Bluepad"கொரோனில்” பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனா மாத்திரை யுக்தி...!
Bluepad

"கொரோனில்” பதஞ்சலி நிறுவனத்தின் கொரொனா மாத்திரை யுக்தி...!

A
Ananth A.
27th Jun, 2020

Share

இன்றைய காலகட்டத்தில் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த கொரொனா வியாதிக்கு ஒரு மாத்திரை கண்டுபிடிக்க முடியாதா ? என்று பலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் நமது தமிழகத்தில் இந்த புலம்பல் சத்தம் அதிகம் கேட்டாலும் உலக நாடுகள் முழுக்க இதே சத்தம்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. எப்ப கிடைக்குமா, கிடைக்குமா கிடைக்காதா என்று பலர் யோசித்துக் கொண்டிருந்தார்கள்...

சென்ற வாரம் கிலேன்மார்க் நிறுவனம் கொரொனா மாத்திரை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்கள் அதை மிக தெளிவாக இந்த மாத்திரை போட்டால் ஜுரம் குறையும், அறிகுறிகள் குறையும் , முற்றிலும் குணப்படுத்த முடியாது என்பதை வெளியிட்டுவிட்டார்கள்.

ஆனால் அந்த மாத்திரை ஒன்றின் விலை 105 ரூபாய் என்று விற்க்கத் தொடங்கி விட்டது நமது மருந்தகத்தில். நிலைமை இப்படி இருக்க, சில தினங்களுக்கு முன்னால் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயலாளர் பாலகிருஷ்ணா நாங்கள் இந்த தொற்று நோய்க்கான மருந்தை கண்டுபிடித்து விட்டோம் என்று அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த "கொரோனில்" மாத்திரைக்காண சந்தைப்படுத்துதல் துவங்கியது. இதை சாப்பிட்டால் கொரோனா ஒரு வாரத்தில் குணமாகும் என்று அவர்கள் விளம்பரப்படுத்த தொடங்கிவிட்டார்கள். இது நமது நாடு முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது எப்படி பரிசோதித்தார்கள் எப்படி இதற்கு அரசாங்கம் அனுமதி அளித்தது போன்ற பல எதிர்வினைகள் தோன்றியது.

இதைத் தொடர்ந்து உடனடியாக செயல்பட்ட மத்திய அரசாங்கம் இந்த மாத்திரை சாப்பிட்டால் எதிர்ப்புச்சக்தி வலுப்பெறும் என்றுதான் அவர்கள் அனுமதி கேட்டார்கள், அவர்கள் இப்படி ஏன் விளம்பரப் படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை! அப்படி அவர்கள் விளம்பரப்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் இந்தப் பேச்சை எல்லாம் புறம்தள்ளி அந்த நிறுவனம் இந்த மாதிரியான முன்பதிவில் அனைவரும் வியக்கும் வண்ணம் முதல் இடம் பிடித்து வருகிறது. பலர் இந்த மாத்திரைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக வட இந்தியாவில் எப்பதான் இந்த மாத்திரை வரும் என்பது போன்ற நிலைமை நிலவி வருகிறது.

தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் இந்த மாத்திரை விற்பதற்கு என்றே தனியாக முகவர்களை நியமிக்க போவதாகவும் கூறி வருகிறார்கள். இந்த மாத்திரை அப்படி நன்றாக செயல்படுவதாக தான் இருக்கட்டுமே, வாங்கி பார்த்தால்தானே தெரியும்!! என்றெல்லாம் கூறி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். " நாங்கள் இதில் எந்த பித்தலாட்டமும் செய்யவில்லை முற்றிலுமாக ஆயுர்வேத முறையில் இந்த மாத்திரையைத் இருப்பதால் இதில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது மாறாக கொரோனா நோய் பிடியிலிருந்து நமக்கு கூடிய சீக்கிரம் விடுதலை அளிக்க இந்த மாத்திரையே வல்லது " என்று அந்த பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் கிடுக்கிப்பிடிக்கு இணங்கி அடுத்த சில நாட்களில்" எதிர்ப்பு சக்தியை வளர்க்க இந்த மாத்திரைகள் வல்லது" என்று விளம்பரம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரனில் மாத்திரை விஷயம் சில நாட்களாக பெரும் அதிர்வலைகளை நமது நாட்டில் ஏற்படுத்தி வருகிறது.

பதஞ்சலி நிறுவனத்தை சார்ந்தவர்களோ கொஞ்சமும் சளைக்காமல் இல்லை இல்லை மத்திய அரசாங்கம் இப்படிக் கூறுவதால் ஒன்றும் இந்த மாத்திரையின் வீரியம் குறைய போவதில்லை கண்டிப்பாக இதை பயன்படுத்தி பாருங்கள் பதிலை கூறுங்கள் என்று கூறி வருகிறார்கள்.

உலக நாடுகளே இந்த வியாதிக்கான மாத்திரையை தேடும் போது முதன் முதலில் ஆயுர்வேதிக் மாத்திரை அறிவித்த பதஞ்சலி நிறுவனத்தாரை பாராட்டுவதா, இல்லை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி எரிகிற கொள்ளியில் பிடுங்கியது வறை இலாபம் என்று நினைக்கும் இவர்களை திட்டுவதா என்று ஒன்றும் புரியாமல் மக்கள் குழம்பி வருகிறார்கள்!!

மற்றொருபுறம்... இப்படித்தான் தமிழகத்திலும் ஒரு மருத்துவர் அறிவித்தார் ஆனால் அவரை பிடித்து ஜெய்லுக்கு உள்ளே தள்ளி போலி மருத்துவர் என்று விளம்பரப்படுத்தினார்கள் இந்த நிறுவனத்தை ஏதாவது செய்ய முடிந்ததா ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்றும் குரல்கள் எழுந்து வருகின்றன.

0 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad