Bluepadசர்வதேச தந்தையர் தினம் - ஜூன் மாதம் 21ஆம் தேதி.
Bluepad

சர்வதேச தந்தையர் தினம் - ஜூன் மாதம் 21ஆம் தேதி.

A
Ananth A.
30th Nov, 2021

Share

அப்பா என்பது ஒரு உன்னதமான உறவு அதுவும் அப்பா _ பெண் என்றால் அது இந்த உலகிற்கும் கூட ஈடு இணையே இல்லை ஏனென்றால் அப்பா படும் கஷ்டத்தை பிள்ளைகளை விட பெண்களே அதிகம் அறிந்து இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.
அப்பாக்களும் ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கும் சலுகைகளை விட பெண் பிள்ளைகளுக்கு அதிகம் சலுகைகளை காட்டுவார்கள் மிக கம்மியாக கோவத்தை காட்டுவதும் பெண்கள் இடத்தில்தான்.

ஏனென்றால் என்றைக்காக இருந்தாலும் பெண் குழந்தைகள் இன்னொரு வீட்டில் போய் வாழ வேண்டும் என்பதே ( அந்த பச்சாதாபம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் ) ஆனால் அப்பாக்களின் பார்வைகளில் பெண்கள் என்றுமே இளவரசிகள் தான்.

இந்த உலகம் அம்மாக்களின் அன்பை ஆகா ஓகோ என்று பாராட்டும் அளவிற்கு அப்பாவின் அன்பையும் பாசத்தையும் பாராட்டுவது இல்லை என்பதுதான் உண்மை.

உள்ளபடி சொல்ல போனால் அப்பாவின் அன்பிற்கு அம்மாவின் அன்பிற்க்கும் எந்தவித பாகுபாடும் இல்லை. அம்மாவின் அன்பு மிக நேர்மையாக இருக்கும் அதே நேரத்தில் மிக வெளிப்படையாக தெரியும் அப்பாவின் அன்பு சற்று இலை மறை காய் மறையாக தான் வெளிப்படும்.

அதற்காக அப்பாக்களுக்கு அன்பை இல்லை என்று கூறிவிடமுடியாது வண்டியின் இருசக்கரம் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் தான் வாழவேண்டும் அம்மாக்கள் அன்பாக இருக்கும் நேரத்தில் அப்பாக்கள் சிறிதேனும் கண்டுப்பு காட்டாவிட்டால் குடும்பம் என்றும் வண்டி சீரான பாதையில் செல்லாது இதன் காரணமாகவே பொதுவாக அப்பாக்கள் சற்று கண்டிப்புடன் தான் இருப்பார்கள்.

ஆனால் அப்படி கண்டிப்பான அப்பாக்களுக்கு டிமிக்கி கொடுத்து விடும் காலம் தான் இது. தாய் ஒரு குழந்தையை பத்து மாதம் கருவில் சுமந்து வாழ்நாள் முழுவதும் நின்று சுமக்கிறார் தந்தை என்பவர் குழந்தை கருவுற்ற காலம் முதலே தனது மனதிலும் மூளையிலும் சுமக்கிறார் அந்த பாரத்தை இறக்கி வைப்பது கிடையாது.

ஒரு திருமணமான ஆண் தன் வாழ்நாள் முழுவதும் ஓடிக் கொண்டிருப்பது தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தான் அப்பாக்களின் தியாகங்கள் எப்போது தெரிகிறதென்றால் அப்பாக்களை விட்டு பிள்ளைகள் சற்று தூரம் வரும்போதுதான் , வேலை நிமித்தமாக வெளியூர்களில் இருக்கும் போது தான் அப்பா படும் கஷ்டம் நன்றாக புரிகிறது கையில் கொஞ்சம் சம்பாதித்த காசு வரும் போதுதான் அப்பாக்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள் என்று புரிகிறது.

அப்பா சம்பாதித்து நாம் செய்யும் செலவுகள் நம் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்குகூட செய்ய முடியவில்லையே என்று நினைக்கும் தருணத்தில் தான் அப்பாக்கள் எந்த அளவு நமக்காக செய்திருக்கிறார்கள் என்ற அருமை புரிகிறது.

ஆனால் இது எல்லாம் புரியும் நேரத்தில் அப்பாக்கள் நம்மை விட்டு சற்று தள்ளி தான் இருக்கிறார்கள். குடும்பம் என்பது ஒரு சுகமான சுமைதான் ஆனால் அந்த அப்பாக்கள் மட்டும் அப்படி சுகமான சுமையாக நினைக்கவில்லை என்றால் குடும்பமே தடம்புரண்டு விடுகிறது. அப்பாக்களின் பாசம் கடலையும் கடந்தது அதை எழுதுவதற்கு காப்பியங்கள் கூட பத்தாது.

அப்பாக்கள் என்றால் பெண்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது மட்டும்தான் என்று இல்லை. இந்த காலகட்டத்தில் இரு பிள்ளை பிறந்தாலும் கூட அந்தப் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க, அவர்கள் கெட்டுப்போகாமல் இருக்க, அவர்களின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் நிலைத்து நிற்க, அப்பாக்கள் படும் கஷ்டங்கள் ஏராளம்.

பிள்ளைகள் ஓரளவிற்காவது நிலைத்து இருக்கும் வரை அப்பாக்களின் கவலைகள் தீராது ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாக சொல்லவும் மாட்டார்கள் தமக்குள்ளேயே போட்டி பூட்டிக்கொண்டு அல்லல் படுவார்கள்.

அப்பா என்ற வார்த்தை வெறும் வார்த்தை மட்டுமல்ல அது ஒரு உலகளாவிய ஒரு உணர்வு. நீ என்ன பெரிய அப்பாடக்கரா என்று கேட்கும் இன்றைய தலைமுறையினருக்கு அப்பாக்கள் படும் கஷ்டம் அறவே புரிவதில்லை ஆனால் அது அப்படியே இருக்காது....

கண்டிப்பாக ஒரு நாள் அப்பாவின் அருமை புரியும் , அதன்பிறகுதான் வாழ்வின் அடுத்த கட்ட இலக்குகள் விரியும். எல்லா குழந்தைகளும் அப்படி குறை கூறி விட முடியாது இன்றைய காலகட்டத்தில் அப்பாக்களை கஷ்டப்படுத்தாமல் இருக்க எத்தனையோ பெண் குழந்தைகளும் , ஆண் குழந்தைகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் உடைத்து அப்பாக்கள் உட்கார மறுப்பது என்பது இயல்புதான்.

ஒரு பக்கத்தில் அப்பாவின் மீது அதிக பாசம் பொழியும் பிள்ளைகள் இன்னொரு பக்கம் வயதான அப்பாக்களை கழித்துக்கட்ட நினைக்கும் பிள்ளைகள் எத்தனையோ பெரியவர்கள் முதியோர் இல்லத்தில் கூறும் கதைகளைக் கேட்கும்போது கண்ணில் ரத்தம் தான் வருகிறது இப்படி பார்த்து பார்த்து வளர்த்த அப்பாவை கடைசி நேரத்தில் போப்பா என்று அனுப்பி விடுகிறார்கள் இதெல்லாம் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை...


0 

Share


A
Written by
Ananth A.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad