Bluepadபத்தாம் வகுப்பு மதிப்பெண் விஷயத்திலும் பணம் !!
Bluepad

பத்தாம் வகுப்பு மதிப்பெண் விஷயத்திலும் பணம் !!

A
Abhishek J.
22nd Jun, 2020

Share
சம்பாதிக்கிறது தனியார் பள்ளிக்கூடங்கள் :

என்று கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதோ அன்று முதலே பல்வேறு வகையில் நம் பணத்தை சுரண்டி தான் வருகிறார்கள். அதுவும் எப்போது கல்வி பரவலாக தனியார்மயம் ஆக்கப்பட்டதோ அன்று முதல் அவர்கள் கேட்பதை நாம் கொடுப்பதுதான் நிலை என்று ஆகிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் அரசாங்கம் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அறிவு வளர்ச்சி கம்மி என்ற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. அதனால் தானோ என்னவோ கூலி வேலை செய்பவர்கள் முதல் அன்றாடும் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர் வரை எப்பாடுபட்டாவது கடன்பட்டு தனியார் பள்ளியில் சேர்த்து பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள், பாடுபடுகிறார்கள்.

இந்த வருடம் நோய் தொற்றால் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளி போய்விட்டன அதாவது ரத்து செய்யப்பட்டுவிட்டது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று அரசாங்கம் கூறிவிட்டது.இதனால் சிறிது நாட்கள் நிம்மதியில் இருந்த பெற்றவருக்கு இப்போது ஒரு பெரிய தலைவலி ஒன்று உருவாகி இருக்கிறது

ஆம் கல்வியின் பெயரில் குதிரை பேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை அணுகி ஆரம்பித்து வைத்த இந்த குறுக்கு வழி, இப்போது அனைத்து தனியார் பள்ளிகளிலும் தலைதூக்க துவங்கிவிட்டது.

அதாவது இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அரையாண்டு, காலாண்டு பரீட்சை வைத்து 80 சதவீதமும், அட்டனன்ஸ் பொறுத்து பாக்கி 20 சதவீதமும் என்று அரசு அறிவித்துவிட்டது. இதை அருமையாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பள்ளிகள் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப மாணவர்களின் மதிப்பெண்களையும் கிரேடு களையும் நாங்கள் செய்து தருகிறோம் என்று கூறி வருகிறார்கள். இதற்கும் பெற்றோர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால் ( சிறு நகரங்களிலும் ) சிறு நகரங்களில் அதாவது ஈரோடு, மதுரை, புதுக்கோட்டை போன்ற நகரங்களில்தான் இந்த தேர்ச்சிபெற வைப்பதற்கு அதிக பணம் கொடுக்க முயற்சி செய்கிறார்கள்.

அங்கேயே நிலைமை அப்படி என்றால் பெரிய பெரிய நகரங்களில் கேட்கவா வேண்டும்?இப்படி பணம் கொடுத்து அதிக மதிப்பெண் பெறுவதால் என்ன பெரிய பலன் கிடைத்துவிடும். மிஞ்சிப்போனால் பிள்ளைகள் விரும்பும் குரூப்பில் இடம் பிடித்துக் கொடுத்து விடலாம். அப்படி கொடுத்து விட்டால் மட்டும் அந்த குரூப்பில் இருந்து பொதுத்தேர்வில் எப்படி பாஸ் செய்ய வைக்க முடியும்?

பிள்ளையின் வாழ்க்கை முழுக்க பணம் கொடுத்துக் கொண்டே இருக்க முடியுமா? பணம் கொடுத்து பள்ளி, கல்லூரி என்று எல்லாவற்றையும் தேடினாலும், அலுவலகத்திற்கு சென்று உத்தியோகம் அவர்தானே பார்த்தாக வேண்டும்?

எல்லாவற்றுக்கும் பணம் உதவவே உதவாது. இதை பெற்றோர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். தவறு இவர்கள் பெயரில்தான் இருக்கிறது. இவர்கள் கொடுக்க முயற்சி செய்வதால் தான் அவர் ஆசையை கட்டுப்படுத்த முடியாமல் கொடுங்கள் கொடுங்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு அலைகிறார்கள். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே அவர்கள் வசூல் வேட்டை நடத்துவதற்கு பஞ்சமே கிடையாது. கல்வி கட்டணம் வாங்குவார்கள் , டியூஷன் என்று ஒரு கட்டணம் வாங்குவார்கள், அவர்கள் ஆண்டு விழா நடத்துவதற்கு, நம்மை அங்கு கூட்டிச் செல்வதற்கு என்று ஒரு கட்டணம் வாங்குவார்கள், ஆண்டு விழாவில் மாணவர்கள் பயன்படுத்தும் உடைகள், மேக்கப் , என்று அவர்கள் இஷ்டத்திற்கு காசு வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.

இந்த விஷயம் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் ஆகவே அமைந்துவிட்டது. இப்படி குறுக்கு வழியில் மதிப்பெண் வாங்கிய பிள்ளைகளை 11ஆம் வகுப்புக்கு தேர்ச்சி அடைய வைப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பெற்றவர்கள் உணர்வதே இல்லை. அவர்கள் நினைக்கிறார்கள் பிள்ளைகளின் மதிப்பினை அதிகப்படுத்தி அவன் விரும்பும் குரூப்பை வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் என்று. அவனால் அந்த குரூப்பில் தாக்குபிடிக்க முடியுமா என்றெல்லாம் யாரும் யோசிப்பது இல்லை. அவர்களின் கெரவத்திற்காக பிள்ளைகளின் எதிர்காலத்தை சிதைக்கிறார்கள் பெற்றோர்கள்.

இப்படிப்பட்டவர்களின் ஈகோவை தூண்டி விட்டு தனியார் பள்ளிகள் எப்படி உச்சத்துக்கு வளர்ந்து நிற்கிறதோ அதே நிலை தான் இப்போது இந்த மதிப்பெண் விஷயத்திலும் கையாளுகிறார்கள். தேர்வு நடத்த வில்லை ஆனால் காசு கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. இதையெல்லாம் யார் தான் தட்டிக் கேட்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை.

பூனைக்கு யார் மணி கட்டப் போகிறார்கள்?

15 

Share


A
Written by
Abhishek J.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad