Bluepadகோலி வட பாவ் _ வெங்கடேஷ் ஐய்யரின் விடா முயற்சி…!
Bluepad

கோலி வட பாவ் _ வெங்கடேஷ் ஐய்யரின் விடா முயற்சி…!

A
Arvind Kumar
24th Jun, 2020

Share

வட பாவ் என்றாலே நமக்கு உடனே ஞாபகம் வருவது மும்பை நகரம் தான். அங்கு நமது பண்டங்களை விட வடபாவ் தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


அந்த வட பாவை நம்பியே வெங்கடேஷ், தான் பார்த்துக் கொண்டிருந்த பெரிய வேலையை விட்டுவிட்டு நண்பர்களுடன் இணைந்து கோலி வட பாவ் என்னும் சாட் சென்டரை துவங்கினார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் அதுதான் உண்மை 2004 ஆம் ஆண்டு , நான் பார்த்துக்கொண்டிருந்த நல்ல உத்தியோகத்தை விட்டுவிட்டு கையிலிருந்த காசை வைத்துக்கொண்டு இந்த வடாபாவ் கடையை துவங்கிவிட்டார் வெங்கடேச ஐயர்.

மும்பையில் இருப்பவர்களுக்கு பொதுவாக நேரமே இருக்காது. எதைக் கொடுத்தாலும் உடனே சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள்.. ஆனால் ருசியான உணவை கொடுத்து விட்டால் அவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள். காசுபணம் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை.

அவர்களுக்கு ஏற்ற ஒரு துரித உணவை தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனைகள்தான் இவரின் இந்த கடை ஆரம்பிக்கப்பட்டது. அங்கு சமோசாவை விட இந்த வடபாவ் தான் துரிதமாக விற்றுத்தள்ளும்.

வடபாவ் என்பது பன்னுக்கு இடையே வைக்கப்படும் ஒரு மோரமோரபான நமது வடையை போன்ற ஒரு மசாலா கலவை. ஆனால் அந்த கலவை சுவையாக இல்லை என்றால் அந்த வடபாவின் சுவையே கெட்டுவிடும்.அவர் அந்த வியாபாரத்தை துவங்கும்போது யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்க வில்லை. மாறாக மும்பை போன்ற நகரங்களில் இதுபோன்ற பல தின்பண்ட கடைகள் வைப்பதா, நிரந்தர வேலை தான் முக்கியம் என்றெல்லாம் கூறி அவர் மனதை கலைத்து எச்சரிக்கை செய்ய துவங்கினார்கள்.

ஆனால் அவர் எடுத்த முடிவில் மிக உறுதியாக இருந்தார். என்றாக இருந்தாலும் இந்த சுய தொழில் முயற்சியை நாம் தூவங்கத்தான் போகிறோம். இதை காலம் கடத்த வேண்டாம் என்று மிக மிக தெளிவாக சிந்தனை செய்யத் துவங்கினார்.

அதன் விளைவே அவர் கண்ட வெற்றி. ஒரு திட்டம் தீட்டினால் அதை நாலாபுறமும் நன்றாக ஆராய வேண்டும். என்னென்ன நிகழ்காலத்தில் செய்யவேண்டி இருக்கும், அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து நண்பர்களுடன் நன்றாக ஆலோசித்த பின்னரே இந்த உறுதியான முடிவை அவர் எடுத்தார்.

முதலில் கடை ஆரம்பித்தவர், சிறிது நாட்கள் கழித்து மக்கள் மனதில் பதியும் படி ஒரு லோகோவை கச்சிதமாக வடிவமைத்தார். மொட்டைத் தலையோடு ஒருவர் மீசை வைத்து இருப்பது போன்ற ஒரு லோகோ.

பல போட்டிகளுக்கு இடையே கல்யாண் நகரில் ஆரம்பிக்கப்பட்ட அவரது சிறிய கடை, சில வருடங்களிலேயே மும்பையை சுற்றி 15 , 16 இடங்களில் கிளை துவங்கும் அளவுக்கு வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது.

இவையெல்லாம் ஒரே நாளிலேயே நடந்ததா என்றால் நிச்சயமாக இல்லை. அவருக்கும் எக்கச்சக்க நிதி நெருக்கடி ஏற்பட்டது , அவர் மீது நம்பிக்கை இல்லாத வங்கிகள் கடனை கொடுத்த சில நாட்களிலேயே அவரை திருப்பி கேட்டு நச்சரிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் எல்லாவற்றையும் கடந்தவர். சாதித்துக் காட்டினார்.

அவரின் விடாமுயற்சி வித்தியாசமான அணுகுமுறையை தான் இந்தத் தொழிலில் அவர் இத்தனைநாள் நிலை பெற வைத்தது. சுற்றி என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனித்தவர் அந்த வடபாவ் மசாலாவை வறுத்து எடுபதர்க்கு தனியாக ஒரு போஸ்டரை உருவாக்கி விட்டார்.இப்படி என்னென்ன புதுமைகள் செய்யலாம் என்று யோசித்து யோசித்து புகுத்தி வந்தார்.

வாடிக்கையாளரின் மனதை நன்றாக அறிந்தவர் விதவிதமான விஷயங்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்க துவங்கியதால், அவர் கடையில் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது.இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 320 இடங்களில் அவரின் கோலி வட பாவ் கடை கொடிகட்டி பறக்கிறது.

இவரைப் பற்றி பல பல்கலைக்கழகங்களில் பாடம் எடுக்க தொடங்கி விட்டார்கள். அகமதாபாத் ஐஐஎம், லண்டன் பல்கலைக் கழகங்கள் போன்ற உலகின் தலைசிறந்த நிறுவனங்கள் ஒரு சாமானியர் பற்றி பாடம் எடுக்கத் துவங்கி விட்டது. இதற்கெல்லாம் காரணம் அவரின் விடா முயற்சியும் விஸ்வரூப வெற்றியும் தான்.


9 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad