Bluepadபுத்தகம் படிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?
Bluepad

புத்தகம் படிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா?

S
Senthil Rajan
23rd Jun, 2020

Share

புத்தகம் படிப்பது என்பது ஒரு மிக மிக அருமையான ஒரு பழக்கம். அது நம்மில் பலருக்கு இப்போது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.ஒரு புத்தகம் என்பது தான் ஒரு மனிதனுக்கு முற்றிலுமான ஒரு வேறு உலகத்தை காட்டுவது. அந்த நாட்களில் வாழ்ந்தவர்களுக்கு உற்ற நண்பன் புத்தகம்தான். விடாமல் ஒரு கதையையோ, நாவலையோ படித்துக் கொண்டே இருப்பார்கள். சிலர் இன்றளவும் அப்படியான புத்தகப் புழுக்களாக தான் இருக்கிறார்கள்.

அப்படி என்ன புத்தகம் படிப்பதால் நன்மை ஏற்பட்டுவிடும் என்று இன்றைய தலைமுறையினர் பலருக்கு புரிவதில்லை.
எல்லாமே தேவையான விஷயங்கள் யூடியூபில் வீடியோவாக, மலிவாக கிடைக்கிறது. பிறகு ஏன் நாங்கள் புத்தகத்தை படித்து நேரத்தை வீணாக்க வேண்டும் என்பது போல அவர்கள் ஒரு கருத்தை கொடுக்கிறார்கள்.

புத்தகம் படிக்கும் பழக்கத்தினால் ஒரு அருமையான கருத்து ஏற்படும், சிந்தை ஒருநிலைப்படும், மனம் தெளிவடையும் என்று கூறுகிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக மன அழுத்தம் வரவே வராதாம். புத்தகத்தின் ஒரு விஷயத்தை நாம் மனக் கண்களால் தெரிந்து கொள்ள முடியும். அந்த மனக் கண்ணில் வரும் காட்சி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

உதாரணமாக மேகக் கூட்டத்தை நான் பார்க்கும்போது என் கண்களுக்கு கழுகுபோல தெரியும். அதே மேகக்கூட்டம் எனது சகோதரர் கண்ணுக்கு புலியாக தெரியலாம். ஏனென்றால் மேகத்தில் இருக்கும் உருவங்களை நமது மனதில் தெரிந்த விஷயங்களை வைத்துக் கொண்டுதான் நாம் உருவகப்படுத்த முயற்சி செய்கிறோம்.

அதுபோல இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை மனக் கண்களால் ரசித்து பார்ப்பது என்பது ஒரு அலாதியான இன்பம். அப்படி ஒரு இன்பத்தை நாம் பழகி விட்டால் எத்தனை அனிமேஷன் வீடியோ பார்த்தாலும் அதற்கு ஈடாகாது என்பது எளிதாக புரிந்து கொள்ளலாம்.

புத்தகங்களில் நடைமுறை வாழ்க்கைக்கு நேர்மாறான பல விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாவற்றைப் பற்றியும் புத்தகம் இருக்கிறது. எதை தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் புத்தகம் இருக்கிறது. இப்போதெல்லாம் புதிது புதிதாக வருபவர்கள் ஒரு சிறுகதையில் பல விஞ்ஞான நுட்பங்களை புகுத்தி எழுதுகிறார்கள். நடப்பு விஷயங்களைப் பொறுத்தவரை புத்தகம் படிக்காதவர்கள் சற்று பின்தங்கியே காணப்படுகிறார்கள்.

புத்தகம் படிப்பது என்பது வெறும் அறிவை மட்டும் வளர்த்துக் கொள்ள மட்டுமல்லாமல் அது ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் கருதப்படுகிறது.

வயதானவர்கள் பலர் இந்தப் புத்தகம் படிக்கும் பழக்கத்தை தான் உற்ற துணையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் முதுமையின் காரணமாக அவர்களுக்கு துணையாக பேச ஒத்தாசையாக இருக்க யாரும் தற்போது இருப்பதில்லை. எனவே அவர்களுக்கெல்லாம் உற்ற நண்பன் புத்தகம் தான்.

புத்தகம் படிக்கிறது எல்லாம் வயசானவங்க செய்கின்ற வேலை நாங்க எல்லாம் யூத் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமும் இப்போது அதிகரித்து விட்டது. புத்தகம் படிக்க வயது ஒன்றும் தடையே கிடையாது. 5வயது பிள்ளை முதல் 90-100 வயது உள்ளவர் வரை யார் வேண்டுமென்றாலும் புத்தகத்தை படிக்கலாம். அந்த அளவிற்கு இப்போது புத்தகங்கள் கிடைக்கிறது.

இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக புத்தக கண்காட்சிக்கு மக்கள் விரும்பி வந்து தேவையான புத்தகத்தை வாங்கிச் செல்கிறார்கள். இது ஒரு நல்ல துவக்கம் தான் என்றாலும் இன்னும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அந்த அளவிற்கு முன்னேற வில்லை என்பது எழுத்தாளர்களின் கருத்து.

பல நல்ல நல்ல படைப்பாளி படைப்புகளுக்கு இப்போது இணையதளத்தில் பிடிஎஃப் வசதி வந்து விட்டது. படிப்பது தான் முக்கியம் என்று நினைத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் படிப்பது என்பது ஒரு மிக அருமையான பழக்கம். கையிலிருக்கும் மொபைலில் படிப்பவர்களும் இருக்கிறார்கள், கம்ப்யூட்டரில் படிப்பவர்களும் இருக்கிறார்கள். படிக்கத் துவங்கி விட்டால் அந்த சாகரத்தில் மூழ்கி விட வேண்டியதுதான்.

அது ஒரு இன்பமான சாகரம். அவ்வளவு சீக்கிரம் அதில் இருந்து மீண்டு வர முடியவே முடியாது.12 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad