Bluepadஅண்டர்டேக்கர் அறிவித்த ரிட்டயர்மென்ட் ... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Bluepad

அண்டர்டேக்கர் அறிவித்த ரிட்டயர்மென்ட் ... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

A
Ananth A.
24th Jun, 2020

Share

90களின் குழந்தைகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விளையாட்டு என்றால் அதுதான் W.W.F . அது ஒரு வகையான ரஸ்லின் தான் இருந்தாலும் வலயத்திற்குள் வீரர்கள் முடிந்தளவு அடித்துக் கொள்வார்கள்.




ஆண் பெண் என்ற பேதமின்றி முடிந்தளவு ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள். இன்னும் சிலர் பேர் கட்டை, ஏணி போன்றவற்றை கொண்டு ரத்தம் வடிய சண்டை போடுவார்கள். இந்த டபிள்யூ. டபிள்யூ. எப் . இல் பலவகைகள் இருக்கிறது.

ரெஸ்லிங் , ரசில் மேனியா , சம்மர் ஸ்லாம், ஆப்ட்ர் பர்ன் , ராயல் ரும்பிளே என்று பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். இதில் பெயருக்கு ஏற்ற வீரர்கள் அடித்துக் கொள்வார்கள். அப்படி அந்த விளையாட்டில் பல வீரர்கள் மிகப்பிரபலம். அந்த விளையாட்டில் பங்குபெற்ற பல வீரர்கள் ஹாலிவுட் சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார்கள்.

ராக் , ஜான் மைக்கல் , ஜான் சீனா போன்றவர்கள் பல சினிமாக்களிலும் தோன்றி விட்டார்கள். அதில் குறிப்பாக அண்டர்டேக்கரை யாராலும் மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்த விளையாட்டில் அவர் பங்கேற்று வருகிறார். அண்டர்டேக்கர் வரும்போது எழுப்பப்படும் சத்தம் என்பது மிகப் பிரபலம். அண்டர்டேக்கர் தோன்றும்போது முற்றிலும் அந்த இடம் இருட்டாக ஆகி விடும் பிறகு , நீல கலரில் ஒரு லைட் வெளிச்சம் வரும் பிறகு டுங் என்ற மணி ஓசை கிளம்பும்.

இப்படி ஒரு அருமையான பில்டப்பு இருந்தால் அண்டர்டேக்கர் எப்போதும் தோன்றுவார். அவர் பங்கு பெற்ற ரசூல் மேனியா போட்டிகளில் 25 போட்டிகளில் கிட்டத்தட்ட 23 போட்டிகளுக்கு மேலே வெற்றி பெற்றவரும் ஆவார். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம், வரும் போது இத்தனை பில்டப்புகள் எதிரிகளை லாவகமாக தூக்கி வைத்து அடிக்கும் முறை என்று அவரை ரசிக்க பல காரணங்கள் இருக்கிறது. அன்டடேக்கர் வந்தால் எதிரிகள் சிதறி ஓடி விடுவார்கள் என்றெல்லாம் மாணவர்கள் பல பில்டப்புகள் கொடுப்பார்கள்.

பத்தாண்டுகளுக்கு முன்னால் அண்டர்டேக்கர்ருக்கும், ஜான் சீனாக்கும் சண்டை வந்தால் ஜான்சினா இறந்துவிடுவான் என்றெல்லாம் உதார் விட்டுக் கொண்டு திரிந்தார்கள். மாணவர்கள் விளையாடும் போது அண்டர்டேக்கர் கார்டு வைத்திருந்தால் அது ஒரு மிகப்பெரிய வெற்றியாக கருதி வந்தார்கள்.

இப்படி புகழ்பெற்ற அண்டர்டேக்கர் பலவகையான வதந்திகளையும் தாங்கி வந்தார். அந்த வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பது பின்னாளில் கண்டறியப்பட்ட உண்மை.அண்டர்டேக்கர் சண்டை போடும் போது ஒருவர் ஒரு சிறு குடுவையை அவர் முன்னால் நீட்ட அதை கண்ட அவர் பயந்து நடுங்கி ஓடுவார்...

ஏனென்றால் அந்தக் குடுவைக்குள் தான் அண்டர்டேக்கரின் உயிர் இருக்கிறது என்றெல்லாம் பார்ப்பவர்களை நம்ப வைத்தார்கள்!!உண்மையை சொல்லப்போனால் பைத்தியக்காரனாக ஆகிவிட்டார்கள் என்று கூறலாம்

அவரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்கமுடியாது. நாள்பட நாள்பட வயசானவர் , கெட்டவர் என்று அவரை திட்டினாலும்... அவருக்கு ஏழு முறை உயிர் போகும் வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் நம்பி ரெஸ்லிங் பார்த்த கூட்டம் தான் நமது தொண்ணூறுகளின் குழந்தைகள்.அண்டர்டேக்கர் வந்தாலே அது ஒரு தனி உற்சாகம் தான். அவர் அடிப்பது போலவே பள்ளிக்கூடங்களில் சண்டை போடுகின்றனர், அப்படி பலரின் கழுதுக்கள் கூட உடைபட்டு இருக்கிறது.

இந்த டபிள்யூ டபிள்யூ உண்மையா பொய்யா? இதெல்லாம் பார்க்கலாமா கூடாதா என்பதை எல்லாம் தாண்டி அண்டர்டேக்கர் நமது பல தலைமுறை சிறுவர்களை குதுகல படுத்தி வந்தார் என்பதை மறுக்க முடியாது.

அவரின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து "நோ மோர் அண்டர்டேக்கர் , நோ மோர் ரெஸ்லிங் " என்றெல்லாம் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.


8 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad