இதை கருத்தில் கொண்டே பலர் இப்போது ஜோதிட பதிப்பை விரும்பி படித்து வருகிறார்கள். இந்த ஜாதகம் ஜோதிடம் என்பது ஒரு குறிப்பிட்ட பலன்களை வைத்துதான் கணித்து இருக்கிறார்கள் என்றாலும் இப்போது இந்த நவீன காலத்திற்கு ஏற்ப அதில் நிறைய பொய் பித்தலாட்டங்கள் செய்து வருகிறார்கள்.

இந்த காலத்தில் பணமே பிரதானம் என்று ஆகிவிட்டதால் சுத்தமாக பொருந்தாத ஜாதகத்தை கூட நன்றாக பொருந்தும் ஜாதகம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி எல்லாத்தையும் பணம் கொடுத்து சரிகட்டி வாழ்க்கையிலேயே விளையாடி வருகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தை பொருத்தவரை திருமண தகவல் மையங்கள் கூட தங்களுக்கான ஒரு ஆஸ்தான ஜோதிடர் நியமித்து அவர்கள் சொல்லும் படி அவர்களை செயல்பட வைக்கிறார்கள். எப்படி என்றால் அவர்கள் நினைத்தால் பரிகாரம் செய்ய வேண்டும் , உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்பதைப் போல ஆட்டிவைக்க தொடங்கிவிட்டார்கள். இந்தக் காலகட்டத்தில் தொன்மையான பொருட்களை பயன்படுத்தி ஏமாற்றவே பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா துறைக்கும் பொருந்துகிறது.

அவர்கள் இப்படி ஜோதிட பணிக்கு வருவதற்கு காரணம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் எக்கச்சக்க கிளைண்ட் இருக்கிறார்கள் என்பதற்காகவே.



11 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad