Bluepadஆதலினால் காதல்
Bluepad

ஆதலினால் காதல் செய்வீர்

கி.இலட்சுமி
21st Jun, 2020

Share


ஆதலினால் காதல் செய்வீர்... ********************************** நாற்பது வயசை தாண்டியாச்சு...இனிமே என்ன இருக்கு வாழ்க்கையில என அலுத்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் ...இப்பதான் உங்களுக்கு வாழ்க்கை ஆரம்பம்...அட பேச்சுக்கு சொல்லலை...உண்மையத்தான் சொல்றேன்..
மேல்நாட்டில நாற்பது வயசுங்கறது சர்வ சாதாரணம்... இந்தியாவுல நாற்பது வயசுனாலே முதுமையின் ஆரம்பம்னு நினைச்சுடறாங்க.. அதிலும் பெண்கள் தங்களின் வாழ்க்கையே முடிஞ்சுடுச்சுன்னு ஒதுங்க ஆரம்பிச்சுடறாங்க...ஆனா யோசிச்சு பாருங்க.. இதுதான் உங்களுக்கான நேரம்..வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய தருணம்...
குழந்தை வளர்ப்பு ...அலுவலக நெருக்கடி..பிள்ளைங்க கல்யாணம்...மாமியார் கவனிப்பு...அத்தனையும் முடிச்சாச்சு..இனிமே தனிக் குடித்தனத்துல ஜமாய்க்கலாம் நீங்க...பிள்ளைங்க பத்தின கவலையை விடுங்க...அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க..இன்னும் பூனைக்குட்டியா அவங்க உங்களையே சுத்தி சுத்தி வர்றதுக்கு...குடும்ப பொறுப்புகளை அவங்களும் கத்துக்க வாய்ப்பு கொடுங்களேன்...
பிடிச்ச பொழுதுபோக்குல ஈடுபடுங்க..கணவரோட மனம் விட்டுப் பேசுங்க...பிடிச்ச இடங்களுக்கு போங்க...புதுசா எதையாவது கத்துக்குங்க...சின்ன வயசுல நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்த இதுதான் சரியான தருணம்...
சுருக்கமா சொன்னா வாழ்க்கையை காதலிக்க ஆரம்பிக்கணும்...முதுமை நெருங்கிடுச்சுன்னு மூலையில முடங்கி கிடந்து வாழ்க்கைய வெறுக்காதீங்க... இரசிக்க வேண்டியதை இரசிங்க... அளவான உடற்பயிற்சி ...சத்தான உணவுகள்...பிடிச்ச தோழியர் வட்டம்...கோயில்...சுற்றுலா...புத்தக வாசிப்புன்னு.. ஜமாய்ங்க...
புதுசா ஒரு மொழியை கூடக் கத்துக்கலாம்...அளவான ஒப்பனையோட கம்பீரமா நடந்து போங்க...ஒவ்வொரு விடியலும் உங்களுக்காகவே விடிகிறது...கடந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கானது....அதை பிடித்தவருடன் பிடித்தமாதிரி வாழ்ந்து பாருங்க...மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நீங்க மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க... ஐம்பதிலும் வாழ்க்கை இனிக்கட்டும்...மனசு இளமையா இருந்தா அறுபதும் இருபதாகும்...தோழிகளே... ஆதலினால் வாழ்க்கையை காதலிக்கத் தயாராகுங்கள் தோழியரே...

19 

Share


Written by
கி.இலட்சுமி

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad