Bluepadஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களில் பெருகும் விபரீதம்!!
Bluepad

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களில் பெருகும் விபரீதம்!!

A
Ananth A.
21st Jun, 2020

Share



கையில் போன் இருந்தாலே நமக்கு இப்போது நேரம் காலம் போவது தெரியவில்லை. அதுவும் எக்கச்சக்க விளையாட்டுகள் இருக்கிறது போனில் விளையாடுவதற்கு என்று. டைம் பாஸ் ஆகவில்லை என்று கூறுபவர் இப்போது யாருமே இல்லை.

24 மணி நேரம் கூட பத்தாது சிலர் விளையாடி முடிக்கவே! இதிலும் பல விளையாட்டுகளை இலவசமாக விளையாடும் படி இருக்கிறது. ஒரு சில விளையாட்டுகள் பணம் சார்ந்த விளையாட்டுகள் ஆக இருக்கிறது. அந்த பணம் சார்ந்த விளையாட்டுகள் எல்லாம் இப்போது எக்கச்சக்க பிரச்சனை வருகிறது.

எம் பி எல், டீம் லெவன் போன்ற விளையாட்டுகளில் நாம் ஒரு அணியை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தது சரியாக வந்து விட்டால் அதற்கு நாம் கட்டிய பெட்டிங் பணத்தை விட சற்று அதிகமாக பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதில் பணங்களை இழப்பதற்கும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

இதுபோல இப்போது ஆன்லைனில் சீட்டாட்டம் வகையான ரம்மி, மங்காத்தா போன்ற விளையாட்டுகள் பெருகி வருகிறது. அதில் பணம் கட்டி தோற்பவர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு கூட செல்கிறார்கள்.

அரசாங்கம், சூதாட்டம் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை உழைத்து சம்பாதித்த பணம் அனாமத்தா போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் ஒழித்தது. ஆனால் அதை ஒழிக்க முடிந்த அரசாங்கத்தால் இந்த ஆன்லைன் கேம் களை ஒழிக்க முடியாதா.. இதற்கு யாராவது குரல் கொடுத்தே தீரவேண்டும் என்று பொங்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

உண்மைதான் இப்போது எல்லாரிடமும் போன் வந்துவிட்டது. இன்டர்நெட்டும் அனாவசியமாக கிடக்கிறது. விளையாடுவதற்கு என்று ரயில் அடிகளில் , வைஃபை கிடைக்கும் இடங்களில் குவிந்து கிடப்பவர்கள் இப்போது ஏராளமாகி விட்டார்கள். ஜியோ சிம் வந்தவுடன் தடையற்ற டேட்டாக்கள் கிடைக்க தொடங்கிவிட்டதால் பஞ்சமே இல்லாமல் விளையாடி வருகிறார்கள்.

இதில் என்ன பெரிய துரதிஷ்டம் என்றால் பலர் பணத்தை சிறுக சிறுக இழந்துவிடுகிறார்கள். பணத்தை ஒருவர் இழந்து விட்டால் அது எப்படியாவது மீண்டும் பிடிக்க வேண்டும் என்கின்ற ஒரு பெரிய வெறி ஏற்படும்.

அல்லது ஒரு முறை குறைந்த அளவு பணத்தை சம்பாதித்து விட ஆகா இதில் பணம் கிடைக்கிறது என்ற ஆசை வரும். இதைப் பயன்படுத்திக் கொண்டு தான் அவர்கள் நம்மை வைத்து செய்துவிடுகிறார்கள்.

அதிலும் இந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள் தான் இதில் எக்கச்சக்கமாக பணத்தை எடுக்கிறார்கள். வெறும் பத்தாம் வகுப்பு மாணவன் இதுபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி எட்டு லட்ச ரூபாய்க்கு கடனாளியாக இருக்கிறார்.

அவர் அப்பாவிற்கு தெரியாமலேயே அவர் வங்கி கணக்கில் இருந்து மூன்று லட்ச ரூபாய் பணத்தை எடுத்து விளையாடி இருக்கிறான் !! மீதம் ஐந்து லட்ச ரூபாயை தெரிந்தவர்கள் சொந்தக்காரர்களும் பொய் சொல்லி கடனாகப் பெற்று விளையாடி தோற்று இருக்கிறான் ...

இந்த விளையாட்டின் விபரீதத்தை பாருங்கள்.ஒரு சாதாரண பள்ளிக்கூட மாணவனுக்கு இந்த விளையாட்டின் மீது எவ்வளவு பெரிய வெறி இருந்தால் , வளர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மீது அதிகம் நம்பிக்கை இருப்பவர்களுக்கு, பேராசை உள்ளவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்...!

யாராவது நம் சும்மா உட்கார்ந்து இருக்கும் போது பணம் கொடுப்பார்களா என்ன?
அப்படி யாருமே கொடுக்க மாட்டார்கள் கொடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதை நாம் புரிந்து கொள்ளாத வரை இத்தகைய விளையாட்டுக்களில் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகும்... அதில் நஷ்டம் அடைவோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே தான் போகும்.

இதற்கு சட்டங்களை சற்று கடினமாகுக்வதை தவிர வேறு வழியில்லை. விளையாடுவது அவர்கள் விருப்பம் தான் என்றாலும் அதன் பின்னணியில் இருக்கும் இந்த கொடுமையான விஷயத்தை நாம் தட்டிக் கேட்காமல் இருக்க முடியாது.

8 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad