Bluepad | Bluepad
Bluepad
பரோட்டாவிற்கு இனிமேல் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி!
A
Ananth A.
23rd Jun, 2020

Shareபரோட்டாவிற்கு  இனிமேல் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மதிப்புக்கூட்டு வரி போன்ற மாநிலங்களுக்கான வரிகள் ஒழிக்கப்பட்டு தேசம் முழுவதும் ஒரே வழி என்கின்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி முறை கொண்டுவரப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி முறையை அறிமுகப்படுத்தியது முதல் பலர் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். பல சினிமாக்காரர்களும் இதையே சாக்காக பயன்படுத்தி தமக்கு இலவசமாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இந்த ஜிஎஸ்டி பற்றி தெளிவான புரிதல் இருப்பவர்கள் என்று பார்த்தால் யாருமே கிடையாது என்றே கூறலாம்.

அதாவது யாருக்குமே புரிவதில்லை என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். சாமானியர்களுக்கு இது அந்த அளவுக்கு புரியவில்லை. அதனால் வரும் செய்திகளை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

அதுபோல சில வசனங்களும் பொது மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப ஜிஎஸ்டி யை தாக்கி வைத்து பாராட்டுப் பெறுகிறார்கள். இது ஒரு ட்ரெண்ட் ஆக சில நாட்கள் சென்று கொண்டிருந்தது.

ஜிஎஸ்டி முறையில் ஒரு சில விஷயங்களுக்கான வரிகள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஜிஎஸ்டி கூட்டம் கூட்டி இருமுறையோ மாற்றப்படுகிறது. அப்படி இந்த முறை அந்த வரிகளுக்கு மாற்றிய ஒரு விஷயம் நம் அனைவருக்கும் ( பெரும்பாலானோருக்கு ) பிடித்த பரோட்டா.

பரோட்டா மைதா மாவால் செய்யப்படும் மிக அருமையான ஒரு டிபன். ஆனால் பலர் இதை மூன்று வேளையும் சாப்பிட தயாராக இருக்கிறார்கள். பரோட்டாவிற்கு சைடு டிஷ் ஆக சால்னா, பன்னீர் பட்டர் மசாலா அல்லது மட்டன் குருமா என்று ஊருக்கு ஏற்ப வைத்து வெளுத்து வாங்குவார்கள்.

பரோட்டாவை மசாலா பரோட்டா, கொத்து பரோட்டா என்று வித விதமாக பிரித்து மேய்ப்பவர்கள் நம் மாநிலத்தில் உண்டு. அதுவும் விருதுநகர் போன்ற ஊர்களில் பரோட்டாவை எண்ணெயில் பொரித்துக் கொடுப்பார்கள்.

இதுவரை ரொட்டி, சப்பாத்தி போன்ற பண்டங்களில் ஒன்றாக இருந்த பரோட்டா இப்போது அதில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டது. பரோட்டா பிரிக்கப்பட்டு விட்டதால் அடுத்தது இந்த நான், குல்க்கா போன்ற வகைகள் எதில் சேர்க்கப்படும் என்று மக்கள் இப்போது குழம்ப ஆரம்பித்து விட்டார்கள்.

என்ன வரி போட்டால் என்ன தமக்கு பிடித்த விஷயத்தை நாம் சாப்பிடாமலா இருக்கப் போகிறோம் என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பினாலும் இது இப்போதைக்கு மக்கள் விரும்பி விவாதிக்கும் ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்த அறிவிப்பை அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து பரோட்டா தனியாகவும் 18% ஜிஎஸ்டி என்பது இன்னொரு இரண்டாகவும் மாறியது இதை பலர் ஹாஸ்டக் செய்து அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தியர்களுக்கு பொதுவாகவே மிக அதிகம் பிடித்த விஷயம் பரோட்டா. அதுவும் குறிப்பாக இந்த லாரி ஓட்டுனர்கள் வெகுதூரம் பயணம் செய்பவர்கள் நெடு நேரம் பசி எடுக்காமல் இருக்க இந்த பரோட்டாவை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அது செரிமானமாகி விடுகிறது.

அதுபோல பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கூட மதிய வேளையில் பரோட்டா இருந்தால் போடுங்கள் என்று கூறி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு நமது தேசத்தின் ஒரு பாரம்பரிய உணவாகவே மாறி விட்டது பரோட்டா.

என்னதான் யூடியூப் களில் அல்லது மருத்துவர்கள் குழு பரோட்டா மைதாமாவில் செய்வது அது செரிக்காது என்று கூவிக்கூவி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும், பாத்துக்கலாம்... என்று சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

என்னதான் இது அஜீரணக்கோளாறு ஏற்படுத்தி உடலை பலவாறு துன்புறுத்தினாலும் அந்த ருசியின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

அளவுக்கு மீறினால் அனைத்துமே சற்று கடினம்தான்.

எது எப்படியோ நாம் அடுத்த முறை பரோட்டா விரும்பி சாப்பிடும் போது நாம் ஏற்கனவே செய்த செலவை விட கண்டிப்பாக அதிகமாகத் தான் இருக்கப்போகிறது. செலவா முக்கியம்? மனநிம்மதி தான் முக்கியம்!!


10 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad