Bluepadசீன பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?
Bluepad

சீன பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?

S
Senthil Rajan
20th Jun, 2020

Share

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சினைகள் இப்போது வலுத்து வருகிறது. என்னேரமும் போர் மூலும் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.




இந்த நேரத்தில் சீனப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்கின்ற குரல் மிகப்பெரிய அளவில் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரு சிலர், ஒன்று கூடி சீன தயாரிப்பான ரெட்மி, சியோமி மொபைல் மட்டும் டீவியை போட்டு உடைத்தார்கள்.

அதுபோல டிவி தொலைக்காட்சி மற்றும் அனைத்து சேனல்களிலும் பேன் சைனா, சைனா பொருட்களை தடை செய் போன்ற விஷயங்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இது எந்த அளவிற்கு சாத்தியம்?

"பி இந்தியன் பை இந்தியன்" என்னும் குரல் 1960 களிலேயே ஒலிக்கத் துவங்கி விட்டது. ஆனால் அதை கேட்பவர்கள் தான் இங்கு யாருமே இல்லை. இந்தியாவின் தயாரிப்புகள் என்றாலே ஒரு ஏளனம், இளக்காரம் இதே வெளிநாட்டு தயாரிப்புகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் தன்மை நிலவி வருகிறது.

வெளிநாட்டு தயாரிப்புகள், இந்தியா தயாரிப்பு போல தரமற்றதாக இருக்காது என்கின்ற எண்ணமும் இதற்கு காரணமாக அமைந்து விட்டது. சில இந்திய நிறுவனங்கள் தரத்தைப் பற்றி பெரிதும் கவலைப் படுவதில்லை. இதனாலேயே வெளிநாட்டு பொருட்கள் ஏற்றம் கண்டு விட்டன.

இப்போது சைனா நமக்கு பரம விரோதி ஆகிவிட்டதால் அவர்கள் பொருட்களை போட்டு உடைப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அந்த பொருட்களை நாம் முன்னரே காசு கொடுத்து வாங்கிவிட்டோம். நமது நாட்டுக்கு இறக்குமதி ஆகிவிட்டது. இதற்கு மேல் இதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. அவர்களின் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம் என்றால் அது மிகச் சரியாக இருக்கும்.

அதுபோல சைனா தயாரிப்புக்கான ஆப்புகள் மொபைல்போனில் எக்கச்சக்கமாக இருக்கிறது. பப்ஜி , டிக் டாக் போன்ற எண்ணற்ற ( கிட்டத்தட்ட 35 ஆப்புகள் ) சீனா தயாரிப்பு தான் நம்ம மொபைலில் இருக்கிறது... அதை முதலில் டெலிட் செய்தோம் என்றால் மிக சிறப்பானதாக இருக்கும். இதை விட்டுவிட்டு ஏற்கனவே நாம் வாங்கிவிட்ட பொருட்களை சேதப்படுத்துவதால் எந்த நஷ்டமும் அவர்களுக்கு ஏற்படப்போவதில்லை.

அதோடு ஒரு மிகப்பெரிய விஷயம், எந்த பொருட்கள் எந்த நாட்டில் இருந்து வருகிறது என்று மக்களுக்கு இப்போது தெரியாது. இந்த பொருள் நன்றாக இருக்கிறது இதை பயன்படுத்துவோம் அவ்வளவுதான் அந்த மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது ஒரு மிகப்பெரிய கடமை.

இதைத் தவிர ஒரு மிக எளிமையான வழி ஒன்று இருக்கிறது அரசாங்கமே சைனா பொருட்களின் இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் தடை செய்துவிட்டால் இன்னும் வேலை சுலபமாகிவிடும். அவர்கள் அனுமதித்தால் தானே வியாபாரம் செய்ய முடியும் அவர்கள் வியாபாரம் படுத்தவில்லை என்றால் சைனா பொருட்களை எப்படி நுகர போகிறோம்?

இந்தியா சைனா நாடுகளுக்கான உறவுகள் கடந்த சில வருடங்களாகவே சரியில்லை தான்.அதற்காக சமாதான முயற்சியாகத்தான் அந்த நாட்டு அதிபரை இங்கு மகாபலிபுரம் அழைத்து வந்தார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது. அது இப்போது உண்மையாகி இருக்கிறது.

மனமிருந்தால் மார்க்கமுண்டு. நமது நாட்டிலேயே பொருட்களை தயாரிக்க முடிவு செய்தோம் என்றால் நமது நாட்டின் உள்கட்டமைப்பு மிக அதிகமாக வளம்பெறும். நமது பொருளாதாரமும் விரைவில் வலுப்பெறும். சுயசார்பு பொருளாதாரம் என்று வாய்கிழிய பேசினால் மட்டும் போதாது அதற்கான செயல் வடிவம் நாம் தான் கொடுக்க வேண்டும்.


14 

Share


S
Written by
Senthil Rajan

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad