Bluepadவந்துவிட்டது சோனி பிளேஸ்டேஷன் 5 !
Bluepad

வந்துவிட்டது சோனி பிளேஸ்டேஷன் 5 !

S
Senthil Rajan
25th Jun, 2020

Share



ப்ளே ஸ்டேஷன் என்பது ஒரு வித்தியாசமான மிகப்பெரிய ஒரு பொழுதுபோக்கு அம்சம். அதில் கண்களுக்கு தெரிவது போன்றவை அதில் வரும் காட்சிகள் அமையப்பெற்றிருக்கும் அதை விளையாடி பழகிவிட்டால் வெளி உலகமே தெரியாத அளவிற்கு கூட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி அடிமையாகி இருக்கிறார்கள்.

சோனி நிறுவனம் அவர்களின் பிரத்தியேக தயாரிப்பான பிளேஸ்டேஷன் ஒரு சீரியஸாக வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் பிஎஸ் 1, 2, 3, 4 வரிசையில் இப்போது வரவிருக்கிறது அவர்களின் அடுத்த அதிரடி அரசனான 5.

சென்ற வாரம் இந்த பிளேஸ்டேஷன் 5 க்கான ட்ரெய்லர் வெளியானது அந்த டிரைலரை மிக அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது வெறும் ஒன்றரை நிமிடம் தான் அந்த ட்ரெய்லர் என்றாலும் அதில் வந்த சப்தமும் அந்த ஒளி கலவையும் பார்ப்பவரை அசத்தும் வகையில் இருந்தது.

இந்த பிளேஸ்டேஷன் பையானது கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தாலும் அதை பார்க்க மிகவும் கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறது. இந்த பிளேஸ்டேஷன் 5 என்பது இரண்டு வித்தியாசமான வகைகளில் வருகிறது.

அதில் ஒன்று டிஜிட்டல், இன்னொன்று ப்ளூரே இருக்கக்கூடிய வகையில் வந்து இருக்கிறது. இதில் மிக நவீனமான கிராபிக்ஸ்கள் மற்றும் விஷுவல்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இந்த ஹார்ட்வேர் டிரெய்லரை கிட்டத்தட்ட மூன்று கோடி பேர் இதுவரை கண்டு இருக்கிறார்கள். இந்த பிளேஸ்டேஷன் 5 வருவதற்கு ஏற்ப பல விளையாட்டுகளை மேலும் தரம் உயர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு வர இருக்கும் சோம்பி வகை விளையாட்டுகளில் இந்த தரமுயர்த்தம் இடம் பெறும் என்று நம்பப்படுகிறது.

இதுபோல பல கேப்டன் மார்வெல் விளையாட்டுக்களிலும், அவெஞ்சர்ஸ் விளையாட்டுக்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இந்த பிரத்யேக PS 5 காக செய்யப்பட்டு வருகிறது.

இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் இந்த பிளேஸ்டேஷன் நேர்கோட்டில் வைத்து விளையாடலாம், பக்கவாட்டிலும் வைத்து விளையாடலாம் விளையாடுபவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கண்டிப்பாக தரும் என்று கூறுகிறார்கள் இந்த விளையாட்டு துறை சார்ந்த வல்லுநர்கள்.

தற்போது வியாபாரத்தில் இருக்கும் பிளேஸ்டேஷன் 4 இன் இந்திய விலை கிட்டத்தட்ட 28 ஆயிரம் ரூபாயாக இருக்கிறது. இந்த பிளேஸ்டேஷன் 5 சந்தைக்கு வந்தால் கிட்டத்தட்ட அதன் விலை 40 ஆயிரத்திற்கு குறைவில்லாமல் தான் இருக்கும் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த பிளேஸ்டேஷன் 5 இல் அதிநவீன கேமராக்கள் சென்சார்கள் பொறுத்தி இருக்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் மென்பொருள் மற்றும் பல விஷயங்களை மிக விரிவான அளவிற்கு மாற்றி வைத்திருக்கிறார்கள். மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த சோனி நிறுவனம் வேறு பிளேஸ்டேஷன்களை சந்தை படுத்த விரும்பவில்லை என்பதாலும் பிளேஸ்டேஷன் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகள் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்கும் வகையில் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

ஆனால் இந்த தகவல்களை பற்றி எல்லாம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் சோனி நிறுவனம் வெளியிடவில்லை. அவர்கள் சிறிது சிறிதாகவே அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு தூண்டி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பிளேஸ்டேஷன் 4 மற்றும் ஐந்திற்கும் இருக்கும் உருவ வேறுபாடுகளை காண்பித்து ஒரு வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவையும் பல கோடி பேர் பார்த்து ஆஹா ஓஹோ என்று பாராட்டி வருகிறார்கள்.

இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த அருமையான தயாரிப்பு சந்தைக்கு வந்துவிடும் அப்படி வந்துவிட்டால் இந்த விளையாட்டு வெறியர்களை கையிலேயே பிடிக்க முடியாது. இந்த பிளேஸ்டேஷன் 5 ஐ கையில் வைத்துக் கொண்டு உலகமே அது தான் என்ற நினைப்பில் இருந்து விடுவார்கள்.

10 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad