Bluepadமழலை தெய்வம்!
Bluepad

மழலை தெய்வம்!

மணிவண்ணன்.சீனி.
20th Jun, 2020

Share

மழலையாய் வந்த
கடவுள் கொடையே!
கடவுள் வடிவில்
வந்த குழந்தையே!
அன்பே கடவுள்!
அருளே குழந்தை!
ஆசை முத்தம்
அன்பொடு கொஞ்சல்
பாசத் தழுவல்
அடைக்கலம் ஆகிடும்!
ஆட்டமும் பாட்டமும்
களிக்கும் மழலை!
மயக்குறு மழலை
மாண்பினை என்சொல!
பொக்கைச் சிரிப்பினில்
சொர்க்கம் தெரியுது!
மழலை மொழியே
குழலும் யாழும்!
குழந்தை வடிவில்
வந்த செல்வமே!
கடவுள் காட்சி
உன்னில் கண்டேன்!


19 

Share


Written by
மணிவண்ணன்.சீனி.

Comments

SignIn to post a comment

Recommended blogs for you

Bluepad