Bluepad | Bluepad
Bluepad
சாத்தியமான கூட்டாளர் என்றால் யார்?.
S
Sriharini
23rd Jun, 2020

Share


சாத்தியமான  கூட்டாளர் என்றால் யார்?.

கூட்டாளிகள் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் மிக மிக அவசியம். பள்ளி பருவத்தில் நண்பன் கூட்டாளி ஆகிறான் அல்லது உடன்பிறந்த சகோதரர்கள் கூட்டாளியாக இருப்பார்கள். கூட்டாளிகளுக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை.

ஆனால் தொழிலிலோ வாழ்விலோ வரும் கூட்டாளிகளுக்கு ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும் அல்லது நாம் ஒரு சில விஷயங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு தொழில் என்பது ஒரு குழந்தையைப்போல அதுக்கும் பரிணாம வளர்ச்சிகள் உண்டு. குழந்தை தள்ளாடி நடக்கும் பொழுது தூக்கி விடுவோம் அல்லவா அது போல தான் நாமும் நமது கூட்டாளிகளும் நமது தொழிலை நிலையாக நிலைபெறச் செய்ய வேண்டும்.

ஒரு தொழில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்லவேண்டும் என்றால் அதற்க்கு ஒரு சாத்தியமான கூட்டாளர் மிக அவசியம் . அந்த கூட்டாளரை தேர்வு செய்வது பற்றிய சில பொதுவான வழிமுறைகள் பற்றி மேலும் காண்போம்.

திறமை அவசியம்:

முதலில் நாம் என்ன தொழில் செய்யப் போகிறோம் அதற்கு முதலில் கூட்டாளி அவசியமா என்பதை தேர்வு செய்யலாம். மிக சிறிய அளவு தொழில் தனியாக பார்த்துக்கொள்ள முடியும் என்றால் பார்த்துக் கொள்ளலாம். ஒரு சில தொழிலுக்கு கூட்டாளி இல்லாமல் சரிப்பட்டு வராது. வெறும் பணம் முதலீடு செய்பவர் மட்டுமல்லாமல் ஆலோசகர், நிர்வாகி, மற்றும் மேலாண்மை சார்ந்த நபர்கள் இப்படி பல்வேறு வகைப்படுகின்றன. நாம் தேர்ந்தெடுக்கும் கூட்டாளிகளுக்கு அத்தகைய திறமை இருக்கிறதா என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைய நிலையில் எல்லோருக்கும் எல்லாத் திறமையும் இருக்கு என்று தான் கூறிக் கொள்கிறார்கள் ஆனால் ஒரு தொழில் சிக்கல் வரும் போது நம்மை நட்டாற்றில் விட்டு எப்படி நகரலாம் என்று அவர்கள் யோசிப்பார்கள்.

பரஸ்பர நம்பிக்கை அதிமுக்கியம்:

வாழ்வில் ஒரு கட்டத்தில் ஒருவர் மற்றொருவரை நம்பித்தான் ஆகவேண்டும் என்பதும் ஆபத்தில் முடியலாம் . நீங்கள் அவரை நம்புவதும் அவர் உங்களை நம்புவதும் கட்டாயமாக இருக்கிறதோ இல்லையோ தொல்லை கொடுக்காமல் இருக்க வேண்டும். குருட்டு நம்பிக்கையும் தொழிலை சிதைத்துவிடும்.

முடிவெடுக்கும் திறமை:

முன்னர் குறிப்பிட்டது போல தொழிலில் சிக்கல் வேறு வேறு விதமாக வந்துகொண்டே இருக்கும் . அதற்கு முடிவெடுக்கும் திறமை மிகவும் அவசியம். முடிவு என்பது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுக்கக்கூடாது இருந்தாலும் அதிக நேரம் அவகாசமும் இருக்காது அதற்கு ஒரு தகுந்த சாதுரியம் தேவைப்படும்.

ஒருமித்த எண்ணங்கள்:

உலகில் எந்த ஒரு மனிதரும் ஒரே போன்று சிந்திப்பது இல்லை என்று ஒரு ஆய்வு கூறுகிறது ஒரே போல் சிந்திக்க வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் ஒருமித்த எண்ணங்கள் எப்படி தொழிலை முன்னெடுத்து செல்வது, இந்த வியாபாரத்தை எப்படி உறுதி செய்வது போன்ற விஷயங்களில் இருவரும் ஒத்துப் போக வேண்டும் இல்லாவிடில் இரு துருவங்களாக மாறி விடுவர். பலர் தொழிலில் ஈடுபடும் போது சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் என்று பங்குதாரர்களாக வைத்துக்கொள்வார்கள் அப்போது நிலைமை வேறாக இருக்கும் . அதிகமாக எதுவும் சொல்ல முடியாது. எதுவும் கேட்க முடியாது. ஏனென்றால் உறவில் விரிசல் விழுந்து விடுமோ என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.

வாழ்க்கையும் அப்படித்தான் நமது வாழ்க்கைத் துணை என்பவர் வெறும் வாழ்வில் கூட நடப்பவர் மட்டுமல்ல நம் வாழ்வின் கோணத்தையும் ஒத்து நடப்பவராக இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு முன்பே எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டால் வாழ்வு மிக மிக சுகமாக இருக்கும் சுவையாகவும் இருக்கும்.

19 

Share


S
Written by
Sriharini

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad