Bluepad | Bluepad
Bluepad
சக்திமான் - இந்தியாவின் நிகரற்ற ஒரு சூப்பர் ஹீரோ!
A
Arvind Kumar
26th Jun, 2020

Share

சூப்பர் ஹீரோக்கள் என்றால் இன்றைய குழந்தைகளுக்கு ஞாபகம் வருவது அவெஞ்சர்ஸ் அல்லது ஸ்பைடர்மேன் தான்.
ஆனால் எங்களைப் போன்ற தொண்ணூறுகளின் குழந்தைகளுக்கு சூப்பர் ஹீரோ என்றாலே என்றென்றைக்கும் சக்திமான் தான் நினைவுக்கு வருவார் ஏனென்றால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.


சக்திமான்  - இந்தியாவின் நிகரற்ற ஒரு சூப்பர் ஹீரோ!


அன்றைய காலகட்டத்தில் பொதிகைத் ( தூர்தர்ஷன் ) தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சக்திமானை பார்க்க நாங்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்றாகக்கூடி யார் வீட்டில் டிவி இருக்கிறதோ அவர் வீட்டிற்கு ஆஜராகி விடுவோம். அப்படி ஒன்று கூடி பார்த்தோம் என்பதாலோ என்னமோ இன்றளவும் எங்கள் நினைவில் அவர் நிறைந்து இருக்கிறார்.

சக்திமான் டைட்டில் பாடல்கள் எல்லாம் எங்களுக்கு இன்று வரை கூட அத்துப்படி. நமது புராணங்களை ஒத்த பஞ்சபூதங்களின் சக்திதான் சக்திமான்க்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்று அந்த டைட்டில் பாடலில் .அப்போது பூமி அவருக்கு என்ன வழங்கியது , ஆகாசம் என்ன வழங்கியது, அக்னி என்ன வழங்கியது என்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சொல்லி முடிப்போம்.

அதுவும் சோப்ளாங்கி கங்காதர் ஆக இருந்துகொண்டு திடீரென்று அவர் சக்திமான் ஆக எப்போதுதான் மாறுவார் என்று ஏங்கியபடி பார்த்துக் கொண்டிருப்போம். அந்த சக்திமானாக அவர் மாறும் போது அதில் வரும் கிராபிக்ஸ் கண்டு நாங்கள் அப்படி அசந்து இருக்கிறோம். இன்று அதை பார்க்கும் போது மிக சாதாரணமாகத் தோன்றினாலும் அன்றைய காலகட்டத்தில் அது ஒரு மிகப்பெரிய விஞ்ஞான விசித்திரம் தான்.

அந்த சக்திமானை பார்த்து பலர் தற்கொலை செய்ய ஆரம்பித்து விட்டதால் ( அவர் வந்து காப்பாற்றுவார் என்று ) சக்திமான் முடியும் தருவாயில் கால்மணிநேரம் எங்களுக்கு அவர் அறிவுரையும் கூட வழங்க ஆரம்பித்துவிட்டார்.

அதிலும் அதில் தோன்றும் வில்லனான கிரேஷன் சற்று துணையாக வரும் சீமா பிஸ்வாஸ் போன்றவர்களின் கதாபாத்திரம் இன்னும் எங்கள் மனதில் அப்படியே பதிந்து இருக்கிறது. சக்திமான் எவ்வாறு தாக்குவார் என்பதை பள்ளி வகுப்புகளில் இடைவெளியில் நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்துக் காட்டுவோம். சக்திமான் போல சூத்திரன் என்று கூறி கைக்கு மேலே தலையை தூக்கி பைத்தியக்காரத்தனமாக தானே தானே சுற்றிக் கொல்வோம்.

அந்த சக்திமான் எங்களுக்கு பல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தார். மின்சாரத்துடன் விளையாடக்கூடாது, வீட்டில் பெரியவர்களை மதிக்க வேண்டும் , அப்பா அம்மாவின் சொல் பேச்சு கேட்க வேண்டும் , படிக்கும் நேரத்தில் படிக்க வேண்டும் , ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சக்திமான் பார்க்கிறேன் என்று கூறி ஏமாற்றக் கூடாது என்றெல்லாம் பல அறிவுரைகள் வழங்கி இருக்கிறார். இந்த சக்திமான் வெறும் தொலைக்காட்சி தொடர் மட்டும் கிடையாது எங்களின் மிக பழமையான பெருமையான நினைவலைகள் கூட.

அந்த சக்திமான் டிரஸ் என்பது போட்டுக்கொண்டு சில பணக்கார வீட்டுப் பிள்ளைகள் பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். நாங்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்போம் எங்களுக்கும் அப்படி ஒரு துணி எடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் .

இன்றளவும் அந்த ஆசை ஒரு தீராத ஆசை தான். சென்ற வாரம் கூட ஒரு சக்திமான் ரசிகர் தனது பிள்ளைக்கு சக்திமான் உடையை அணிவித்து அவரின் சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தார். இராமாயணம், மகாபாரதத்தை போல இப்போது சக்தி மானையும் நேஷனல் அலைவரிசையில் ஒளிபரப்பி வருகிறார்கள். என்ன அதில் ஒரு சிறிய சங்கடம் என்றால் சில நாட்களில் தமிழுக்கு பதிலாக அப்படியே ஹிந்தியில் ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள். சக்திமான் என்ன பேசுகிறார் என்று புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொள்கிறோம்.

சக்திமான் கிராஃபிக்ஸ் அமைப்பிற்கு ஒரு தனி குழு செயல்பட்டது என்பது எங்களுக்கு பின்னால்தான் தெரியவந்தது. யூட்யூபில் சக்திமான் என்று சர்ச் செய்யும் போது அதன் கிராபிக்ஸ் வேலைகளை அவர்கள் எவ்வளவு முனைப்புடன் செய்தனர் , அந்த நாளிலேயே எவ்வளவு பொருட் செலவு செய்தார்கள் என்ற விவரங்கள் எல்லாம் எங்களை மிகப்பெரிய வியப்பில் ஆழ்த்தியது!!

பின்ன ! " இந்தியன் சூப்பர் ஹீரோ " என்றால் சும்மாவா என்ன ?
9 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad