Bluepadசர்வ அந்தர்யாமி பாபா. உலகம் முழுவதும் தன் அன்பர்களை காக்க சுற்றிவரும் பாபா
Bluepad

சர்வ அந்தர்யாமி பாபா. உலகம் முழுவதும் தன் அன்பர்களை காக்க சுற்றிவரும் பாபா

Gopalakrishnan veerasamy
Gopalakrishnan veerasamy
30th Nov, 2021

Share


இறைவன் அணுவிலும் சிறியதாகவும் அண்டத்தை காட்டிலும் பெரிய தாகவும் அனைத்து இடங்களிலும் அனைத்து காலத்திலும் அனைத்து சக்திகளுடனும் இருக்கின்றான்.

 • இறைவனை காண்பதும் இறைவனுடன் உரையாடுவதும் அவன் அருளைப் பெறுவதும் அவனுடைய மிகச்சிறந்த அடியவர்கள் சிலருக்கே வாய்கப்பட்டிருப்பது நம் புராணங்கள் வழியாக வழியாகவும் இலக்கியங்கள் வாயிலாகவும் நாம் அறிகின்றோம்.
 • நம்மில் பலருக்கு இறை வடிவம் மறைபொருளாகவே உள்ளது.
 • இறை அருளை பக்தியின் வழியாகவும் சாதனை மூலமாகவும் பெறவும் அதன் மூலமாக மூன்றாவது கண் திறந்து இறை சக்தியை அணுகுவது என்பது சாத்தியமே.
 • எதிர்காலத்திலும் மற்றும் தொடு உணர்ச்சி இன்றியே இறை வடிவங்களை பார்க்கின்ற அல்லது மக்களால் உணர்கின்ற முறை மன தொலைக்காட்சி அல்லது கிளை யர் வாயன்ஸ் எனப்படும்.

மனத் தொலைக்காட்சி அனுபவங்கள்.

 • ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஹவார்டு மர்பட் என்பவரும் ஐக்கிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வால்டர் கோ வான் என்பவரும் இந்தியா வந்திருந்து 1960-களில் பெங்களூரில் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தனர்.
 • அவர்கள் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் ஒயிட்பீல்டு ஆசிரமத்தில் தரிசனம் பெறுவதற்காக வந்திருந்தார்கள்.
 • அவர்கள் இருவருக்குமே உடல் காய்ச்சல் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார் கள்.
 • அடுத்த நாள் காலையில் பகவான் அவர்களின் தரிசனத்தை பெற வேண்டும் அதற்குள் உடல் நலம் பெற வேண்டும் என்று அன்று இரவு முழுவதும் அவர்கள் பகவானிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
 • அதன் பின்னர் அவர்கள் அயர்ந்து உறங்கி விட்டனர்
 • விடியற்காலையில் பகவான் தன்னுடைய சூக்ஷ்ம உடலில் அவர்கள் முன் தோன்றி அவர்களுடைய உடல்நலத்தை தேற்றி அருளினார்.
 • வால் டர்கோவான வர்கள் இறைவன் பாபா அவர்களை தன் அறையில் நேரடியாக பார்க்க முடிந்தது
 • ஆனால் ஹார்வார்ட் மர் பெட் அவர்களுக்கு பகவான் அவர்களை தன் கண்களால் காண இயலவில்லை அதற்கான பயிற்சி அவருக்கு அப்போதுஇல்லை.
 • எவரொருவரும் இவ்வாறான மன தொலைக்காட்சி பயிற்சியினை பெறமுடியும்


கட்ச் இளவரசி நந்தாவின் கூற்று

 • 1960களில் கட்சி இளவரசி நந்தாவின் நண்பர் ஒருவர் ஆர்டிக் மலைப்பிரதேசங்களில் வழியாக ஆகாய விமானத்தில் பறந்தபோது அந்த விமானம் வடதுருவத்தில் ஒரு மோசமான விபத்தை சந்தித்த து. ஏராளமானோர் விமான விபத்தில் காலமானார்கள் ஆனால் இளவரசிநந்தாவின் நண்பர் மிகுந்த காயங்களுடன் தப்பினார் அவர் நீண்ட மயக்கத்திலிருந்து சற்று கண் விழித்த பொழுது அங்கு விழுந்திருந்த பிணங்களுக்கு இடையில் பகவான் சத்ய சாய் பாபா அவர்கள் நடந்து ஒவ்வொருவராக பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டார்.
 • உயிரிழந்தவர்களின் ஆத்மாவை நல்ல நிலைக்கு அடுத்த பிறவியில் பிறக்க வைக்க முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என நினைத்தார்.
 • மன தொலைக்காட்சி அல்லது கிளையர்வயன்ஸ் ஆற்றல் பெற்றிருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட இறை காட்சிகளை பார்க்க முடியும்.

ஹார்வார்ட் ம ர் ஃபத் அவர்களின் சொந்த மன தொலைக்காட்சி அனுபவம்.

 • 1982 ஆம் ஆண்டு வாக்கில் மர்பெட் குடும்பம் ஆஸ்திரேலியா நாட்டில் அடிலைட் நகரம் அருகாமையில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார்.
 • அவருக்கு சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக வீக்கம் கொண்டிருந்தது.
 • அடிலெய்டில் ஒரு மருத்துவரிடம் அவர் சோதனை செய்து கொண்டார். மருத்துவரும் ஒரு அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தார்.
 • ஹார்வார்ட் மர் பெட் அந்த அறுவை சிகிச்சையை ஒரு அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாம் என்று அபிப்பிராயப் பட்டார்.
 • மருத்துவர் குறிப்பிட்ட நாளில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
 • மார்க்கெட் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
 • அன்று இரவு தாங்கொண்ணா வலி ஏற்பட்டது.
 • மீண்டும் மருத்துவமனைக்கு சென்று பார்த்த பொழுது அவருக்கு சிறுநீரக பாதையில் ரத்தப்போக்கு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது
 • மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அவர் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்.
 • இல்லத்தில் இரவு நேரத்தில் மீண்டும் வலி ஏற்பட்டதை அடுத்து அடுத்த நாள் மீண்டும் மருத்துவமனையை சென்றடைந்தார்.
 • ஏற்கனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தற்போது வெளிநாடு சென்றதாகவும் அவர் திரும்பி வருவதற்கு நீண்ட நாள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
 • அப்பொழுதுதான் ஹார்வார்டு மார்க்கெட் அவர்களுக்கு அவர் மருத்துவமனையில் ஒரு அபாயகரமான தொற்றுநோய் (கோல்டன் staphah Hospital variety) ஏற்பட்டு இருப்பதை அறிந்தார்?.
 • அந்த தொற்று நோயின் காரணமாக மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான நோயாளிகளும் வெளியேற்றப்பட்டார்கள்.
 • ஹார்வர்டு மேற்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் ஐந்து நாட்கள் வரை தங்கியிருந்தார்.
 • இத்தொற்று நோயில் இருந்து விடுபடுவதற்கு இரு ஆன்ட்டிபயாட்டிக் பயாடிக் மருந்துகள் மட்டுமே பயன்பாடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
 • முதலாவது ஆன்ட்டிபயாட்டிக் அவருக்கு செலுத்தப்பட்டது.
 • அதன் காரணமாக அவருடைய தொற்றுகுணமடையவில்லை.
 • இரண்டாவது ஆன்ட்டிபயாட்டிக் செலுத்துவதற்கு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஹார்வார்ட்

இதை ஏற்றுக்கொள்ளாமல் பகவான் பாபா அவர்களிடம் இரவு முழுவதும் மன்றாடி வழிபாடு செய்தார்

 • அன்று காலை விடியல் வேலையில் பகவான் பாபா அவர் முன் தோன்றி அவருக்கு விபூதியை அளிப்பதற்காக கையை சுழற்றுவது இவருக்கு நன்றாகத் தெரிந்தது
 • அந்நிலையில் உறக்கத்தில் ஆழ்ந்தார்
 • மீண்டும் உறக்கம் தெளிந்து பார்க்கும் பொழுது உடலில் நல்ல பலம் ஏற்பட்டு நன்றாக நடக்கக் கூடிய நிலைக்கு சென்றதை அறிந்து பகவான் பாபா அவர்களுக்கு நன்றி கூறினார்


 • இவ்வாறு மன தொலைக்காட்சியை மூலம் இறை காட்சி பெறுவதும் இறைவனோடு உரையாடுவதும் ஆழ்ந்த பயிற்சி மூலமாகவே சாத்தியப்படும் பெரும்பாலும் விடியற் காலை நேரங்களில் அதாவது பிரம்ம முகூர்த்தம் என்னும் வேலையில் இந்த கிளியர் வாயன்ஸ் எனமன தொலைக்காட்சி நமக்கு புலப்படும்


 • ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவது ஜெபம் செய்வது மனதை அமைதியாக வைத்துக் கொள்வது பலருக்கு உதவுவது அன்புடன் இருப்பது

ஆகியவற்றின் மூலம் இந்த மண தொலைக்காட்சி என்ற கிளியர் வாயன்ஸ் ஆற்றலை நாம் பெற முடியும் ஜெய் சாய்ராம்

19 

Share


Gopalakrishnan veerasamy
Written by
Gopalakrishnan veerasamy

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad