Bluepadவிமானி என்பது சாதாரண வேலை இல்லை ...!
Bluepad

விமானி என்பது சாதாரண வேலை இல்லை ...!

A
Ananth A.
26th Jun, 2020

Share




சில வருடங்களுக்கு முன்னால் நான் பைலட் ஆக வேண்டும் என்று பலபேர் கூறி வந்தார்கள். ஆனால் அப்படி கூறியவர்களில் வெகு சிலர் தான் அந்த லட்சியத்தை எட்டிப்பிடித்து இருக்கிறார்கள்.

பைலட் என்பது ஜாலியாக பஸ் ஓட்டுவது போன்ற ஒரு வேலை கிடையாது. ஆனால் அந்த பைலட் வேலை செய்பவர்கள் இப்படித்தான் கூறுவார்கள் " எங்களுக்கு என்ன விமானத்தை எடுத்தோமா கண்ணாடிவழியாக வானத்தை வேடிக்கை பார்த்தோம்" என்று கூறுவார்கள். ஆனால் அவர்கள் கூறும் வார்த்தையில் ஒரு பூடகமான உண்மை ஒளிந்து இருக்கிறது.

விமானி ஆவது எப்படி?

நமது நாட்டில் டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஏவியேஷன் என்று ஒரு குடும்பம் இருக்கிறது. அவர்கள் அளிக்கும் லைசென்சை பெற்றால்தான் ஒரு விமானத்தை இயக்க முடியும். விமானத்தைப் பொருத்தவரை பிரைவேட் பைலட் லைசென்ஸ், கமர்சியல் பைலட் லைசன்ஸ் என்று இருவகைப் படுகிறது. பிரைவேட் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் சொந்தமாக வைத்திருக்கும் விமானத்தை தான் ஓட்ட முடியும் அதுவும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான்.

ஆனால் கமர்சியல் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தால் எந்த விமான நிறுவனத்தில் வேண்டுமானால் சேர்ந்து பணியாற்ற முடியும். இந்த பிரைவேட் பைனான்ஸ் பைலட் லைசென்ஸ் பெற 40 மணிநேரம் விமானம் ஓட்டி பழகி இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் லைசென்ஸ் பெறுவதற்கு 200 முதல் 250 மணிநேரம் விமானம் ஓட்டி பழகி இந்த லைசென்சை பெறவேண்டும்.

இந்த விமானி ஆகும் கனவு சிறுவயதிலிருந்தே துளிர்க்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்தால் விமானி ஆக முடியும், பட்டப்படிப்பு கட்டாயம் கிடையாது. தேவைப்பட்டால் வேலை பார்த்துக்கொண்டே படிப்பதற்கு தடையில்லை. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு மேக்ஸ் மற்றும் பிசிக்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும் (அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் ) .

அதன் பின்னர் தான் இந்த கமர்சியல் பைலட் லைசென்ஸ் காண முயற்சியை எடுக்க முடியும். 16 வயது அல்லது பதினேழு வயது பூர்த்தியாகி இருந்தால் இந்த பயிற்சியை பெற முடியும். ஆனால் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரியும்போது இப்போதெல்லாம் 20 - 21 வயது பூர்த்தி ஆனால் தான் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே இப்போது விமானியாக விரும்புபவர்கள் கூட ஒரு யுஜி படிப்பை முடித்து விட்டுத்தான் இந்த விமானி பயிற்சி நிறுவனங்களில் சேருகிறார்கள்.

விமானி ஆனால் என்னெல்லாம் சலுகைகள் கிடைக்கும் :

ஒரு விமானியின் வேலை என்பதை விட அது ஒரு மிகப் பெரிய கடமை என்றே கூறலாம். தான் மட்டும் பயணிக்காமல் தன்னை நம்பி வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் வாழ்விற்கு அவர் தான் உத்தரவாதம். ஒரு விமானியின் கணிப்பு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். விமானத்தை எடுக்கும் போதும், பயணிக்கும் போதும், கீழே இறக்கும் போதும் மிக சமயோஜிதமாக அவர் செயல்பட வேண்டும். வான்வெளி என்பது ஆயிரம் பிரச்சினைகளை கொண்டது. சிறு பறவைகளால் கூட விமானத்திற்கு சேதம் ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.

வானிலையே மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஆனால் ஒரு விமானியின் கண்களுக்குத் தெரியும் காட்சியானது நம் வாழ்நாளில் பலரால் காணமுடியாத ஒரு காட்சிதான். அவர்கள் அதை நித்தமும் காண்கிறார்கள். சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் அவர்களைப்போல காணவே முடியாது. அதுவும் அதிகாலை நேரத்தில் வானில் பறந்தவர்கள் இத்தகைய அருமையான காட்சிகளை பலமுறை இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் பயணம் செய்யும் அத்தனை நேரமும் மிக சவாலாக தான் இருக்கும்.

ஒரு விமானியின் மிடுக்கான தோற்றம் அவருக்கு அவரின் சீருடை மூலமே கிடைத்துவிடுகிறது. ஒரு விமானி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் காலை முதல் மாலை வரை ராஜ உபசரிப்புடன் மகிழலாம். வீட்டில் தங்கி இருந்தால் காலை அவர்களே கொண்டு செல்ல கேப் சாயந்திரம் மீண்டும் வீட்டில் கொண்டு விட கேப். அவர் விமானத்தில் பயணம் செய்து தங்கும் நாட்களில் இரண்டு மூன்று நாட்கள் பைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு என்று ஏக போக வாழ்க்கை தான். ஆனால் அத்தனைக்கத்தனை ரிஸ்க்கும் அதில் அடங்கியிருக்கிறது.

விமானிகள் இந்த வாழ்க்கை பற்றி கூறும் போது எதுவுமே முடியாது என்று கிடையாது என்று இல்லை என கூறுவார்கள். ஆனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றுவதைப் போல இது அவ்வளவு எளிதான வேலை ஒன்றும் கிடையாது. இது வேலை என்று கூறுவதை விட இது ஒரு மிகப்பெரிய சுமை, கடமை என்று கூட சொல்லிக் கொள்ளலாம். இந்த வேலையைப் பொறுத்தவரை பொறுப்புணர்ச்சி சற்று அதிகமாகவே இருக்க வேண்டும்.


9 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad