Bluepadசென்னையை சுற்றி உள்ள பழம்பெரும் ஆலயங்கள்…!
Bluepad

சென்னையை சுற்றி உள்ள பழம்பெரும் ஆலயங்கள்…!

A
Arvind Kumar
22nd Jun, 2020

Shareஎன்னதான் சென்னை மாடன் நகரமாக இருந்தாலும் அது ஆயிரம், இரண்டாயிரம் மூவாயிரம் , ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை தன் அகத்தே கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சில கோவில்களை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.பூவிருந்தவல்லி வைத்தீஸ்வரன் கோவில்:

இந்தக் கோவில் பூந்தமல்லி கவர்மெண்ட் ஹாஸ்பிடல் ஸ்டாப்பில் இருந்து இறங்கி நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. இந்தத் தளமும் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார தலமாக விளங்குகிறது. சென்னையில் உள்ள நவகிரக ஸ்தலங்களில் இந்த ஸ்தலம் தான் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம்.

மிக அருமையான வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோவில் ஏற இறங்க 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என குறிப்பிடுகிறார்கள். மிகவும் சிறிய அளவில் இருக்கும் இந்த கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.இங்கு அரூப ரூபமாகிய செவ்வாய், சிவபெருமான் சன்னதிக்கு முன்னால் காட்சி அளிக்கிறார்.

இந்த கோவிலில், நடராஜர், தையல் நாயகித் தாயார் , மூலவர் வைத்தியநாதர் , முருகர் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களுக்கு உட்பட்ட அனைத்து சன்னதிகளும் இருக்கிறது. கோவிலுக்குள்ளேயே ஒரு பசு மடம் இருக்கிறது இந்த கோவிலுக்கு சென்று வந்தாலே மன அமைதி கிட்டுவதாக பலர் கூறுகிறார்கள். இதில் என்ன விந்தை என்றால் பூந்தமல்லி அருகில் வசிப்பவர்களுக்கு கூட இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்பதே தெரியாது. ஏனென்றால் கோபுரமும் மிக சிரியது கோவிலும் சற்று உள்ளடங்கி இருப்பதால் இந்த சன்னதியில் சேர்ந்தவர்களுக்கு தவிர பிறருக்கு தெரிவதே இல்லை.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர்:

திருவான்மியூர் என்றாலே அனைவருக்கும் பீச் தான் ஞாபகத்துக்கு வரும் ஆனால் திருவான்மியூரில் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த, சிவபெருமான் கோவிலான மருந்தீஸ்வரர் ஸ்தலம் இருக்கிறது. பரபரப்பான நகருக்கு நடுவே அமைந்து இருந்தாலும் மிக அருமையான சூழலை கொண்டிருக்கிறது அந்த கோவில்.

மூலவர் மருந்தீஸ்வரர் அவரை சந்திக்கும் முன்னாலே நாம் திருவாரூர் தியாகராஜர் சந்தித்துவிட்டு செல்லலாம். அம்பாளுக்கு தனி சன்னதி அழகாக அமையப் பெற்றிருக்கிறது. கோவிலுக்கு உள்ளேயே இருக்கும் தலவிருட்சமான வன்னிமரம் மிக அழகாகக் காட்சியளிக்கிறது. வெளியே இருந்து பார்த்தால் மிக சிறிய கோவிலைப் போல தோன்றும் இந்த கோவில் ஒரு நடுத்தர அளவிலான கோவில்.

அழகழகான சிறுசிறு மண்டபங்களும், அதில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும் அமையப்பெற்றிருக்கும் இந்த ஆலயம் மிக அருமையான பலன்களை தரவல்லது என்று கூறுகிறார்கள் பக்தர்கள். கோவிலுக்கு எதிரே ஒரு அருமையான தெப்பக்குளமும் அமைந்து இருக்கிறது.

போரூர் ராமநாதீஸ்வரர் :

போரூரில் அமையப் பெற்ற இந்த ஸ்தலம் மிக அருமையான சிவஸ்தலம் மிகப் பழமையான தலமும் கூட. சிவபெருமான் ராமபிரானுக்கு இந்த வழியாகப் போ என்று வழி காட்டியதால் தான் இந்த ஊருக்கே போரூர் என்ற பெயர் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.

அருமையான சிவன் சன்னதி இருக்கிறது. இந்த ஸ்தலம் ராமேஸ்வரத்தை ஒத்த ஒரு பரிகார ஸ்தலம் என்று கூறுகிறார்கள். ராமேஸ்வரம் போக முடியாதவர்கள் இங்கேயும் பரிகாரம் செய்யலாம் என்றும் கூறி இருக்கிறார்கள். இந்த ஸ்தலம் சென்னையை சேர்ந்த நவகிரக ஸ்தலத்தில் ஒன்று.

இதுபோல் பல ஆலயங்கள் சென்னையை சுற்றியே இருக்கிறது. அதுவும் மிக பழமையான அறைகள் இருக்கிறது. உதாரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி போன்ற விசேஷமான கோவில்கள் சென்னையை சுற்றி எங்கும் நிறைந்திருக்கிறது. நமக்கு நேரம் கிடைக்கும் போது அங்கு சென்று வந்தோம் என்றால் நமது இயந்திர வாழ்வில் இருந்து சற்று நிம்மதி பெறலாம்.

2 

Share


A
Written by
Arvind Kumar

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad