Bluepadஇருட்டுக்கடை அல்வா - பிராண்ட் அவர்னஸ் இன் முன்னோடி.
Bluepad

இருட்டுக்கடை அல்வா - பிராண்ட் அவர்னஸ் இன் முன்னோடி.

G
Gayathri
25th Jun, 2020

Share

திருநெல்வேலி என்றாலே அனைவருக்கும் நெல்லையப்பர் காந்திமதி ஞாபகம் வருகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக இருட்டுக்கடை அல்வா ஞாபகத்திற்கு வந்து விடுகிறது.
" திருநெல்வேலிக்கே அல்வாவா " என்று நாம் நித்தமும் ஒரு தடவை கூட சொல்லாமல் இருக்க மாட்டோம். அந்த அளவிற்கு அந்தக் கடையும் அதில் விற்கப்படும் அல்வாவும் நம் வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டது. அந்த இருட்டு கடை என்பதற்கு கடையை வெளியே பெயர் கூட கிடையாது. ஒரு கடை அது அந்த காலம் முதலே இருட்டாக இருந்திருக்கிறது. வெறும் அரிக்கேன் விளக்கை வைத்து வியாபாரம் செய்து இருக்கிறார்கள்.

இப்போதும் கூட அதையே மைண்டைன் செய்து வருகிறார்கள் இப்போது அந்த கடையில் எறிவது வெறும் ஜீரோ வாட்ஸ் பல்புகள்தான்.ஆனால் கடையை திறந்து மூடுவதற்குள் கிட்டத்தட்ட 100 கிலோ அல்வா கண்ணிமைக்கும் நேரத்தில் விற்று விடுகிறது.

இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அந்த தரம்.. அந்த சுவை! தமிழகத்தில் கோதுமை மாவு அல்வா தான் மிக மிகப் பிரபலம். அதிலேயே இவர்கள் ஒருவிதமாக கிளறி நெய் பக்குவத்தை சற்று மாற்றி நாவில் தாண்டவமாடும் ஒரு சுவையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

மதுரை, சிதம்பரம் போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் கோதுமை அல்வா தட்டுப்பாடு என்றால் இந்த தமிழகம் முழுவதுமே திருநெல்வேலி அல்வாவுக்கு தட்டுப்பாடு ( டிமாண்ட் ) இருக்கிறது.

இந்த டிமாண்டை வைத்துக்கொண்டு திருநெல்வேலி அல்வா என்று அவர்களை ஒட்டி பலர் பல கோடி ரூபாய் லாபம் பார்த்து வருகிறார்கள். இன்று இருக்கும் சூப்பர் மார்க்கெட்களில் சரியாக பில் போடும் இடத்தில் மிகப்பெரிய அளவில் திருநெல்வேலி அல்வா என்று விளம்பரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இப்படி எல்லாம் இந்த திருநெல்வேலி அல்வா என்னும் ஒரு பெயரை பயன்படுத்தி பல தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்கள்.

திருநெல்வேலியில் அல்வா கிடைக்கும் என்பது திருநெல்வேலிக்கு ஒரு முறை கூட போகாதவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது என்றால் அந்த அல்வாவின் பெருமையை பார்த்துக்கொள்ளுங்கள்.
இங்கே திருநெல்வேலி அல்வா என்று அவர்களுக்கு கிடைக்கும் அல்வாவை சாப்பிட்டு விட்டு அங்கு திருநெல்வேலியில் சென்று அங்கு கிடைக்கும் அல்வாவை சாப்பிட்டாள் தான் அவர்களுக்கு புரியும் இந்த இரு சொற்களுக்கும் உள்ள உண்மையான வித்தியாசம் என்னவென்று. இந்தத் திருநெல்வேலி அல்வா என்னும் ஒரு பிராண்டை உருவாக்கி பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட குறைந்த காலத்தில் கொள்ளை லாபம் பார்த்து இருக்கிறது.

ஆனால் உண்மையில் அந்த இருட்டு கடைக்கு ஒரு பெயர் பலகை கூட கிடையாதாம், விளம்பரதாரர்கள் கிடையாது, இன்டர்நெட்டில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யவில்லை. ஆனால் அவர்களின் வாடிக்கையாளர்கள் இந்த உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள்.

இதை நினைத்து நிச்சயமாக ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இன்று புதிது புதிதாக வரும் மார்க்கெட்டிங் தங்களுக்கு பல பல பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இதைப்பற்றி எதுவுமே அறியாமல் தரம் அதை மட்டுமே இத்தனை காலமாக தொடர்ந்து செய்து வரும் அந்த இருட்டு கடை அல்வா இன்னும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதுதான் அல்வா பிரியர்களின் விருப்பம்.

அந்த ஒரிஜினல் சுவைக்கும் இங்கு கிடைக்கும் ஒரிஜினல் போன்ற அல்வாக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இதுதான் பிராண்ட் அவர்னஸ் என்றே தெரியாமல் தமிழகம் முழுக்க ஏன் இந்தியா முழுவதும் திருநெல்வேலி அல்வா இருட்டுக் கடை என்று ஒரு பெரிய பிராண்ட் அவர்னஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இதைத்தான் பெரியவர்கள் கூறுவார்கள் தரம் நன்றாக இருந்தால் விளம்பரமே தேவையில்லை என்று.

அந்த பொருளை வாங்குபவர் ஒவ்வொருவரும் சம்பளமில்லாத விளம்பரதாரர்கள் ஆக மாறி விடுவார்களாம். அதுதான் இந்த திருநெல்வேலி அல்வா விஷயத்தில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

என் நண்பர் ஒருவர் கால்கடுக்க இரண்டு மணி நேரம் க்யூவில் நின்று இந்த அல்வாவை வாங்கி வந்ததாக பெருமை பேசிக் கொள்வார். எனக்கு முதல் முறை கேட்கும் போது என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றியது. ஆனால் அங்கு சென்று பார்த்த போது தான் அதன் உண்மையான அருமை புரிந்தது.
12 

Share


G
Written by
Gayathri

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad